Skip to main content

Posts

Showing posts from February, 2008

ஏகாதிபத்தியவாதிகள் யாருடைய நண்பர்கள்...

அன்னிய தேசங்கள் ஆதரிக்கும் கொசோவோ மற்றும் அன்னிய நலன்காக்கும் தமிழ்த் தலைமைகள். "Today it might launch a new round of fragmentation in the region because if Kosovo can claim independence, why not western Macedonia, or Republic Srpska, or Herzegovina-Bosnia or Abkhazia, Ossetia? All around the world there are about 3,600 communities that are, all are I'm sure, this afternoon watching what is going to happen because it might set a precedent for similar movements all around," Predrag Simić, Serbia’s Ambassador to France said. இன்று கொசோவா தனி நாடாகப் பிரகடனஞ் செய்துள்ளது! இது, அதன் பதினேழு ஆண்டுகளான யுத்தத்தால் நிகழ்ந்த பெறு பேறா? அதன் மக்களால் நடாத்தப்பட்ட புரட்சிகரமான பணியினால் செர்பிய இனவாத அரசு முறியடிக்கப்பட்டு,வெற்றிகொள்ளப்பட்டதன் பின்பான பிரகடனமா? தமது மக்களின் அனைத்துரிமைகளையும் உள்ளடக்கியவொரு விடுதலைகொண்ட கொசோவோவா இந்தப் புதிய தேசம்? இவை நமக்குள் எழும் கேள்விகள்! இன்றைய(17.02.2008) தினக்குரலில் திரு.கோகர்ணன் என்ற புனை பெயர்கொண்ட (அறியப்பட்ட )பேராதனைப் பல்கலைக்கழகப்...

தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும்?

சுகுணாத் திவாகர்:"தாலி என்னும் சனியனை"க் கட்டித்தானாக வேண்டும்! "புதியகலாச்சாரத் தோழர்கள் தம்மையே முன்னுதாரணமாக்கிப் போராடுவதைப் பாருங்கள். தோழர் துரை சண்முகத்தின் மணவிழா எப்படி நிகழ்ந்தது? சொல்வதைப் போல் வாழக்கற்றுக்கொள்வது அவசியம்! எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளியை வைத்தபடி "ஊருக்குத்தான் உபதேசம் நோக்கில்லேடி"என்பதுதாம் கொடுமை:பொய் வாழ்வு! வாழ்வில் உண்மையாய் வாழ முதலில் போராடுங்கள்! உண்மை நீங்கின் உயிர் நீக்கும் நெஞ்சுரம் வேண்டும்! இவர்களே சமூவிடுதலைப் போராளிகள்-புரட்சியாளர்கள்!மற்றவர்கள் போலிகள்!" //மேலும் இன்னொரு வருத்ததுக்குரிய அம்சம், தவிர்க்கமுடியாமல் தாலி என்னும் சனியனைக் கட்டித்தானாக வேண்டும். (போகிற இடமெல்லாம் புருசனைக் காப்பாற்ற தாலி என்ன கோல்கேட்ஜெல் பாதுகாப்புவளையமா? என்று எவ்வளவு கேலி பேசியிருப்பேன்). //- சுகுணாத் திவாகர். இ ங்கேதாம் எல்லோரும்(போலிப் புரட்சிக் காரர்கள்,பெரியாரீஸ்டுக்கள்,முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்) மிகமிகத் தப்பான முறையில் சமூகப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.தத்தமது விருப்புக்கு ஏற்ற தரணங்களை உருவாக்கியபடி ம...

அங்கேயும் கருப்பு நாசிகள்...

அங்கேயும் கருப்பு நாசிகள், இங்கேயும் வெள்ளை நாசிகள், நாம் போகும் இடம் இனி எங்கே? இன்றைய ஜேர்மனி குறித்து நிறையச் சொல்லியாகவேண்டும்.எனினும்,இத் தேசத்தைப் பற்றிய பழைய புரிதலில் அதன் மக்கள் விரோத அரசியலானது ஜேர்மனிய ஆளும் வர்க்கமான பெரும் தொழிலகங்களுக்குச் சொந்தக்காரர்களான குடும்பங்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவே இயங்கி வந்திருக்கிறதை நாம் இரண்டு பெரும் உலக மகா யுத்தத்தின் மூலமாகச் சிந்தித்தும்,வரலாற்று ஆய்வாளர்களின் அறிக்கைகளிலிருந்தும் அறியக்கூடியதாகவே இருக்கிறது.மூலதனத்தின் அதீத திரட்சியானது மனித சமுதாயத்தில் சிறுபகுதியை மிகவுஞ் செல்வத்தில் கொழிக்கவும், பெரும்பான்மை மக்களை வறுமையிலுமாக விட்டுவிடுகிறது.இதை கண்முன்னே காணவிரும்பின் நம் இந்தியாவைக் கண்முன்னே நிறுத்துவோமானால் அதன் கோரமுகம் நம்மை அண்மித்து வருவதை இனம்காணமுடியும். பசி,பட்டுணி-நோய்,நொடி,ஒட்டிய வயிறும் ஒளியிழந்த விழிகளும் வானத்தை விழிக்கத் தெருவோரம் படுத்துறங்கும் மனிதர்கள்.அத்தகைய மனிதர்களை மேட்டுக் குடிகளின் கார்களே மோதிக் கொன்றுவிடும் ஒரு நொடியுமாகவும்,பழைய பத்திரிகைகளை வீதியில் பொறுக்கி விற்று வயிறு நிறைக்கும் சின்னஞ்சிறு பா...

அக்கா வாங்கி வாங்கித் தந்திடச் சுக்கா மிளகா சுதந்திரங் கிளியே?

எமக்குள்ளேதாம் எமது எதிரிகள்:சமஷ்டி,ஜனநாயக-தேசிய விடுதலை வாதங்களுடன்! // எருதின் முதுகில் உட்கார்ந்து கொண்டுள்ள ஈ, எருது போக வேண்டிய திசையைச் சொல்லுகிற மாதிரி, நமது தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு சிலர் இந்தியா தனது பிராந்திய நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நண்பனாக உள்ள இலங்கை அரசாங்கத்தை இந்தியா பகைத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்// அன்பு வாசகர்களே,வழமைபோலவே இது மறுபக்கக் கட்டுரை குறித்த பார்வைதான்.எனினும், இக்கட்டுரையில் சில முக்கியமான கருத்துக்களை அக்கட்டுரையாளர் முன்வைக்கிறார்.நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதம...