Skip to main content

Posts

Showing posts from October, 2026

திலீபனின் சிலை அரசியல் குறித்துச் சமூக ஊடகங்களில் வரும் Pro /Contra உரையாடல்கள்

  திலீபனின் சிலை அரசியலும் , ஈழத் தமிழர்களின் உரிமை மறுப்பும், சமரழகி வரையுமான உடல் அரசியல்  : மனிதத்  துயரமும் மனித உடலும் விற்பனைப் பொருளாகும் போது — சமூக ஊடகங்களின் பணப் பொருளாதாரமும் தமிழ்ச் சமூகத்தின் புதிய நெருக்கடியும் —ப.வி.ஶ்ரீரங்கன் மனிதன் ஒருகாலத்தில் தனது குரலை வெளிப்படுத்துவதற்காக ஊடகங்களை உருவாக்கினான். பின்னர் அந்த ஊடகங்கள் செய்தியை விற்றன. அதற்குப் பின்னர் மனிதனின் கவனத்தையே விற்கத் தொடங்கின. இன்று சமூக ஊடகங்களின் உலகில் இன்னும் ஒரு படி முன்னேறிவிட்டோம்: மனிதனின் உணர்ச்சியும், கோபமும், துயரமும், உடலும், தனியுரிமையும் — அனைத்துமே பணமாக்கக்கூடிய பொருட்களாக மாற்றப்படுகின்றன. இதுவே நமது காலத்தின் மிகப் பெரிய சமூக முரண்பாடுகளில் ஒன்றாகும். முகநூல் , இன்ஸ்டாகிராம் , ரிக்ரொக்(Facebook, Instagram, TikTok)    போன்ற தளங்கள் வெறுமனே தொடர்பாடல் கருவிகள் அல்ல. அவை மிகப்பெரிய கவனச் சந்தைகள். யார் அதிக நேரம் மக்களின் கண்களைத் தம்மிடம் வைத்திருக்கிறார்களோ, யார் அதிகமான எதிர்வினைகளை உருவாக்குகிறார்களோ, யாருடைய உள்ளடக்கம் அதிகமாகப் பகிரப்படுகிறது என்பதெல்லாம்...