Skip to main content

Posts

Showing posts with the label புலிகள் பினாமி

இந்தியாவுக்கும்,வீன் பல்கலைக் கழகத்துக்கும் ...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலகம்: சாத்திரியும்,பங்கு பிரிப்பும் படுகொலையும்! "ஆயுதப் போர் நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும் ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர் தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன் பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில் சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான் பதில் சொல்லும். "-சாத்திரி   http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html இ ந்த 2013 ஆம் ஆண்டானது தமிழ்பேசு...

இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்

இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும். //சிறிரங்கனுக்கு பகிரங்க மடல்... ............................. Sri Rangan Vijayaratnam க்கு 'கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை! மட்டுப்படுத்தப்பட்ட விபரம்... * இந்த வங்கி 'மனேசர்' சுட்டுக் கொல்லப்பட்டார்... ** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது... *** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது... *** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை... 'இனியொரு' , 'சிறீரங்கன்' போன்றவர்களால், ஏதோ 'பில்டா விடுபவர்கள்' சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா???-குமார் Ceylon Illaikai : ஐயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தமிழீழக்கட்சியிடம் கொடுக்கப்பட்டது. இப்போ வசதிக்காக அனேக முற்...

நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?

"புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப் புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும், மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச் சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள் முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின் சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு." நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும். பகுதி:3 -(இப்போதைக்கு இறுதிப் பகுதி இஃது.) >>>அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது இ ப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.புலிகள் போராடி...

ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும். பகுதி:(2) ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம். அன்பு வாசகர்களே,விட்டால் இரயாகரன் கோஷ்டி எல்லோர் காதிலையும் புரட்சிப் பூ வைத்துவிடுவார்கள்.இப்போது, எனக்கு வேலை தொடங்கிவிட்டது.அவரைப்போல் முழுநேரத் தொழிலாகப் புலிப்பரப்புரை செய்வதல்ல எனது வேலை.எனவே,அப்பப்ப(உடனுக்குடன்)பதிலளிக்க முடியாது.நான் ஒரு எழுத்தைக்கூட விரயமாக்க முடியாது.இதுதான் எனது நிலை. எனவே,நேரடியாக விஷயத்துக்குள் போவோம்: தமது, புலி முகமூடி கிழியும் தருணங்களில் இவர்கள் விவாதம் என்று வரும்போது, "தத்துவார்த்த விவாதத் தொடரென"ப் புரட்டுவார்கள்.ஆனால்,இவர்களது தத்துவம் மிகவிரைவில் ஊத்திக்கொண்டுபோய்விடும். தத்துவம் என்பது நாலு புருடாக் கேள்வியைச் சுற்றிப் புனைவதில்லை! இவர்கள்,எல்லோரையும் குதறும்போது-மற்றவர்கள் மௌனமாக இருக்கும்போது, தமது தரப்புக்கான தளம் உறுதிப்பட்டதாகவெண்ணிக்கொள்கிறார்கள்.இஃது, அவர்களது கள்ளத்தனமான செயலுக்கு மேலும் தங்குதடையின்றி வலுச் சேர்க்கிறது.எனினும் இவர்களை, இப்படியேவிட்டால்,தாம் காட்டுவது-கட்டுவதே புரட்சியெனப் பம்மாத்துப்பண்ண...

புலிகளது இறுதிவரையான சாவு அரசியலூடாக...

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும். பகுதி:(1) த மிழ் மக்களைச் சுற்றிய புலித் (வி)தேசியவாதம் அரசியலற்றரசியல்(இது,அந்நியச் சக்திகளுக்கு அடியாளாக இருந்து விடுதலையைக் காட்டிக்கொடுப்பது) மாபியாத்தனமான கெடுபிடிகளுக்கு மத்தியில், தனது ஈவிரக்கமற்ற கொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா, என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன. இங்கே, மக்களைக் காயடித்த புலி அரிசியல் மாபியாத் தனத்தை மேலும் தேசியவாதச் சாயம் பூசித் தமிழ் பேசும் மக்களை மேலும் ஓட்டச் சுரண்டுவதற்குப் புலிக்கு முண்டுகொடுக்கும் அவர்களது பினாமிகள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துப் புலிகளது மக்கள் வி...

ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவனை முட்டாளாக்கலாம்...

"புலிகள் இன்று துரோகஞ் செய்தால்,என்ன நடக்கும்?" இ ந்தக் கேள்வியை,அரசியல் கேள்வி என்பதைவிட -இஃது,குறித்துச் சமுதாயமட்டத்தில் அதன் உளவியலோடு பொருத்தினால்-அஃது, தர்க்கத்துக்கு இடமளிக்கிறது!காகம் கருப்புத்தாம்,ஆனால்,கருப்பெல்லாம் காகமாகுமா?அப்படித்தாம் இக் கேள்வியும் பொத்தென்று மண்ணில் வீழ்ந்து நொருங்குகிறது! "புலிகள் இன்று துரோகஞ் செய்தால்..."எனும்போது, அவர்கள் ஏலவே துரோகமிழைக்காத,மக்கள் விடுதலைப்படையெனக் கணிப்பிடப்படுகிறது.அங்ஙனம் இன்றி அவர்கள் ஏலவே துரோகத்தனமான எதிர்ப் புரட்சிப்பாத்திரத்தோடு போராட்டத்தைக் கைப்பற்றி, மக்களுக்கு எதிரிகளாக மாறினால்-மாறியிருந்தால் புதிதாகவொரு துரோகஞ் செய்ய வேண்டுமென்பதில்லை! அடுத்து-துரோகம் என்று காது குத்தும்போது, புலிகளிடம் ஒரு இலட்சியம் இருப்பதாக உணரப்படுகிறது.அஃது,தமிழீழம் என்றாகவும் மாறுகிறது.எனவே,இலங்கையில் தமிழீழம் சாத்தியமெனப் புரட்சிகரச் சக்திகள் குறிப்பதாக நாம் கொண்டோமேயானால்,உலக அரசியல்போக்குகளிலும் அதன் உள்ளார்ந்த பொருளாதார நலன்களிலும் இலங்கையில் தனிநாடு சாத்தியமாவெனுங்கேள்வி அடுத்தாக எழுகிறது.புரட்சிகரச் சக்திகள் இலங்கையில் ...

"துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள்..."- இரயாகரன்.

"யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும் வாய்மையின் நல்ல பிற."- குறள்:300. " துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகள் ..."- இரயாகரன். அப்போ, எது துரோகம் எனும் கேள்வி அசியமாகிறது. "எது துரோகம்" எனும் இக்கேள்வி குறித்து நீண்ட ஆய்வு அவசியமாகிறதா? அதையும் நாம் செய்யத் தயாராகவே இருக்கின்றோம். புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப் பரப்புரை எனக்கு அவசியமில்லை! எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாக நாம் குறித்துரைத்துள்ளோம். ஈழப்போராட்டம் என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,இதுவரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,இராயாகரன் அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றாரா? புலிகள் தமிழ் மக்களது குழந்தைகளைப் களப்பலிகொடுத்துத் தலைவரைக் காப்பது தியாகமென உரைக்க, இரயா எமக்குத் தேவையில்லை! அதைப் புலிகளே சொல்லப் போதும். அவர்களது ஊடகங்களே சொல்லப்போதும். எனினும்,இலங்கை தழுவிய புதியஜனநாயகப் புரட்சிபேச...