அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்! 2009 -இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும். அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம், ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு, இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல் இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது. அந்த நலன...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்