தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு! "தேசியம்,தேச இறைமையோடு தொடர்புடையது.இது திடமான முடிந்த முடிவுகளோடு இயங்காது காலவர்தமானத்திற்கேற்றவாறு மாறுபடும்.இத்தகைய நிலைமைகளில் அதன் பாத்திரம் முற்போக்காகவும்,பிற்போக்காகவும் இருக்கிறது.தேசிய இறைமையின்றிப் பரந்துபட்ட மக்கள் வாழ்வையும்,அவர்களது பண்பாட்டுக் கருவ+லங்களையும் காப்பாற்ற முடியாது.இது ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் அதன் பொருண்மிய வாழ்வுக்கும் ஒரு சவாலாகும்.இதைப் புரட்சிகர அரசியலால் மட்டுமே எட்ட முடியும்.இது மட்டுமே தேசியத்தை முற்போக்காகக் கட்டமைக்கும்.மற்றெல்லாச் சூத்திரங்களும் மக்களைக் காவு கொள்ளும் குறுந் தேசிய வெறியாக மாறியே தீரும்!" திரு.இராம.கி அவர்கள்தம் கட்டுரை ஒருபக்க உண்மையைப் பேசுகிறது. தாய் மொழிக் கல்வியின் அவசியமும்.அதுசார்ந்து கற்றலும் மிக மிக அவசியமானதுதாம்.ஒரு குழந்தையின் நினைவிலி மனதானது தாய்மொழியின் கற்கை நெறிகளுக்கமைய தீரத்துடன் கிரகிக்கும் ஆற்றலைப் பெறுவதை நாம் அறிவதற்கு எந்த வெளியுலகப் பண்டிதர்களையும் தேடி அலையத் தேவையில்லை.இதையறிவதற்கு நமது முன்னோர்களின் செழுமைமிக்கப் படைப்புகளையும்,இன்றைய நம...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்