Skip to main content

Posts

Showing posts from February, 2021

P2P : பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை

  முள்ளிவாய்கால்—2009’ க்கும் ; “பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டிவரை ” க்குமான எந்த அரசியற் போராட்டமானாலும் அவை, மக்களை அழித்தன; அழிக்கும்!  ~ சிறுகுறிப்பும், நினைவூட்டலும் ~   ( -  ப.வி.ஶ்ரீரங்கன்  - )   இனங்களுக்கிடையிலான   பகை   முரண்பாடாகப்   பொருளாதார வளர்ச்சிகளின்   வாயிலான   பங்குச்   சண்டைகள்   வருகின்றன .  பங்குகள்   பொருளாதாரப்   போட்டிகளோடும் ,  அத்தகைய பொருளாதாரத்தால்   நிலைபெறும்   அரசியல்   அதிகாரத்துக்கான போட்டிகள்   இனங்களுக்கிடையில்   முட்டிமோதும்போது இலங்கையில்   இனமுரண்பாடாக   இவை   எட்டின .   இதன்  , அகரீதியான   தாக்கமானது   இலங்கை   மக்களது மனங்களின்   இனப்பகையாகக்   காலாகாலம்   வளர்ந்திருக்கும் படியாக   இலங்கையின்   பொருளாதார   முரண்பாடுகள்   இருத்தி வைக்கப்பட்டன .   இதன்   அறுவடையாகக்   கடந்த  30  ஆண்டுகால   ஆயுதப் போராட்டத்தைச்   சந்தித்த   இலங...