Skip to main content

Posts

Showing posts from October, 2006

ஓடும் போர்க் குதிரைகள்!

ஓடும் போர்க் குதிரைகள்! போர்க் குதிரைகள் தாறுமாறாக ஓடுகின்றன. குதிரைகளின் கால்களில் அழகான இலாடன்கள் அடிக்கப்பட்டும் அவைகளில் "பேச்சு வார்த்தை-சமாதானம்"என்றும் அழகாகப் பொறிக்கப்பட்டும் தேவையேற்படின் மூன்றாம் தரப்பின் அனுசாரணையோடு கட்டுக்கு வருமென்றும்"அரசியல் சாஸ்த்திரிகள்" மீளவும் கூறுகிறார்கள்! முன்பும் இதே கதையாய்... மக்களும் நம்பிக் கொண்டு நடுகாட்டில் வெட்டிய மரத்தடிகளில் மறைப்புக்கட்டி மண்கிண்டி வயிறு நிறைத்திட்ட கணப் பொழுதில் போர்க்குதிரைகள் கட்டவிழ்த்துப் பயிரழிக்கின்றன. பாழ்பட்ட நாட்டில் போருக்குக் குதிரைகளைத் தயாரித்த சொல்லாத "தர்மங்கள்"பல இப்போதும் மறைப்பில் சொல்லித் தெரிந்தவைகளையும் சில செத்த குதிரைகளின் குருதி நெடிலில் மக்கள் மறந்தே போகிறார்கள்! எந்த நேரத்தில் எவர் தலையிலும் நெருப்பைக் கொட்டும் சிங்களக் கனவுக்கு சீவிச் சிங்காரித்து"படைத் தரப்புக்கு"இது பின்னடைவல்ல என்றும் புள்ளி விவரப்படி ஆட்டொகை காட்டி கடைந்தேற்றும் கடையர்களும் கண்ணீர் சிந்தி நம் தலையில் குட்டுவதும் காலைக் கடன்போல் தினமும் தொடர் நிகழ்வாய்த் தெருக்களில் சிந்தியபடி எந்த...

கார் விபத்து...

கார் விபத்து... பெய்யும் மழையும் பேரதிர்வான பேய்க் காற்றும் தேய்ந்துபோன இரயரும் அதிவேக ஓடுபாதையும் அதிர்வுக்குள்ளான மோதலும் அதிர்ச்சிக்குள் அமிழ்ந்துபோன உணர்வுமாய் நான். "......................" ஈரலிப்பான பாதையில் இழந்த எனது ஓடுபாதை தப்பான பக்கத்தில் கார் எதிரே வந்த பி.எம்.டபிள்யுவோட மோத... இப்போது என்னுடன் மோதும் ஜேர்மனியப் பொலிசு...