Skip to main content

Posts

Showing posts from July, 2010

பொங்குதமிழ் ஊடகமும்,மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்...

பொங்குதமிழ் ஊடகமும், மகிரிஷியின் அயலுறவுக் கருத்தியலும்... கட்டுரைத்தொடர்: (4) "புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம்,அந்நியச் சேவை:"அறிவாளிகள்!" த மிழ்பேசும் மக்களை மேலும் குழப்பத்துக்குள் ஆழ்த்தும் கட்டுரைகளை நமது "ஆய்வு"க் கட்டுரையாளர்கள் தற்போது பரவலாக எழுதிவருகின்றனர்.அதுள் முக்கியமாகப் பலராலும் வாசிக்கப்பட்ட கட்டுரையாக(பொங்குதமிழ்இணையக் கட்டுரை) இக்கட்டுரை பல தளங்களில் வாசிக்கக் கிடைத்தது. கட்டுரையாளர் மீளத் தகவமைக்கும் அயலுறுவுக்கொள்கை எனக்கு அன்றைய புளட்டின் அரசியல் வகுப்பெடுப்பை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. "இந்தியா உலகத்தில் முற்போக்கான நாடாகத தன்னைக் காட்டி வருவதால்,அது உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாக இயங்குகிறது.எனவே,தமிழீழத்தை ஏற்று அங்கீகரிக்கும்,தமிழ்பேசும் மக்களது நியாயமான போராட்டத்தை அது ஆதரிக்கும்" என அன்று புளட், இந்திய அயலுறவுக்கொள்கையை எடுத்தியம்பியது.பரவலாக இந்தியா குறித்து மக்கள் கேள்விகளைத் தொடுக்கும்போது புளட் இங்ஙனம் விடையளித்தது.இத்தகைய முட்டாள்த்தனமான கருத்தை அன்று மக்கள் நம்பிக்கொண்டார்கள். இன்று,சுமார் கால் நூற்றாண...

எதிர்நிலைகளை முன்வைத்து...

கட்டுரைத்தொடர்: (3) எதிர்நிலைகளை முன்வைத்து... "புலம்பெயர் தமிழர்கள்-அரசியலூக்கம், அந்நியச் சேவை:"அறிவாளிகள்!" த மிழ் பேசும் மக்களாகிய நாமோ இன்று தமிழின் பெயராலும்,தேசவிடுதலையின் பெயராலும் அழித்தொழிக்கப்பட்டும், எந்தப் பிடிமானமும் அற்ற வெறும் ஓடுகாலி இனமாக உருவாகப்பட்டு நாடோடிகளாகியுள்ளோம். நமது சமூக சீவியம் வலுவாக அழிந்தபின் நம்மிடம் எஞ்சியிருக்கும் வாழ்வானது காத்திரமான சமூக ஆண்மையாக இருக்க முடியாது! நாம் மெலினப்பட்ட இனமாக,பொருளாதாரப் பலமற்ற சிறு குழுவாகச் சிதைக்கப்பட்டு,உலக இனங்களுக்குச் சேவகஞ் செய்யும் நாடோடிகளாக்கப்படும் அரசியலைச் செய்து முடித்த ஆயுதக்குழுக்களது எச்சங்கள் இன்று போடும் அரசியல் கணக்கானது அவர்களது இருப்பைக் குறித்தான தெரிவென்பது நாம் இனங்காணத்தக்கது.இது,ஒருபோதும் நமது மக்களது அரசியல் நெருக்கடிக்கு எந்தவிதத்திலும்ஆரோக்கியமாகச் செயற்படாதென்பதைக் குறித்தே நாம் இப்போது பேச முற்படுகிறோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான புலியற்ற சூழலானது தமிழ்பேசும் மக்களுக்கு என்றும் சாதகமானவொரு அரசியல் வெற்றியைத் தரவில்லை.இயக்க நலனுக்கான தெரிவும்,தலைமைத்துவத்தின் இருப்புக்க...