Skip to main content

Posts

Showing posts from January, 2009

48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின்...?

மக்களை வெளியே விடு, மாற்றத்தை அவர்களே செய்வார்கள்! "புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும் சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும் ஒளிந்துள்ளன." 48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின் இலங்கை -இந்தியக்கூட்டுத் தமிழ்பேசும் மக்கள்மீதான கொடும் போர் மீளவும் வேகமெடுக்கப் போகிறது! இவ் யுத்த ஜந்திரம் புலிகளது யுத்த ஜந்திரத்தை உடைத்தெறியும்வரைப் புலிகளின் பகுதிகளுக்குள் சிக்குண்ட பாரிய மகட்டொகையை வேட்டையாடும் நிலைக்குள் காலக் கெடுவோடுகூடிய இடப்பெயர்வை வலியுறுத்தியதன் பின்பான காலம்,புலிகளின் யுத்த வலயத்துள் தொடர்ந்து தங்கியுள்ள ஒவ்வொரு மனிதரும் தனது உயிருக்குத் தானே பொறுப்பேற்பவராகச் சட்டரீதாயாக உலக அரங்குக்குக் காட்டப்படுகிறார்.இதை, இன்னும் வலுப்படுத்தத் தக்கவகையில், உலகத் தமிழ்ச்சமுதாயத்தின் மகட்டொகையில், 95 வீதம் தமிழ்நாட்டில் வாழும் ந...

இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு

இந்திய-இலங்கை அரசுகளின் இறுதி இலக்கு:அது, என்ன? அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே முத்துக்குமாரென்ற வீரமிகு தமிழ்மைந்தன் தன்னைத் தீக்கு இரையாக்கிவிட்டான்!தமிழகத்தில் அவனது குடும்பம் என்ன வலியில் இருக்குமென்பதை ஈழத்தமிழர்களாகிய நமக்குப் புரிந்துகொள்ள முடியும்.நாம் தமிழகத்துக்காக எதுவுஞ் செய்யவில்லை!எனினும்,நமது சகோதரர்கள் நமக்காகத் தம்மைத் தீக்கு இரையாக்குவதுவரை இந்தப் பாசம் செல்கிறது! நாம் பலரை இழந்துவிட்டோம்! வீரமிகு பல இளம் போராளிகளை ஈழத்தமிழர்கள் இழந்துவிட்டார்கள். இந்திய அரசின் மிகக்கெடுதியான அரசியற்போக்ககுளால் நாம் பலவீனப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டோம்.எமது இளைஞர்களின் வீரமிகு கரங்கள் தரையில் மல்லாந்துகிடக்கின்றது.எங்கள் மக்கள் இந்திய அரசினதும் அதன் குண்டுகளினதும் அகோரத்தாண்டவத்தால் தமது உயிர்களைத் தினம் இழக்கின்றார்கள்.இதை எதிர்த்து எமக்காக, தியாகத் தமிழ்மகன் முத்துகுமாரன் தனது உயிரைத் தீக்குள் திணித்துவிட்டார். அவரது ஓர...

புலி-அரசு:எவருமே மக்களுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

மக்களைக் கேடயமாக்கிய அரசியல்:தமிழீழத்துக்காகப் போராடுகிறது? இன்று, புலிகளுக்கு எதிரான யுத்தம் பாரியளவில் முன்னெடுக்கப்படுகிறது."புலிகள் தம்மைக் காப்பதற்காக அப்பாவி மக்களைத் தம்மோடு அடக்கி வைத்திருக்கிறார்கள்.இந்த அடக்கு முறை மிகவும் கேவலமான ஆயுதயச்சத்தின் மூலமானதாகும்.புலிகளிடஞ் சிக்கிய மக்களை, யுத்தத்தில் தம்மோடு சாகடிக்குஞ் செயலைப் புலிகள் திட்டமிட்டே செய்கிறார்கள்." இப்படியொரு செய்தி பரவலாக வெளியாகுகிறது.உலக ஊடகங்கள் முதல் மனிதவுரிமை அமைப்புகள்வரை இதையே மீளவும்,மீளவும் எழுதுகின்றன . ஆனால்,புலிகள் இதற்குமாறாகப் பரப்புரை செய்கிறார்கள். புலிகளிடம் சிக்கிய மக்களின் குரல்கள் வெளிவருவதற்கு அவர்களை மேய்ப்பவர்களின் கரங்கள் நெரிக்கின்றனவா? உண்மைகளைப் பேசுவதற்கு இலங்கை அரசும்,புலிகளும் ஒரு தளத்தில் நின்று மதில் அமைக்கின்றார்கள்.இந்த மதில்களுக்குப்பின்னால் அப்பாவி மக்களின் அழுகுரல்கள் நமக்கு எட்ட முடியாது.இலங்கை அரசு-புலிகள் காட்டும் மக்களின் முகங்கள் யாவும் பொய் முகங்கள்!மக்களின் உண்மையான அவலங்கள் இங்கே,கேடுகெட்ட அரசியலாக மாற்றப்படுகிறது. இரு தரப்புஞ் செய்யும் கொடிய யுத்தம் அப்பாவி ...

போதும், உங்கள் தமிழீழப் போராட்டம்.

கல்மடுக்குளம்:புலிகள் மக்கள் விரோதப் பயங்கரவாதிகளே! நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம். பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த இந்த இயக்கங்கள், இறுதியில் அதே மக்களின் வாழ்வாதாரங்களான வாழ்விடங்களை,பயிற்செய்கை நிலங்களை மற்றும் விவசாயத்தைச் சிதைத்தும், சந்தைப்படுத்தப்படும் கூட்டுறுவுச் சங்கங்களை செயலற்றதாக்கியபடி கொள்ளையடித்தும், மக்கள் விரோத அமைப்புகளாகச் சீரழிந்தன "விடுதலை" அமைப்புகள்.இன்று, நமது மக்கள் பலநூறு ஏக்கரில் விவசாயஞ் செய்துவந்த வலயத்திலுள்ளதும் அந்த விவசாயத்துக்கு நீராதாரத்தை வழங்கியதுமான கல்மடுக் குளம் தமிழ்த் தேசிய விடுதலையை முதன்மைப்படுத்துபவர்களென்றுத் தம்மைத்தாமே ஏகபிரதிநிதிகளாக்கியப் புலிப் பாசிச இயக்கத்தால் பாரிய குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டு(குளத்தின் அணைக்கட்டுக்கள்),மக்களின் கிராமங்கள்,விவசாய நிலங்கள் க...

சிங்கள யுத்தம்:

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் ஏன் இக்கொடிய யுத்தத்தை எதிர்ப்பதில் மந்தமாக இருக்கிறார்கள்? இலங்கை அரசின் யுத்தவெறியுள் சிங்கள மக்களின் நிலை என்ன? இக் கொடிய யுத்தத்தால் தமிழ்பேசும் மக்களை உலகமே திரண்டு ஒடுக்கும்போது,ஏன் புலிகளை நிபந்தனையின்றி நாம் ஆதரிக்கமுடியாதுள்ளது? -இவ் மூன்று கேள்விகளும் இப்போது எனது மனத்தைக் குடையுங் கேள்விகளாகும். புலிகளின் அமைப்போடு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கான நியாயமான அடிப்படை உரிமை பிணைந்துள்ளதே-புலிகளை அழிப்பதற்கான முதற்தெரிவு உலகத்துக்கு இங்ஙனம் உருவாகியதுதானே? இக்கேள்வி தமிழ்பேசும் மகளிடமும் புலி அனுதாபிகளிடமும்,என்னிடமும் இருக்கிறது. இன்றைய இலங்கை அரசியல் நிலைப்பாட்டிலிருந்துபார்த்தால் ஒடுக்கப்படும் தமிழ்பேசும் மக்கள் யாவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு புலிகளை நிபந்தனையின்றி ஆதரித்தாகவேண்டும்.ஏனெனில்,தமிழ்பேசும் மக்களின் நலன்கள் புலிகளின் இருப்போடு பிணைந்திருக்கிறது.என்றபோதும்,"இலங்கை அரசிடம் மடிப்பிச்சை எடுத்தாலும் எடுப்போமே தவிரப் புலிகளை ஆதரிக்கமாட்டோமெனும்" சூழலை மையப்படுத்துவதுபோன்ற ஒரு அரசியல் மெல்லப் புலப்படுகிறதுபோன்ற நிலைம...

அது,எனது மூஞ்சி!

தேசக் கருச்சுமந்து போராடச் செல்வோனே! சிங்களக் கொடுங்கோன் கண்டு கிளர்ந்தவனல்லவா நீ? உனது பெற்றோரைப் பூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி, உனது கிராமத்தைக் கற்பழித்தபோது ஆயுதந்தரித்தவன் நீ, பாசிச அரசோ அல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ! புத்தனின் பித்தர்கள் போடும் கொலைக் கூச்சல் உனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று! மீளவும் பாதகர்கள் தோழா, பாதகர்கள் தோழா பாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழா! என் தோழா, இது கண்ணீர்த்தானம் அநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு இன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழா? புரியவில்லைப் புலம்புகிறேன்-பொய்யில்லை! நான் அழுகிறேன், என் இதயம் தினமும் ஓயாது நோகிறது நான் யார்? இனவாதியா,இடதுசாரியா? எதுவுமே இல்லை! மனிதன் மகத்துவமாக வாழ்வதற்காக-நீ போராடும் பொழுதில் நான் பார்வையாளன் என் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று உன்னைக் கொன்றோம் தோழா, தனித்தாடா போராடுகிறாய்? உனக்கு யாருமே இல்லையாடா? எனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும் திடமான உனது நெஞ்சுக்கு துணிவையும் துன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்! எனக்குப் பசிபோக்கிய பனை உனக்கு அரணாகவரும் பாக்கியம்கூ...

மரணக் காவியங்கள்

எனது இருப்புக்காய் உன்னைக் கொல்வேன் என் சோதரா, மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம் நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன வேதனைக்காகவேனும் அழும்படி கட்டளையிடும் அவை வேளா வேளைக்கு எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன காற்றின் உதைப்பில் பட்டம்விட்டே பழகியவர்கள் நாம் எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து நீ விளையாட்டைத் துவக்கினாயோ அன்றி நானோ கேள்விகள் தொலைந்த நடுநிசிப் பொழுதொன்றில் வேட்டைக்குப் புறப்பட்ட நாம் முடித்துவைப்பதற்குள் மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை நாளையவர் எமது காலடியில் எதைத் தேடுவார்களோ அதை இரவோடிரவாக எழுதி வைப்போம் எனது சோதரா, எமக்கு எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது? நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள் நடாற்றில் முழ்கும் படகை நானோ அன்றி உனது விருப்பமோ தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது அன்புச் சோதரா, அறிவாயா இன்னும்? வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம் தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில் ஒன்றைத் தேர்ந்து எமக்காகத் தண்டவாளங்களை நட்டுப் பொதிகளை ஏற்றுவோம் ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம் தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை எப்போத...
எம் புற முதுகில் குத்தினாள் பாரத காளி! எங்கள் வாழ்வையும், வளத்தையும் திருடினாரடி கிளியே பாரதம் சொல்லியே பார்த்திருக்க-எமது உயிர்குடித்தார் இந்தியப் பெரும் முதலாளிகள்! எமது பாலகர்களைக் கொல்லப் படைகளைக் கட்டிப் பாதகஞ் செய்தாரடி கிளியே-இந்த பார்ப்பனர்தம் சூத்திரம் குடித்ததடி குருதியைக் கிளியே-எம்மை கொன்று குடித்ததடி!!! :-((((( ஸ்ரீரங்கன் 12.01.2009

Sunday Leader Editor: Lasantha Wickrematunga

Sunday Leader Editor: Lasantha Wickrematunga தோழனே, துக்கித்திருக்கவும் முடியவில்லை; துயர்கொள்வதற்காக அழவும் முடியவில்லை! உன்னைப் போன்றவர்கள் பலரை நாம் பாசிசத்தின் மடியில் ஏலவே இழந்துள்ளோம். அழிக்கப்பட்டவர்களில் ஒருவனாய் ஆனாய் ஆக்கத்துக்கு நீமட்டுமல்ல பெயர் குறித்து எழுதமுடியாத அளவுக்குப் பத்திரிகையாளர்கள் செயலிலிருக்கப் பலியாக்கப்பட்டனர்! ...நிர்மலராஜன்,சிவராமெனத் தொடர்ந்த இந்தக் கதை பாதாளத்தில் திசநாயகம்-ஜசீதரனைச் சிறிது சிறிதாகக் கொன்றபடி உன்னில் படமெடுத்த கருநாகமாக மகிந்தா முகம் விரிகிறது நாளை இன்னொரு பத்திரிகையாளனைப் பறிப்பதற்கு முன் வஞ்சகத்தின் வழிகளைக் கண்டு வீதிக்கிறங்காதவர்கள் வீடுகள்தோறும் மரணங்கள் விழும் தேசத்தைத் திருடுகிற அந்நியர்கள் ஆட்டிப்படைக்கும் மகிந்தா குடும்பத்துள் மலிந்தவை எல்லாம் கொலைகளே மக்களுக்குச் சேவகம் எனும் போதகன் தேசத்தின் தலையைக் கொய்து வழிந்த குருதியில் சால்வையொன்றைத் துவைத்துக் கழுத்திலிட்ட கையோடு போப்பாண்டவர் கால்களில் வீழ்ந்து கொலைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்ற முதற்கணமே உன்னில் பரீட்சையை எழுத ஒவ்வொன்றாகத் தலைகளை இனியும் இலங்கை மக்கள் இழப்பதற்குக் கோத்த...

ஒழிந்தது தமிழீழப் புரட்டு

ஒழிந்தான் ஈழ அரக்கன்! மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது விசுவாசமாக இருக்கும் நான் எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால் சத்தியத்தைத் தரிசித்து, என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை உலகுக்கு ஒப்புவிக்கிறேன்: உணர்வுத் துடிப்பு அடங்குகிறது, ஈழவரக்கனின் ஒவ்வொரு நரம்பிலும் குருதியுறைந்து இதயம் தாக்கத்துள் எத்தனை வகை வைத்தியங்களும் பலனில்லை, மரித்துவிட்டான்! இனியென்ன? என் ஜனங்களே, பாடையொன்றைக் கட்டுவதற்குமுன் பறையெடுத்துவாங்கள் முழுவுலகமுமறிய தம்மெடுத்துக் கொட்டுவதற்கு! நாற்ற மெடுப்பதற்குள் பிணம் அகற்றப்பட்டாக வேண்டும் அங்கே,இங்கேயென்று அலையாதீர்கள்! சத்தியத்தை நீங்கள் இன்னும் தொலைக்கவில்லை சதிகளை நம்பாதீர்கள்!! மக்களின் உயிருள்ள வாழ்வுக்கு நாசம் செய்த ஈழவரக்கன் ஒழிந்தானேயென உருப்படியாய் எண்ணிக்கொள்வோம். உயிரை நீங்களோ, உங்களுறவோ இனியிழப்பதற்கில்லை. நம்பிக்கையைத் தொலைத்து, மக்களின் உயிரையுறிஞ்சிக்கொண்டிருந்த ஈழவரக்கன் தனிமையில் உயிரைவிட்டான். மக்களே! மிருகங்கள் உங்கள் சுதந்திரத்தில் வந்து, உங்களது சுதந்திரமான பரிசுத்த மண்ணில் தீட்டுப்படுத்தி நீங்கள் வாழ்ந்த இல்லங்களை மண்மேடுகளாக்கின. உங்கள் குழந...

வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:

" ஒரு பாசிச இயக்கத்தின் அழிவில் நடந்தேறும் அரசியலுக்கு ஆசிய மூலதனத்தின் அங்கீகாரம் எதுவரை?" - சிறு நோக்கு. வீழ்ந்துவிட்ட கிளிநொச்சிக்குப் புலிகள் கொடுத்த விலை:தமிழரின் சுயநிர்ணய உரிமை? இன்று, நமது மக்களின் வாழ் நிலை என்ன? எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் அகதிகளாகவும்,பஞ்சப் பரதேசிகளாகவும் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது இத்தகைய கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?-இது,இன்றைய பாசிசப் புலிகள் பூண்டோடு அழிக்கப்படும் காலத்தில் எழும் சில அடிப்படையான கேள்விகள். நமது மக்களின் உயிர்கள் தினமும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல் இன்னும் மாறிவிடவில்லை.புலிகளைச் சொல்லி வான் குண்டுகளாகப் போடப்படும் குண்டுகளால் மக்கள் தினமும் செத்தே மடிகிறார்கள்.அவ்வண்ணமே இதுவரை நமது மக்களின் உரிமைகளை எவரும் இதுவரை தந்துவிடவுமில்லை-தரப்போவதுமில்லை! தமிழ்பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனையே உயிர...