Skip to main content

Posts

Showing posts from January, 2016

தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும்...

விழிப்போடு இருப்போம்! Sri Rangan Vijayaratnam · Samstag, 16. Januar 2016 10 Mal gelesen தைப்பொங்கலை "ஆதிக்கச்சாதி -மதத்தின்" பெயரால் குறுக்கும் அரசியல் வியூகம்!-சிறு குறிப்பு. இன்று,தமிழ்பேசும் மக்களது அரசியல் வாழ்வு மட்டுமல்ல உலகம் பூராகவும் வாழும் -விடுதலைபெறத் துடிக்கும் -இனங்களைப் பிளந்தொடுக்குவதில் நிலவுகின்ற அரசுரித்துடைய இனங்கள் பல்வேறு வியூகங்களினது "தெரிவை"க்கொண்டு, வழிகளைக் கண்டடைகின்றனர். முக்கியமாக,கொலனித்துவக் காலத்துள் இலங்கையில் சைவக் கோவில்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டாட்டங்களைத் தடைசெய்தனர் ,கொலனித்துவ வாதிகள்.இதற்குள், இயங்கும் அரசியல் மக்களது அடையாளங்களை அழித்து, அவர்களது பண்பாட்டை இல்லாதாக்குவது.இதுவொரு இனத்தைத் தொடர்ந்து அடிமைப்படுத்தித் தமது ஆளுமைக்குள் கொணரும் ஆதிக்கத்தின் இருப்புக்கான தெரிவு. இதையுரைத்துப்பார்க்க பல்வேறு ஆய்வுகள் தேவையில்லை! வெள்ளையர்கள் குடியேறிய அமெரிக்க - அவுஸ்ரேலியக் கண்டங்களில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள்மீது நடாத்தப்பட்ட கொடுமைகள் போதுமானது.தற்போது , ஈராக் ;இலிபியா ;சிரியா ;அவ்கானிஸ்த்தான் ...

பிராமணர்கள் இப்போதே தயார்: தமிழகத் தேர்தல் 2016

பிராமணர்களது வரலாற்றைப் பார்க்கிறேன் Sri Rangan Vijayaratnam · Samstag, 9. Januar 2016 5 Mal gelesen எனக்கு, இந்தப் படத்தைப் பார்த்துப் பிழைப்புவாதி கருணாநிதி அவர்கள்மீது எந்தக்கோபமும் வரவில்லை . அவர் அடிப்படையில் அரசியல் நாணயமற்ற ஊழற்பெருச்சாளி என்பது உலகறிந்த விடையம். இன்று, கருணாநிதி குடும்பம் பெரும் பண முதலைகள். பொதுச் சொத்தைக் கொள்ளையிட்ட பெரும் கிரிமனல்கள் இவர்கள். அதிகாரத்தைக் கையகப்படுத்தவும் ;மீளவும் ,பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்கவும் கருணாநிதி குடும்பம் அமைக்கும் வலை மிகப் பெரியது.அரசியலில் இவ்வளவு மோசமானவொரு ஊழற் பேர்வழிகளை நாம் வரலாற்றில் பர்ப்பதானால் அங்கே, செயலலிதாவும் இந்தக் கிழ நரியுந்தாம் முன்னணியில் நிற்பவர்கள். ஆனால்,என் பிரச்சனையெல்லாம் தமிழகப் பிராமணக் கூட்டம் [ பார்ப்பனர்கள் ]பற்றியதே. பிரமணர்கள் சொல்கிறார்கள் தாம் மக்களது நலனுக்காகவே பாடுபடுபவதாக.ஆனால் ,நடைமுறையில் தமது ஆதிக்கத்தையும் கோவில் வருமானங்களையும் காப்பதில் அவர்கள் ,எவர்களோடும் சமரசத்துக்குப் போகின்றார்கள்.இவர்கள் ,உண்மையில் மிக மோசமான அரசியல்வாதிகளைப் போன்ற இன்னொரு ...