சிங்கள இராணுவக் குடிப் பரம்பல் கண்டு, மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா? " மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும் கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது. இந்தவொன்றே அவர்களை மற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ." -Goethe [„Edel sei der Mensch, hilfreich und gut! Denn das allein unterscheidet ihn von allen Wesen, die wir kennen.“- Goethe] இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்"இடப் பெயர்வோடு"அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர் காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே "தமிழீழப்போராட்டம்"வழி தந்துரோபாய இடப்பெய...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்