Skip to main content

Posts

Showing posts from November, 2010

சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி!

சிங்கள மேலாத்திக்கக் கனவு: சோரம் போகும் புரட்(டு)சீ-தலித்துவ முன்னணி! சில குறிப்புகள். சி ங்கள-இந்திய அரசுகள் இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோமா? இத்தகையதும்,ஏலவே தம்மை அரச பரிபாலனத்துக்குரிய இனங்களாகக் கருதும் மேலாண்மைச் சமுதாயங்கள் தம்மிலும் மெலிய இனங்களை தமக்குள் உள்வாங்கி ஏப்பம் விடும் பாரிய யுத்தத்தைப் பல வடிவங்களில் முன்னெடுக்கின்றன.இவை அனைத்துக்கமான அடிப்படை நோக்கானது தகவமைக்கப்பட்ட பொருளாதாரப் பொறி முறைகளுக்கேற்ப இந்தயுத்தம் பொருளாதாரத்தை முழுமையாகக் கையகப்படுத்திய இனங்களுக்குள் இருக்கும் மேட்டுக் குடிகளது நிகழ்சி நிரலுக்கேற்ற படி முறைமைகளைத் தப்பாது திசை வழியாக்கிக் கொண்டிருக்கின்றன. ஜேர்மனியை உதாரணமாக எடுத்தோமானால்,இங்கே, இனங்களுக் கிடையிலான பரஸ்பர சமூக அசைவூக்கமானது மேலாண்மையைக் கொண்டியங்கும் பெரும்பான்மை டொச்சு மொழிக்குழுமத்தை மையப்படுத்தியே குடியேற்ற இனங்களை உந்தித் தள்ளுகிறது.சில நூறு ஆண்டுகளுக்குட்பட்ட குடியேற்றக் குடிகளுக்கு இது பொருத்தமானதும்-தவிர்க்க முடியாததுமான புறச் சூழலாலும் தமக்கு அந்நியமான சமுதாய...

"எதிரியின் எதிரி நண்பன்"

"எதிரியின் எதிரி நண்பன்" சோ பாசக்தியின் "முகப் புத்தகம்" கட்டுரையை இரயாகரன் தனது தமிழரங்கத்தில் மீள் பதிவேற்றிவிட்டார்.அப்பாடா தொலைந்தான் எதிரி! //EPRLF கட்சியின் தலைவராக இந்தியாவால் உருவாக்கப்பட்டவர் வரதராஜப் பெருமாள்’ என்பது வரதராஜப்பெருமாளின் அரசியற் போராட்ட வரலாறை அறியாத தவறு என்றே சொல்ல வேண்டும். தனது 17வது வயதிலேயே 1972ல் போராட்டத்தில் இணைந்துகொண்ட வரதராஜப்பெருமாளின் அரசியல் வரலாறு நெடியது. EPRLF உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தலைவர்களில் ஒருவராக வரதராஜப்பெருமாள் இருந்தார். அருள்எழிலன் தனது நூலில் 1985ல் திம்புப் பேச்சுவார்த்தையில் போராளிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த் தேசியம் / தாயக நிலக் கோட்பாடு / சுயநிர்ணய உரிமை / பிரிந்து செல்லும் உரிமை என்பவற்றை உள்ளடக்கிய நான்கு கோட்பாட்டுரீதியான கோரிக்கைகளை மிகவும் சிலாகிக்கிறார். அந்தக் கோரிக்கைகளை வடிவமைத்து எழுதியவரே வரதராஜப் பெருமாள்தான். அவர் எழுதியதைச் செம்மைப்படுத்திய கேதீசும் இறுதி வடிவம் கொடுத்த அ.அமிர்தலிங்கமும் பின்னாட்களில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வேறு கதை. வரதாஜப்பெருமாளும் புலிகளின் அதி உயர்பட...