Skip to main content

Posts

Showing posts from June, 2006

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்: திருடர்கள்!

"1:ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா? >>(பதில் விளக்த்திற்காக மேலும் சில துணைக்கேள்விகள்.) ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்: திருடர்கள்! அடுத்தவன்(ள்) வீட்டில் தென்னை காய்த்திருக்கும்போது வேலி பிரித்து வெறித்துப் பார்த்து வேளை வரும்போது வேட்டிக்குள் திணிப்பவர்கள் ஊருக்கு நல்லதற்காகத் திருடுகிறார்களாம்! "அவசியம் உள்ளதாகக் கருதுகிறீர்களா?" எதன் பொருட்டு ரீ.பீ.சீ-மாமோய்? எள்ளுக்காயுது எண்ணைக்கு ரீ.பீ.சீ அலம்புது கைக் கூலிக்கு! இதற்குள் ஐ.பீ.சீ ஆட்டுக்குட்டி, நிதர்சனத்தோடு சேர்ந்து தேனீக்குத் திரு விழா!! திருடர்கள்! மக்களின் காதுகளில் மலர் சூடி மயக்கம் காணும்போது காதறுக்கும் கூட்டம் மக்கள் நலன் விளக்கி "சர்வே"செய்கிறார்கள் நம்மிடம்! ம்... காலம்தாம். இலங்கைக்கு இந்தியாவுக்கு ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு காசுக்கு வாலாட்டும் ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு தேள் கொட்டுது மக்கள் நலனாக. என்ன செய்ய? புலிகளுக்கு நிதர்சனம், எட்டப்பர்.கொம் என்று ஏராளம் கொம்புகள்!-பாசிசத்தின் பக்கவாத்தியங்கள்!! இயக்கவாதப...

மீளவும் யுத்தம்!

மீளவும் யுத்தம்! இ லங்கையில் மீளவும் போர்: சிங்களத் தேச ஒருமைப்பாட்டுக் கூச்சலோடு- ஈழத்தின் கனவோடு வெடித்துவிட்டது! ஸ்ரீலங்கா அரசும்,புலிகளும் கடற்சமரில் பாரிய இழப்பில்... இன்றைய சூழலில் போர் எதற்கு? இலங்கை அரசால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களென உண்மையிலேயே புலிகள் நம்பியிருந்தால்-மக்களை,பிரச்சனைகளை அரசியல்ரீதியில் கையாளும்படி ஏன் நெறிப்படுத்தவில்லை?போருக்கு முன் புலி இயக்கம்- (இத்தகையவொரு) விடுதலையமைப்புச் செய்வது அவசியமில்லையா? இத்துடன்-நியாயப்பாடுகளைத் தெளிவாக்கிப் போரை மிகவும் பின் தள்ளியிருக்க வேண்டும்.இது மிகவும் அவசியம்! ஆனால், எதுவித வாதப்பிரதிவாதங்களே அல்லது எதற்காக-என்னதான் சமாதானப் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்பான பேச்சு வார்த்தைகளில் நேர்ந்தன என்பதைக் கூட மக்களிடம் எடுத்துச் செல்லாமல்,போரைத் திணிப்பது இரு தரப்புக்கும் நியாயமல்ல. இன்றுவரை மக்கள் அனுபவித்த-அனுபவிக்கும் துன்பம் எல்லையற்ற வண்ணம் அதிகரித்தபோதும் தமிழ்-சிங்கள சமுதாயங்களில் ஜனநாயக விரோத ஆதிக்க-அதிகாரத்துவ அரசியல் மீளவும் உச்சத்தில் பறக்கிறது. சுனாமி அழிவுக்குப் பின் தமிழ்ப் பகுதிகளில் ஒருவித ஏமாற்றமும்,வாழும் ஆ...

படுகொலை அரசியல்.

படுகொலை அரசியல். இன்றைய இலங்கை எங்கே செல்கிறது? இது நவீனப் பண்பாடுடைய மக்கள் வாழும் நாடுதாமா அல்லது காட்டுமிராண்டிக் கூட்டம் வாழும் கற்கால இலங்கையா? அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொலைகாரர்களால் செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டிப் படுகொலைகளுக்கு நிகராகப் பற்பல தாக்குதல்களை இலங்கை-புலி இராணுவங்கள் செய்துமுடிக்கிறார்கள்,-சாவது அப்பாவி மக்கள்! சமீபத்து வங்காலைக் கொலைக்கு கொழும்பில்-சிங்களக்கிராமங்களில் புலிகள் தாக்கவேண்டுமென விரும்பிய தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெப்பித்தக்கொலாவ எனும் சிஙகளக்கிராமத்தில் பேரூந்து வெடித்துச் சிதறுகிறது இன்று! சாவு:64 பயணிகள்-அப்பாவி ஏழை மக்கள்!!-குழந்தைகள்... குஞ்சு குருமான்கள் என்ன பாவம் செய்தார்கள் இந்த நாட்டில்? நிம்மதியாக வாழும் இயல்பு நிலையை மறுக்கும் அரசியலின் நோக்கமென்ன? கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக நடைபெறும் பாலஸ்தீன-இஸ்ரேலியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் யாவும் பழிக்குப் பழி தீர்க்கும் பயங்கரவாதத் தாக்குதல்களாகவே உலகத்தால் பேசப்படுகிறது. எனினும், இத்தகைய தாக்குதல் தொடர்கதையாய்... இது,இன்று இலங்கையிலும் தொடர...

பிணக் கூத்து!

பிணக் கூத்து! அவர்களுக்கென்றொரு அரசியல் இவர்களுக்கென்றொரு அரசியல் இடையில் மக்கள்:நான்-நீ,மற்றும் சுற்றம் கொன்றபின் யோனியில் ஆண்குறி அமிழ்ந்ததா? ஆராய்தல் அலுத்த கதை... கொல்லுவதில் எவரும் சளைத்தவர்களில்லை! சிங்களத்து இராணுவத்திடமும் புலிகளிடமும் பேசும்"மொழிகள்" வேறுபடலாம் ஆனால் கொலை மொழி இரண்டுக்கும் பொதுவானதே!! காத்தான்குடி முன் அநுராதபுரம், சமீபத்தில் கனகம் புளியடி, வங்காலை வழி யுத்தத்திற்கு நியாயம்: "கொழும்பில்"கையை வைக்கப் புலிகளுக்கு ஆலோசனை... தெரியாதா இது? புலி அறியாத மக்கள் திரள் உண்டோ? இறப்பவர்களும் கொலை செய்கின்றார்கள் கொலையாகிவிடுபவர்களும் இறக்கின்றார்கள் இறப்புக்கு: ஸ்ரீலங்கா-தமிழீழ நாட்காட்டி, சோற்றுக்கு:தேசவொருமைப்பாடு-ஈழ விடுதலை! பிஞ்சுகளின் குருதியில் கை நனைப்பவர்களுக்கு தேசம், தேசியம், மொழி-மதம் உணர்வு வழி உயர்வென்றால் மக்களற்ற மண்ணை எந்த மடையன்-மடைச்சி கோடிட்டுக் குறி வைப்பான்(ள்)ஸ்ரீலங்கா-ஈழமென்று? கை நீட்டிச் சோற்றுக்கு அலைந்தவர்களின் பிணங்களைக் காட்டி ஈழத்துக்கு இரங்கற்பா பாடுவது தெருக்கூத்து-இது திராவிடத்து அரசியலின் திருநோக்கு! செத்தவர்களைச் சொல்...

தமிழ் சூழலுக்குள்...

தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும். வாழ்வியல் மரபுகள் தகர்க்கப்பட்டுவரும் சூழல் இருபத்தியோராம் நுற்றாண்டாகும்,ஒன்றின் இழப்புக்குப் பின் அந்தவிடத்திற்கு மிகவும் காட்டமான பழைய மரபுசார்ந்தெழுகின்ற ஒரு பிற்போக்கு வடிவத்தை புதியவொழுங்கு போன்று ஒப்பவிக்கிறது இந்த நுற்றாண்டு. இதற்கு புதிதாய் மலிந்துவிட்ட விஞ்ஞானச் சாகசங்கள் நன்றாய்த் துணைபுரிகின்றன,இதன்பொருட்டு இன்றைய செய்மதிச் செய்திப்பரிவர்த்தனை வானளாவிய தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி-வானொலி,இணைய வலைப் பின்னல்களை தனிநபர்-தனிப்பட்ட வலயத்திற்குள் திணித்து விட்டுள்ளது, இது பற்பல சாத்தியங்களை மக்கள் சமூகத்துள் தோற்ற இதன் பயன் பாரிய சமுதாயப் பின்னடைவை-பிளவை வற்புறுத்துகிறது,என்றுமில்லாதவாறு சமூக முரண்கள் மழுங்கடிக்கப்பட்டு சமுதாய மாற்றம் நிகழாத சூழலை ஏகாதிபத்திய நிறுவனங்கள் நிறுவனமயப் படுத்துகின்றன,தற்செயலாகவேனும் உலகமயத்திற் கெதிரான கல்வியல் சார்ந்த கட்டுமானம் நிகழாதபடி இந்த உலகமய அரசியற்தந்திர வியூகம் இப்போது பலமாகக்கட்டப்படுகிறது. நிகழ்வுசார்ந்தெழுகின்ற அனைத்து நிலமைகளும் நன்றாகத் திட்டமிடப்பட்டுள்ளது,இதன் ஒவ்வொரு ...

புலிகளின் கொலைவெறித் தாக்குதல்...

ரீ.பீ.சீ.வானொலி மீது மீளவும் புலிகளின் கொலைவெறித் தாக்குதல்! பாசிசம் எந்த உருவத்தில் வந்தாலும்(தமிழீழ விடுதலை,தாயகம்-சுயநிர்ணயவுரிமை...)அதை அனுமதிக்க முடியாது!நமது காலம் மிகவும் மௌனித்திருக்கத்தக்கதல்ல!உயிர் வாழ்வதற்கே போராடியாகவேண்டிய காலவர்த்தமானத்தில், எதற்காகவும் மௌனித்திருக்க முடியாது. புலிகளின் அதீத வன்முறை முனைப்பானது மாற்றுக் கருத்துடையவர்களைச் சமூக விரோதிகள்-எட்டப்பர்,தேசத் துரோகிகளெனும் சித்தரிப்புகளுடாகக் கருத்து விதைத்து,அப்பாவிகளான மனிதர்களைப் போட்டுத் தள்ளிவரும் புலிப் பயங்கரமானது எப்போதும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தைப் பாதுகாக்க முடியாது! தேசிய விடுதலைப் போராட்டமானது தனிப்பட்டவொரு மனிதரின் சுய முனைப்புக்கான போராட்டமல்ல. ஒரு இனத்தின் தலைவிதியை அற்ப மனிதரின் நலன் சார்ந்து-அவரதும், அவரது தளபதிகளின் நலனுக்குமான காப்பரணாகக் குறுக்கிவிடும் புலிப் பயங்கர வாதிகளின் போராட்டத்தில் நாம் மரித்தாலும் சரி ஜனநாயக வாதிகளைக் காத்தாகவேண்டும். புலிப் பயங்கரவாதிகள் எட்டப்பர்.கொம், நெருப்பு.ஓர்க், நிதர்சனம்.கொம் போன்ற இழி இணையத் தளங்களுடாக மாற்றுக் கருத்தாளர்கள்மீது கிட்டலர் பாணி கருத்தியல்...

ஷோபா சக்தியின் விமர்சனமானது...

ஷோபா சக்தியின் இவ் விமர்சனமானது... "Der Krieg heute aber kommt nicht vom Himmel oder von Gott wie der Regen,sondern er hat allein gesellschaftliche Ursachen.-Heinz Liepman.(Kriegsdienst verweigerung.seite:40) "யுத்தமானது இன்று வானத்திலிருந்து வருவதில்லை அல்லது இறைவனிடமிருந்து மழையைப் போன்றோ அல்ல,மாறாக யுத்தமானது சமூகக் காரணிகளிலிருந்தே தோன்றுகிறது."-கைன்ஸ் லீப்மான். சத்தியக்கடதாசியில் நண்பர் ஷோபா சக்தி புஷ்பராஜாவின் நூலுக்கான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர்தம் விமர்சனமானது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொருந்தத்தக்க எண்ணங்களையும்,அதனூடான சமூகவுண்மைகளையும் நமக்குமுன் இழுத்து வருகிறது!இதுவரையான ஈழத்தமிழ் மக்களின் போராட்டப் பாதையில் ஆயுதக் குழுக்களால் விதைக்கப்பட்ட புணங்களையும் அந்தப் புணங்களின் தோற்றத்துக்கான கண்ணிகளையும் மிக நுணுக்கமாகச் சொல்லும் ஷோபா சக்தியின் தரவுகள்-அறிவுக் கொள்கைகள் மிக உண்மையானது.விஞ்ஞானப+ர்வமானது.இந்தவொரு தளத்திலிருந்துகொண்டு நாம் எந்த நோக்கத்தில் இன்றைய போராட்ட வாழ்வையும் அதன் இயலாமையையும் நிராகரித்து மக்களின் வாழ்வியல் பெறுமானங்களை முன் நிறுத்...

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம்

புலிகளின் இழி இணையம்:எட்டப்பர்.கொம் எங்களுக்குப் பப்பிளீஸ்சிட்டி அவசியமில்லை அன்பர்களே! எம்மை ஒடுக்குபவர்கள் புலிகளென்று அம்பலப்படுத்திய பின்பும்,புலிகளால் சட்டப+ர்வமாக மறுக்க முடியுமா? இதுவரை மறுக்கத் தெம்பில்லாது மௌனமாகக் கிடக்கும் ஜேர்மனியப் பொறுப்பாளர்களை பொலிசில் பிடித்துக் கொடுப்பதல்ல எமது நோக்கம். மக்களுக்காகப் போராடும் ஒரு அமைப்பென்றால்-தம்மால்-தமது பிராந்தியப் பொறுப்பாளர்களால் தமிழர் ஒருவருக்கு விடப்படும் மரண அச்சுறுத்தல் குறித்து இதுவரை பதிலளிப்பது அல்லது அதுகுறித்துக் கருத்தளிப்பது அவர்களின் பொறுப்பில்லையா? ஆதாரத்தோடுதானே நாம் பதிவிட்டுள்ளோம். இதோ இந்த எட்டப்பர்.கொம்முக்குப் போகவும் http://www.eddappar.com/content/view/57/26/ இங்கே அவர்களின் வால்கள்விடும் அடுத்த அச்சுறுத்தல். இது குறித்து நான் சட்ட நடவடிக்கை எடுத்தபடியே உள்ளேன். முதலாவது குற்றத்தை என்னபெற்றால் புலிப் பொறுப்பாளர்மீது போட்டாகவேண்டும். அதற்குப் புலிகளின் மேலிடம் என்ன பதிலைத் தரும் எனக்கு? முதல் நபரை இன்னும் சுட்டப்படவில்லை. ஜேர்மனுக்கான புலிப் பொறுப்பாளர்கள் இது குறித்துப் பதில் தராத வேளை மேற்காணும் நபரையும் ச...