Skip to main content

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்: திருடர்கள்!

"1:ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
>>(பதில் விளக்த்திற்காக மேலும் சில
துணைக்கேள்விகள்.)<<1:1நிதர்சனத்தையும்>

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்:
திருடர்கள்!

அடுத்தவன்(ள்) வீட்டில்
தென்னை காய்த்திருக்கும்போது
வேலி பிரித்து வெறித்துப் பார்த்து
வேளை வரும்போது
வேட்டிக்குள் திணிப்பவர்கள்
ஊருக்கு நல்லதற்காகத் திருடுகிறார்களாம்!

"அவசியம் உள்ளதாகக் கருதுகிறீர்களா?"

எதன் பொருட்டு ரீ.பீ.சீ-மாமோய்?
எள்ளுக்காயுது எண்ணைக்கு
ரீ.பீ.சீ அலம்புது கைக் கூலிக்கு!
இதற்குள் ஐ.பீ.சீ ஆட்டுக்குட்டி,
நிதர்சனத்தோடு சேர்ந்து தேனீக்குத் திரு விழா!!

திருடர்கள்!

மக்களின் காதுகளில் மலர் சூடி
மயக்கம் காணும்போது
காதறுக்கும் கூட்டம்
மக்கள் நலன் விளக்கி
"சர்வே"செய்கிறார்கள் நம்மிடம்!

ம்...

காலம்தாம்.

இலங்கைக்கு
இந்தியாவுக்கு
ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு
காசுக்கு வாலாட்டும் ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு தேள் கொட்டுது
மக்கள் நலனாக.

என்ன செய்ய?

புலிகளுக்கு
நிதர்சனம்,
எட்டப்பர்.கொம் என்று
ஏராளம் கொம்புகள்!-பாசிசத்தின் பக்கவாத்தியங்கள்!!

இயக்கவாதப் பிழைப்பு வாதிகள்...
எல்லோரும்
மக்கள் விரோதிகள்தாம்!

எந்தப் பக்கம் பார்த்தாலும்
மக்கள் விரோதிகளே மக்கள் குரலாக...
துப்பாக்கிகளுக்குமுன்
மௌனித்துக் கிடக்கும் மக்கள் மனங்கள்
மரணத்தை அடைகாக்கும் இயக்கவாதிகளிடம்
உரிமைக்கு ஏங்கிக் கிடப்பது உண்மைதாம்!!

உயிர்வாழும் நிலமும்
உண்பதற்கு பயிர் செய்தலும்
உழைப்பதற்குத் தொழிலும்
தோணிவிட்டு மீன் பிடிக்கக் கடலும்
கண்ணுறங்க வீடும்
அவர்களது உரிமை

நாடென்றோ
அல்ல மொழியென்றோ
திரண்டுகிடக்கும் எந்தக் கனவும்
மக்கள் நலத்தைக் காத்திடுவதாகவில்லை

தலை தறித்துத் "தமிழ்" தம்பட்டம் அடிப்பவர்கள்
உயிர் பறித்து ஒரு தேசம் விடுதலையாகுமெனச்
சொல்வார்கள்
பற்பல வடிவங்களில்

இத்தகைய திருடர்களின்
மரண சாசனத்தில் பங்கற்றவர்கள் எவர்கள்?
மடிப்பிச்சைபோல உயிர்ப்பிச்சை கேட்கும் நிலையில் மக்கள்...
மசிரப் புடுங்கின ரீ.பீ.சீ-தேனீக் கும்பல் சிங்களக் கொடும் அரசுக்கு
சுக்குக் கோப்பி தயாரிக்குது
ஏகாதிபத்தியத் தயவில்
இதுக்கொரு இந்தியா-ஆனந்த சங்கரித் திருடன் கூட்டாக...

ஆருமற்ற அப்பாவித் தமிழர்களிடம்
அரசியல் பண்ணும் அற்பப் பிராணிகளை
ஆரூ சொன்னார் "அவசியம்"-"தேவை"
மக்களுக்கானதென?

அறுத்துப்போட்டுக் கூறுபோடும் ரீ.பீ.சீ.வானொலியா மக்கள் நலன் பேச?
நீறுப+த்த மக்கள் மனங்களை
குருதி கொண்டு"காயடிக்கும்"கள்ளர்கள் கூட்டம்
புலியாக இருந்தாலென்ன
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலாக இருந்தாலென்ன?

எல்லோருமே கொலைகாரர்கள்!-திருடர்கள்,
மக்களின் விரோதிகள்!!!!!

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திருடியவர்கள்
தத்தம் நலனுக்கு மக்களுரிமைகளை
தரணம் பார்த்து ஏலம் விட்டும்
போரிட்டும் பதவி சுகம் காணப் பரதவிக்குமிவர்கள்
மக்களுக்குச் சேவகர்களாம்!
மண்ணாங்கட்டி!!!

நேபாளத்துப் போராளிகள்
"கைக்கூலி ரீ.பீ.சீ-வானொலிக்கு" மாவோயிசப் பயங்கர வாதிகளாம்!
கொடும்பாவி இராஜபக்ச- "ஜனாதிபதி,
மக்களைக் கொல்வதை நிறுத்தும்படி வேண்டினேன்!"-அவிட்டுவிடும்
ஜெயதேவரின் வாய் அழகென்ன அழகு!!
அண்ணே,
அடுப்பெரிக்க உதவாத
கரிக் கட்டை நீங்கள்
ஆருக்கு அபிசேகம் செய்வதில் அவசரம்?

பாழாய்ப்போன புலிகள்
தேசத்தின்-தேசியத்தின்
விடுதலையின் பேரால்
தமிழருக்குக் கொலைகளையே தந்துவர
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு
அரசியலாய்ப் பிழைப்பாய் அது உரமிடுகிறது.
எரிகிற வீட்டில்
பிடுங்குவது மிச்சமென்றலையும்
ஜெயதேவன் அன்ட் கொம்பனிக்கு
மக்களின் சாவுகளும்,குருதியும்
நல்ல கடைச் சரக்கு ஏலமொன்று விடுவதற்கு
சரியான போட்டியப்பா புலிகளுக்கு!

"ஐ.பீ.சீ வானொலியும்
ரீ.பீ.சீ.வானொலியும் ஒன்றா?
அல்லதென்றால் வேறுபாட்டை விளக்குக!"

ஆரடா நீங்கள்
ஆட் காட்டி வேலைக்கு?

அடுப்பெரிக்க அல்லல்ப்படும் நாங்களெங்கே
வானொலிகளுக்கான கூலியாக
அழிந்து போகும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும்
அள்ளிக் கொடுக்கும் பல்லாயிரம் பவுண்களின் ஊற்றெங்கே?

அடிவருடிகள்,கைக்கூலிகள்
மக்கள் விரோதிகள்
சிங்களப் பாசிச அரசின் பாதந் தாங்கிகள்
புலிகளுருவில் மட்டுமல்ல-அது
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல் உருவிலும்
தமிழ் மக்கள் உரிமையைக் காவு கொள்கிறது.

தேசியத்துக்கு
சுய நிர்ணயத்துக்கு
விளக்கம்வேறு கேட்கினம் அரசியல் ஆய்வில்(!?)!
தேசியத்தை சிதைக்கின்ற புலிக்கோ
அல்லது சிங்கள அரசுக்கோ
குறுந்தேசியப் புலம்பலென்றால்
பதவிப்பேராசைப் பெரிச்சாளிகளான
புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ-தேனீக்கு
தேசியத்தின் வரையறை
மக்களினத்தின் திமிராகத் தெரிகிறது

தேசத்தினதும்
மக்களினதும் பாதுகாப்பே
அந்நியனின் காலடியில்...
பிறகென்ன?
தேசியமோ அன்றித் தமிழ் பேசுவோர்
சுய நிர்ணயிப்போ
சிங்களச் சியோனிசத்தின் சந்தைக்கு நிகராகுமோ?

நக்கிப் பிழைப்பதற்கு
ஒரு
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல்
புலிகளைப் போலவே அந்நியனிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது
மக்களை ஏமாற்றியபடி!

ப.வி.ஸ்ரீரங்கன்
24.06.06

Comments

Anonymous said…
ஓநாய் நனையுது எண்டு மரநாய்
அழுகுதாம்
ஓமண்ணை.. உந்த எல்லா பாசிச இயக்கங்களையும் தூக்கி குப்பையில போட்டு விட்டு ஜனநாயகப் பண்போடு நாங்கள் ஒரு மக்கள் படை (ஏற்கனவே மக்கள் படை இருக்கிறதாலை நாங்கள் புதிய மக்கள் படையெண்டு தொடங்குவம்)

அதுக்கு நீங்கள் தான் தலைவர். நாங்கள் பிறகொரு றேடியோ தொடங்குவம். ரிவி தொடங்குவம். அப்பவும் ஆரேனும் வந்து மோடன் சிறிரங்கன் எண்டு எழுதுவாங்கள்.. அதையெல்லாம் கணக்கில எடுத்தால் எப்பிடி போராடுறது.. நாங்கள் தொடருவம்..
Sri Rangan said…
//ஓநாய் நனையுது எண்டு மரநாய்
அழுகுதாம்//


அட சக்கை,அம்மன் கோயில் புக்கை!
நானறிய"வெள்ளாடு நனையுதெண்டு வேங்கைப் புலி விழுந்து விழுந்து அழுததாம்"என்றெல்லோ இந்த முது மொழி நிலவுகிறது?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ புலிகளைச் சொல்வது காலப் பொருத்தமில்லையோ?இப்பவெல்லாம் புலிகள் பசித்தாலும் மாமிசம் புசிக்காது,சுத்த சைவப் புலிகள்!புல்லைப் புசிப்பதோடு சரி!தூள் அன்பரே தூள்!

எட கொழுவி,
என்ன விசேஷம்?
என்னையும் தலைவராக்கும் உமது நல்ல மனதுக்கு ஒரு ஜே!
Anonymous said…
ஏன்ராப்பா, சுவிசில ரெண்டு பேரும் சந்திக்கப்போறியள் எண்ட உடன கொழுவி கட்சி மாறீட்டாய். துரோகி.

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...