Skip to main content

Posts

Showing posts from December, 2011

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2) சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல். (அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!) (2) பொனபாட்டிசம் தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது! அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா? எவன்(ள்),எந்தெந்தத் திசையில் ...

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்! சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல். (அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!) (1) இ லங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-அதிகாரத்தின் பதில் விளைவுகளாகப் பின்னப்பட்ட புலியழிப்புப் போராட்டத்துக்குப் பின் இலங்கையின் பொது அரசியற் சூழலானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுக் கருத்தியல்-வெகுஜனக் கணிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதென்பதும்,அரச வன் முறை-வன்முறைசார ஜந்திரங்களின்வழி பின்னப்பட்டிருக்கும் அதிகாரமென்பது பெரும் பான்மை மக்களையும்,அவர்களது சுதந்திரத்தையும் "விடுதலை-சுதந்திரம்-இறைமை-தாயகம்" எனும் மந்திரச் சொற்களால் எங்ஙனம் பறித்துவிட்டிருக்கின்றவென்பதும் பெரும் வியப்படையத் தக்க குறிப்புகளாகும்.இதுள் தமிழீழ விடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்பட்ட புலிகள...

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை!

தாலி,தாலி:புலி அறுப்பது, பெண்விடுதலை! "சுகந்தி ஆறுமுகமும்,பெண்ணியல் புழுத்தலும்" -சில குறிப்புகள். இ ன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம். இங்கு, அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைத்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில்(தமிழீழப் போராட்டத்துள் புலிவழிப் புரிந்துகொண்ட தமிழர்களது சுயநிர்ணயம்) இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது. இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய புலி-சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே. இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரையான எல்லைகள் நீண்டுபோவதற்கான அரசியல்வரை, இவர்களது பணி(புலிகளும்-புலிகளது அழிவுக்குப் பின்னான பினாமிப் புலிகள்-நா(கா)டு கடந்த தமிழீழ அரசு) தொடர்ந்தே இருந்தது....

பிச்சை வேண்டாம்...

பிச்சை வேண்டாம்,நாயைப்பிடி:புலிகளது போராட்டஞ் சரியானது! " மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாகத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி "தேசிய உரிமை"பேசுகின்றன." இ னவொதுக்குதலுக்கும்-ஒடுக்குமுறைக்குள்ளாகுமொரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் எதிர்ப்புப்போராட்டமென்பது, அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும். சுயநிர்ணய-விடுதலைப் போராட்டமென்பதைத் தவறான வகையில் "தமிழீழ விடுதலை"என்ற கோசத்துக்குள் உட்படுத்தித் தமிழர்களது ச...