Skip to main content

Posts

Showing posts from October, 2011

அறஞ்சார்ந்த நிகழ்வூக்கப் பெறுமானம்

மக்களைக் காத்தல்: ஜனநாயகம். இதுவரைகாலமாக... உலகம், "சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;" (dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்! கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen ...

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு. ஒ ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது. இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள்...

கடாபி : சர்வதிகாரி !

கடாபி : சர்வதிகாரி இ லிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்"கவுன்சில்"தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார். மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன .அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன. நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen] கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார். இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறடிக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச...

நடுகல்: பிரபாகரன்!

தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பம் ! புலிகளது தலைவர் வே.பிரபாகரனை இந்த [27.11.2011] மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் தரிசிக்கமுடியும்! " சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக ஓயாது வீசும் இந்த மாவீரர் தினக் கொண்டாட்டம் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கைகளில் விடுதலைப் புயல் வீசியபடி மையம்கொண்டு நிற்கிறது. " இங்கே, தலைவர் வே.பிரபாகரன் கார்த்திகை இருபத்தியேழு 2011, பிரசன்னமாவதிலிருந்து புதிய திருப்பமும் உருப்பெறுகிறது... ம னித சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல். தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முர...