Sunday, October 23, 2011

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

"தமிழீழ விடுதலை"ப் புலிகள்:விடுதலை அமைப்பு-சிறு குறிப்பு.

ரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கி,வியாபித்து வருகிறது.

இந்த வியாபித்த விருட்ஷத்தின் முகிழ்ப்பானது புலிகளது விதேசியவாதப் போராட்டத்திலிருந்தே தோன்றிக்கொண்டதல்ல. மாறாக,காலனித்துவக்க காலக்கட்டதிலே கட்டியெழுப்பப்பட்ட பிரித்தாளும் தந்திரமும்,அதன்பின்பு,தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு, அரசியற் போக்குமே காரணமாகிறது.பண்டா செல்வா ஒப்பந்தத் தோல்வியிலிருந்து தமிழ்த் தலைமைகளது அமெரிக்கச் சார்பு,ஏகாதிபத்திய நிகழ்சி நிரல் அரசியலை இளைஞர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றில், புலிகள் வந்தடைந்த ஆயுதப்போராட்டமானது இறுதியில் இந்த நலன்களை வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட ஒரு அரசால் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பக்கச் சார்பிலிருந்து முடித்து வைக்கப்பட்டது.இந்த முகாங்களது பூடகமான முகாங்கள் மகிந்தாவை ஆதரித்தபோது அங்கே,இலங்கை முழுமொத்த மக்களது நலன்களைத்தாம் அவை தமக்குள் உட்கொண்டனவேயொழிய , தமிழ்பேசும் மக்களை மட்டும் மொட்டையடிக்கவில்லையென்பதை எவருணருவார்?


இங்ஙனம் புரிய மறுக்கும் புரிதலேதாம்,கியூப நாட்டுக் காஸ்ரோவையும், கடாபியையும் தமிழர்களது எதிரியாக இனம் காணுகிறது. இந்தப் பிளவடைந்த ஏகாதிபத்திய முகாங்களது பிரிவின் ஒரு தரப்புக்குத் தலைமைதாங்கும்சீனாவும்,ருஷ்யாவும் இலங்கை இராணுவத்தளபதிக்குக் கேடயம் வழங்கியதும்,புலிகளை அழிக்க உதவியதும்,புலிகள் இன்றைய அரேபிய அமெரிக்க அடியாட்படையாகச் செயற்படும் தருணங்களை ஏலவே இனங்கண்டதன் விளைவே!

அதாவது,புலிகள்,விடுதலை அமைப்பு அல்ல.அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது.அது,இந்தியப் பிராந்திய ஏகாதிபத்தியத்தின் தயவிலிருந்து விடுபட்ட தருணமானது மேற்குலகச் சார்புகொண்ட யாழ்பாணியத்தின் கருத்தோட்டத் திசையூக்கத்தின் வெற்றியாகவே புரிந்துகொள்ளத் தக்கது.இந்த வெற்றியைத் தோற்கடித்தபோது,புலிகள் வரலாற்றிலிருந்து தொடைத்தெறியப்பட்டனர் என்பதையும் வரலாற்று வெளிச்சத்தில் வைத்து ஆய்ந்துணரவேண்டும்.

இன்றைய இலங்கையில்,புலிகளது இராணுவ வாதம் தோல்வியில் முடித்துவைக்கப்பட்டபின்,மகிந்தாவால் பரப்பப்படும் ஒரே இனமக்கள்- ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து ஜனநாயகக் குறுக்கல் நிகழ்த்தப் படுகின்றன.எனினும்,இலங்கையில் வெளிப்படையான அரசியலைக் கோருவதற்கும்,அதை நிலைப்படுத்தவும் எதிர்க்கட்சிகள்,சுயாதீனச் சமூகக் கட்டமைப்புகள் இப்போதும் வலுவாக இருக்கின்றன.இது,புலிகளது அரச கட்டமைப்பிலோ அல்லது அவர்களது அமைப்பு மட்டத்திலேயோ இருந்திருக்கவில்லை!தம்மைத் தவிர வேறு அமைப்புகளோ,மக்கள் மன்றங்களோ இருக்க அவர்கள் அனுமதித்ததே கிடையாது.இதனூடாகத் தம்மைத்தாமே"ஏகத் தலைமை"என்றும் அழைத்து இதை உறுதிப்படுத்தினார்கள். சகோதரப்படுகொலையூடாக,மாற்று இயக்ககங்களை அவர்கள் அழித்தபோது,இந்தியாவின் நலன்களுக்கிசைவான பக்கத்தில்நின்று, தமிழ்பேசும் மக்களது விடுதலையைக் காட்டிக்கொடுத்தனர். அநுராதபுரத்தில் சிங்களக்கிராமத்தை; தாக்கி,பலவுயிர்களைக் கொன்று குவித்ததும்,முஸ்லீம் மக்களைக் கருவறுத்ததும்,இதன் தொடர்ச்சிகளாகும்.புலிகள் இந்தமட்டத்தில் ஒரு அடியாட்படைக் குரிய அனைத்துக் குணாம்சங்களையும் கொண்டிருந்தார்கள்.


வெளிப்படையான அரசியலைப் புலிகள் மறுத்ததன்விளைவே புலித் தலைவன் பிரபாகரனது சரணடைவும்,சாவும் இதுவரை மறைக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, எவரிடம்,எத்தனை கோடி மக்கள் சொத்துக்கள் முடங்கின,இறுதி வன்னி யுத்தக்கட்டத்தில் என்ன-எப்படி நிகழ்ந்தனவென்பதெல்லாம் இதுவரை எவருக்குமே தெரியாது.புலிப்பினாமிகள் அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு,மக்கள் சொத்தைத் தமதாக்கித் தலைமறைவாகி விட்டனர்.இத்தோடு ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கும்போது இலங்கையின் அரச வடிவத்தின்மீதான விசாரணைகள் வெளிப்படையாக மேலெழும் தருணங்கள் அதிகமானவை.ஆனால்,புலிகளது வரலாறு,அவர்களது உறவுகள்,தவறுகள்,விடுதலையைக் கருவறுத்த சர்வதேசத் தொடர்புகள்,செல்வம் குறித்தெல்லாம் எப்போதும் எந்தத் தடயமும் கிடைக்காது.இது,பாசிசத் தகவமைப்பின்றி வேறென்ன?-மாபியாக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் இதிலிருந்து வேறுபாடுண்டா?

ஜனநாயகக் குறுக்கலது பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும்.புலிகள் ஏலவே ஜனநாயக விழுமியங்களை நசுக்கியபடித் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கிக் காயடித்த வரலாற்றிலிருந்து அவற்றைக் கற்றுணர்ந்த இலங்கை அரசானது புலிப் பாணியிலேயே இலங்கை மக்களை ஒடுக்கும்சட்டவாக்கத்தை, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி அதிகாரத்தின்வழி கண்டடைகிறது.

சமூக வளர்ச்சியானது எப்பவும் முரண்பாடுகளாலேயேதான் தீர்மானிக்கப்படுகிறது.இத்தகைய முரண்பாடுகள் மனிதர்களின் உழைப்பினாலும் அதன் பங்கீட்டினாலுமே ஆரம்பமாகிறது.இந்தியத் துணைக்கண்ட மக்களினங்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காலனித்துவத்தின் அதீத பாச்சலே காரணமாகிறது.இதனால் சமுதாயம் படிமுறையான வளர்ச்சியை இழந்து,திடீர்ப்பாச்சலுக்குள் வீழ்ந்தபோது பழைய எச்சங்கள்"அரை நிலப்பிரபுத்துவ அரை முதலாளித்துவ-உள்ளகக்காலனிதுவ(சாதிய ஒடுக்குமுறை) அமைப்பாகத் தோன்றி புதிய இரகப் பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கிறது.

இனங்களுக்கிடையில் இனவாதக் குரோதத்தை வளர்த்தெடுத்து அதன்மூலம் தொழிலாள வர்க்கத்தைக்கூறுபோடும் திசையில், தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே தப்பானது.எனினும்,இன்றைய மகிந்தா குடும்பத்து ஆட்சியின் பரிணாமமானது இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவைவிட அதிகாரத்தில் இருத்திவைக்கப்பட்ட அந்த வர்க்கத்தின் ஆட்சி-கட்சி,கட்சித் தலைமையின் அதீத சுயநலப் போக்குகளுக்கும் இசைந்தபோவதான நலன்களை வெளிப்படுத்துகிறது.இதனால்,இலங்கையின் ஆளும்வர்க்கத்துக்கு நிகராக அதிகாரத்திலுள்ள தலைவனின் நலன்களும் மேலெளும்போது இரட்டிப்பான ஒடுக்குமுறைச் சூழலொன்று வன்முறை ஜந்திரத்துக்குள் எந்த விழுமியத்தையும் கோரிக்கொள்ள முடியாது.

தேசங்கடந்த நிதிமூலதனமானது, இன்னும் ஒருபடி மேலே போய் இலங்கை-இந்தியா போன்ற அபிவிருத்தியடையும் நாடுகளைத் தரகு முதலாளியமாகச் சீரழித்தபின் இந்த நாடுகளின் முரண்பாடுகள் மழுங்கடிக்கப்பட்டு-எச்சங்களாகக் காக்கப்படுகிறது.இத்தகைய எச்சமே இன்னும் இனங்களுக்கிடையிலான போட்டிகளையும்,தப்பெண்ணங்களையும் உருவாக்கி அதை வலுவான முறையில் ஆயுதமாகக் கைலெடுக்க முனைகிறது.என்றபோதும்,இலங்கை அரச வடிவத்துள் நிலைமைகளுக்கொப்ப மாற்றங்கள் நிகழ்ந்து வெளிப்படையான அரசியலைக் கோரக்கூடிய சூழல்கள் நெருங்கி வரமுடியும்.

ஆனால்,அந்த வெளிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை இன்றைய புலம் பெயர் மக்கள் மத்தியில் செயல்படும் புலிப் பினாமிகளிடம் கோர முடியாது.அவர்கள் வெளிப்படையான பிரபாகரனது மரணத்தையே மறைக்கும்போது,திரை மறைவில் நிகழ்த அரசியல் சதுரங்கத்தை-உறவை,அடியாட் தனத்தையெல்லாம் விபரிப்பார்களா?ஒரு பயங்கரவாத இயக்கத்திடம் இத்தகைய பண்புகளை இனம் காணமுடியாதென்பதற்குப் புலிகள் அமைப்பே உதாரணமாக இருக்கிறது.புலிகள்ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதனாற்றாம், இலங்கை அரச வடிவம்,அதன் ஜனநாயகப் பண்புகளிலிருந்து எதையுமே செரிக்காத சர்வதிகாரத்தன்மையை இலங்கைக்கே பாடமாகக் கற்பித்தவர்கள்.இதன் தாக்கத்திலிருந்து இலங்கைக் கட்சியாதிக்கம் விடுதலை பெறுவதற்கு நீண்ட காலமெடுக் குமாயினும்,அஃது, எப்படியும் மாறிய தீரவேண்டிய பொருளாதார நகர்வுகள் இலங்கையில் முகிழ்ப்பதானது இலங்கை மக்களது குடிசார் அமைப்புகளது மீள் வரவுக்கு ஏதுவாகவே இருக்கிறது.

இந்தவகையில்,புலிகள் அமைப்பு என்பது தமிழ்பேசும் மக்களது தொங்குசதை பிண்டங்களே.அதை அறுத்து எறியும் சத்திரச் சிகிச்சை செய்யவேண்டியது புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களது கடமைதாம். அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.இதிலிருந்துதாம் புலிகளது பயங்கரவாதச் சேட்டைகளையும்,பண மோசடிகளையும்,கொலையையும்,கொள்ளைகளையும் தடுக்க முடியும்.அவர்கள் பேசும் போலித் "தமிழர் தாயகம்" எனும் வியாபார விளம்பரத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல.ஏனெனில்,புலிகள் பயங்கரவாத அமைப்பென்பது இன்றைய வரலாறக நிற்பதே நிசமான அரசியலது வெளிப்படை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.10.2011

13 comments:

Anonymous said...

Nandri illa baadu

Swami Sreeni said...

மிகவும் வக்கிரத்தனமான ஒரு கட்டுரை. சரி... உங்களை போன்ற "நியாயமான" பார்வை கொண்ட தர்ம தமிழர்களின் பார்வையிலும் சிறிலங்க சிங்கள அரசின் கூற்றின் படியும் புலிகள் தான் முழுவதுமாக அழிந்து விட்டார்களே? ஏன் மீண்டும் மீண்டும் உங்களை போன்ற பெருமார்கள் புலி துவேசத்தை துப்புகிறீர்கள்? புலி தலைவரும், அவர் குடும்பமும், முக்கிய தளபதிகளும் தான் முழுக்க அழிந்து போனார்களே! இன்னும் எதற்கு இந்த அவதுறு பிரசாரம். நவம்பர் வருவதால் எதாவது கேட்ட கனவு வந்ததோ?

Swami Sreeni said...

........ அதுவொரு அந்நிய ஏகாதிபத்தியங்களது கைக்கூலி அடியாட்படையாகவே தென்னாசியப்பிராந்தியத்தில் வளர்ந்தது..........

அது எந்த அந்நிய ஏகாதிபத்தியங்கள்?

Swami Sreeni said...

.....அதுபோன்றே,தமிழ் பேசும் மக்களது அரசியல் வாழ்வு,உரிமைகள் குறித்து இனியாவது வெளிப்படையான அரசியலோடு தமிழ்க் கட்சிகள் இலங்கை அரச ஆதிக்கத்துக்கு முகங்கொடுத்தாக வேண்டும்.......

அப்போ செல்வாவில் இருந்து அமிர்தலிங்கம் வரை மூடிகொண்டு தான் அரசியல் நடத்தினார்களா?

Swami Sreeni said...

........தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.......

புலி அரசியல் ஒரு 22 வருடமாக தானே இருந்தது. அதற்க்கு முன்பு எங்கு இருந்ததது புலி அரசியல்? அதற்கு முந்தய கால அரசியலில் என்ன நடந்தது, எப்படியெல்லாம் தமிழ் மக்கள் முட்டாளாக்க பட்டார்கள் என உங்களுக்கு தெரியாதோ? சரி...அதெல்லாம் இருக்கட்டும், மகிந்தவிடம் இருந்து எவ்வளவு பணம் வந்தது? நானும் இது போல கைவசம் பல புலி எதிர்ப்பு இலக்கிய கட்டுரைகள் வைத்து இருக்கிறேன்.

Swami Sreeni said...

என்னுடைய பின்னுட்டங்களை வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நன்றி. உங்கள் எழுத்து திறன் நன்றாக இருக்கின்றது. ஆனால் எழுத்து ஆளுமை தான் விசமத்தனமாய் உள்ளது. உங்களின் எண்ணங்களை வெளிபடுத்த இப்படி என்றால் அது உங்கள் விருப்பம். நானும் உங்களை போல தான் இருந்தேன். பிறகு தான் தெரிந்தது, இடது சரி சிந்தனைகளிலும் நச்சுத்தனம் இருப்பது. காலம் உங்களை மாற்றலாம், சில உண்மைகளை உணர்த்தி. நன்றி!

Sathiyanarayanan said...

/* தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது. */

அப்படியா, புலிகள் இல்லை என்று சொல்கிற சிங்களவன் இன்னும் எம்மக்களுக்கு தன்னுரிமை வழங்கவில்லையே ஏன், புலிகள் இன்னும் இருக்காங்களோ? இல்ல உனக்கு துக்கத்தில் எழுதுற நோய் இருக்கா?

Sathiyanarayanan said...

/* தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயவுரிமையின் உண்மையான இலக்கை எட்டுவதற்குப் புலிகளது திரைமறைவு அரசியலே இதுவரை தடையாக இருக்கிறது.

இதை உணரும்போது,புலிகளை அழித்த வரலாறானது புலிகளோடு அழிக்கப்பட்ட மக்களுக்காகவேதாம் இலங்கைமீது பழி சுமத்த முடியுமே தவிர,புலித் தலைமைக்காக அல்ல. */

மேலே உள்ள இரண்டு கருத்துக்கும் முரண்பாடு உள்ளதே, உனக்கு துக்கத்தில் எழுதுற நோய் இருக்கா?

Sathiyanarayanan said...

/* பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிரான, ஜே.ஆர்.ஜெயவர்த்தினா வின் ஆர்ப்பாட்டம்- கண்டி நோக்கிய பாத ஜாத்திரையும்,தமிழ்ப் பகுதியில் அமிர்த லிங்கத்தின்தலைமையில் சிங்களச் ஸ்ரீ எழுத்து அழிப்பு,சிங்கள எழுத்துப்பலகைகள் அகற்றும் போராட்டத்துக்கும் அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ.யின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. */

உன்னோட வீட்டுக்குள் வந்து எவன் எதை வேண்டுமென்றாலும் எப்பொழுதும் செய்யலாம் அதற்க்கு எந்த தடையும் இல்லை என்பது போல் உள்ளது உன் வாதம், அதை தடுத்தால் தீவிரவாதமா?

Sri Rangan said...

@Swami Sreeni,
Sathiyanarayanan,

"தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா மகனே!"-என்பார்,என் தாயார்.இது எல்லோருக்கும் பொருந்தும்.

Sathiyanarayanan said...

/* "தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா மகனே!"-என்பார்,என் தாயார்.இது எல்லோருக்கும் பொருந்தும். */

நாங்களும் அதை தான் சொல்கிறோம், "தம்பி,அம்புலியை ஞானி காட்டினால் நீயோ அவரின் சுண்டுவிரலைப் பாராதே.மாறாக அம்புலியை நோக்கடா". இது உனக்கும் பொருந்தும்

Sathiyanarayanan said...

கட்டிக்கொடுத்தலும், கூட்டிக்கொடுத்தலும் ஒன்னு தான்

எம்மக்களுக்கு நீ என்ன செஞ்ச?

நீ என்ன எறும்புக்குக் கூட தீங்கு இழைக்காத சித்தனா?

Sri Rangan said...

@ Sathiyanarayanan,அப்படியே ஆகட்டும்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...