Thursday, October 20, 2011

கடாபி : சர்வதிகாரி !

கடாபி : சர்வதிகாரி

லிபியாவின் நீண்டகால ஜனாதிபதி மௌமார் அல் கடாபியின் [Muammar Al-Ghaddafi]உயிர் பறிக்கப்பட்டுள்ளது.இதை நோட்டோ இலிபியாவின் இடைக்காலத் தேசியக்"கவுன்சில்"தலைவர் முகமட் இட்சிபிரில் [Mahmud Dschibril]வியாழன், 19.10.2011 இல் தெரிவித்திருக்கிறார்.

மேற்குலக ஊடகங்கள் ஆர்ப்பரிக்கின்றன.அவை,தமது இலக்கும்-பொய்மையும் நன்றாகக் கடைவிரித்து வியாபாரமாவதை (உலகந்தோறும்) பார்த்து மகிழ்கின்றன.

நேட்டோவின் ஒட்டுக் குழுவின் [Rebellen]கையில் உயிருடன் பிடிபட்டுப்போன இலிபியாவின் தலைவர் நேட்டோத் தலைமையின் கட்டளைக்கிணங்கப் படுகொலை செய்பட்டிருக்கிறார்.

இலிபிய வரலாற்றைக் கற்பவர்களுக்கு அத்தேசத்தின் வரலாறு எங்ஙனம் அந்நியப் படையெடுப்புகள் மூலம் சிதறடிக்கப்பட்டதென்பது புரிந்திருக்கும்.கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இலிபியத் தேசம்-தேசமெனும் கருத்துவடிவம் உருவாகுவதற்கு முன்பே,மூன்று நகரங்களை இணைத்துத் தேசமெனும் வடிவத்துக்கு வளர்ந்துகொண்டது. சபரத்தா,ஓயா,லிபிட்டிஸ் மக்னா [ Sabratha, Oea, Leptis Magna ] போன்ற பெரு நகரங்கள் தமக்குள் இணைந்து ரிப்போலிற் [Tripolitanien (Drei-Städte-Land) ]அரச பரபாலனத்துக்கு இசைந்தவை.இத்தகைய காலத்திருந்து இன்றைய இலிபியாவரையும் இந்த மண் அந்நியப் படையெடுப்பு-காலனித்துவத்துக்கு உட்பட்டிருக்கிறது.கார்த்தாக்கோ[Karthagos](இன்றைய இருனிசியா)அரச ஆதிக்கத்துக்கு (கி.மு.6 ஆம் நூற்றாண்டு) உட்பட்டபோது, அதன் தலைவிதியை ரோம இராச்சியம் விழுங்குவது நிர்ணயமானது.கி.பி.395 வரையில் ரோமிய இராச்சியத்துக்குள் வீழ்ந்துவிட்ட வட ஆபிரிக்க வலையமானது தனது முழு ஆளுமையையும் இன்றுவரை மீளப் பெறமுடியாமலே போய்விட்டது.


நவ காலத்தில் தேசங்கள் உருவாகி,சுயாதீனமுடையவைகளெனப் பீத்திக்கொண்ட"தேசிய அரசு"வடிவமானது மாற்று இனங்களை ஒட்ட மொட்டையடித்தபோது அவை காலனித்துவம் என அழைக்கப்பட்டது.1934 ஆம் ஆண்டில் இந்த இலிபியா இத்தாலிய இலிபியாவென இத்தாலிய ஏகாதிபத்தியத்தால் அழைக்கப்பட்டது. இப்போது இஃது "நேட்டோ இலிபியாவாக" மாறிவிட்டதை நான் உணர்கிறேன்.

மன்னன் செனுசி ஐடிறிஸ்[ Senussi, Idris I.] கீழ்-1951 வாக்கில், பேருக்குச் சுதந்திர இலிபியாவாக பிரகடனப்படுத்தப்பட்ட இந்த இலிபியா 1959 இல் எண்ணை வளக் கண்டுபிடிப்புகளால் மேற்குலகத்தின் பிடிக்குள் முழுமையாகவே கொணரப் பல கெடுபிடிக்குள் வீழ்ந்தது. என்றபோதும், 1.செப்டெம்பர் 1969 ஆம் ஆண்டு இலிபியா, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவேண்டிய "புரட்சியின்" விளைவு, மன்னன் ஐடிறிஸ்,அவன் மனைவி பாத்திமாவையும் [Fatima ]கூட்டிக்கொண்டு கைரோவோக்கு[ Kairo] புகலிடம் புகவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.அதை செய்த "புரட்சிகர தளபதி" மௌமார் அல் கடாபி என்பது இன்று என் சிந்தையில் நிழலாக விரிகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு,இராணுவ-எண்ணை விற்பனை உறவுகளென [ vom 1975 schloss Libyen ein Abkommen über wirtschaftlich-technische und militärische Zusammenarbeit mit der UdSSR]இருஸ்சியாவோடு கூட்டுறவு வளர்ந்த 1975 ஆம் வருடக் காலப்பகுதியில் இருஸ்சியா இலிபியாவின் சுயாதீனத்துக்கு ஓரளவு உடந்தையாகவே இருந்திருக்கிறது.

இன்றைய இருஸ்சியாவானது சோசலிசத்தகர்வுக்குப் பின்பான முதலாளியத் தேசிமாகியபின் பலவகைகளில் இலிபியாவைக் கைவிட்டது.அதன் காரணங்கள் பல.குறிப்பாக,இருஸ்சியாவானது மேற்குலகத் தேசங்களுக்குத் தனது சொந்த எண்ணை-எரிவாயு வியாபாரத்தில் அதிக இலாபமும்,முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பதால் கடாபியைக் கைவிடவேண்டுமென்று ஜேர்மனியும் வற்புறுத்தியது.இதற்காக ஜேர்மனிய அரசு, இருஸ்சியாவுக்குக் கொடுத்த வெகுமதி "நோர்த் ஸ்றீம்"எரிவாயுக் குழாய்[ Nord-Stream-Pipeline] ஒப்பந்தம்.

இந்தக் குழாய்த் திட்டமானது, எரிவாயுவுக்காக ஜேர்மனிய மக்கள் இருஸ்சியாவில் தங்கி இருப்பதைச் சாத்தியமாக்கி விட்டது.

கஸ்பியின்வலய எண்ணை வளமானது இருஸ்யாவிடமே இருக்கிறது.இதைக் கைப்பற்றும் மகா சதுரங்க ஆட்டத்தை அமெரிக்கா ஜோர்சியா மூலம் ஒக்டோபர் 2008 இல்செய்து பார்த்து(ஜோர்ச்சிய-இருஸ்சிய யுத்தம்) மூக்கு உடைந்துபோனதைத் தற்காலிகமாகத் தேற்றிக்கொள்ளவே இலியாவைப் பலியெடுக்க, ஜேர்மனிய அரசுமூலம் இருஸ்சியாவைக் கட்டிப் போட்டிருக்கிறது.

இலிபியாவின் கூட்டணி-நட்பு நாடுகளாகவும்,எண்ணை வள உற்பதி-ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்த சீன,இருஸ்சிய அரசுகள் தமது சங்காய் ஒப்பந்தக் கூட்டணியையே [Shanghai Cooperation Organisation] ஒரு வியாபாரக் கூட்டணியாக மாற்றிக்கொண்டுள்ளது.

கடாபியை நோட்டோ அணி படுகொலை செய்துவிட்டதானது,கடந்த நாற்பது ஆண்டுகால மேற்குலகத்தின் வட ஆபிரிக்கா மீதான ஆதிக்க ஊசாலாட்டத்துக்குக் கிடைத்த பலமான வெற்றிதாம்.



கடாபியை நரபலி செய்ததன்மூலம், இனி ஸ்த்திரமான ஆதிக்கத்தை வட ஆபிரிக்காவில் மேற்குலகஞ் செலுத்த முடியும்.கடாபி இல்லாத இலிபியாவானது கி.மு.700 ஆண்டளவில் ஏகிப்திய சாம்பிராஜ்யத்தினது வல்லாதிகத்துக்கு உட்பட்ட மண்ணைப்போன்றே இருக்கும்.

1977 மட்டில் கடாபியால் உருவாக்கப்பட்ட சோசலிச அரேபிய மக்கள் குடியரசு இன்று சர்வதிகாரத்துக்குள் கிடந்த இலிபியாவாக மேற்குலகங்களால் சொல்லப்படினும்,இலிபியாவானது கடாபியால் சிறந்தே இருந்தது.

தேசத்தின் சொத்தாக எண்ணை வளம்,6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி ,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சம்பளத்துக்குக் குறைவாகச் சம்பளம் கொடுப்பது தடுக்கும் சட்டம் கொணரப்பட்டதும்,இலிபியாவிலிருந்து வட-தென் சூடான்வரை சென்ற நீர் பாசனத் திட்டத்துக்கெல்லாம் [ Great-Man-Made-River-Projekt ]படுகொலை செய்யப்பட்ட கடாபியே ஸ்த்தாபகர்.

மேற்குலகஞ் சொல்லும் "சர்வதிகாரி" என்பது, மேற்குலகத்துக்கும்,தமிழ்ச் சூழலில் புலிப் பயங்கரவாதிகளுக்குமே பொருந்தும்.

மக்களது உரிமை,சுதந்திரம்,ஆதிக்கச் சக்திகளிடமிருந்து எங்ஙனஞ் சிதைக்கப்பட முடியுமென்பதற்கு இன்னும் எத்தனை தேசங்கள் சூறையாடபபட்டு வராலாற்றில் உதாரணமானாலும் புலிவால்களுக்கு இந்த சூத்திரம் புரியவே புரியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2011

No comments:

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...