மைடானில் கழுகும், கிரிமியாவில் கரடியும் ! அணைகளை உடைத்து வெள்ளத்தைப் பெருக்கி அழிவைத் தந்தவனே மீட்பனாக வருகிறான் , அழிவுகளை அளப்பதற்கு அவனுக்கான காலம் வஞ்சகத்தின் வலையிற் சிக்குண்ட ஊழ் எதிர்வு கூற முடியாத மூர்க்கத்தின் வஞ்சக முயற்சிகள் இயற்கையைச் சிதைத்ததுக் கிடக்க இதயமே அற்ற மானுட சுய இலாபம் மற்றெல்லா உயிரையும் வருத்தி உண்ட திசையில் நஞ்சு கலக்கும் நாசகாரிகள் சனநாயகம் உரைக்கும் ஐரோப்பிய இனங்களாம் வரலாறு பூராகவும் வஞ்சகமே ஆதிக்கமாய் அரசாய் , சட்டங்களாய் கோலாச்ச ஆயுதங்களின் இருப்பில் ஆளாளுக்கு நீதி பரிபாலனமாம் சவங்களை விதைத்து குற்றுயிரில் குடிகளை வைத்துப் பொய்களையே சுவாசிக்க வைக்கும் ஊடகங்களின் உழவாரத் தொண்டில் ஊனம் மட்டுமே நியாயம் என்றாச்சு ! மோதல்களின் தொடர்ச்சியே புதியதன் விசும்பு முகிழ்ப்பதற்குக் காத்திருக்க கயவர்களது கவட்டுக்குள் அரும்பிய எல்லா நியாயங்களும் வஞ்சகமாய் கருவரும்பி யுத்தங்களாய்ப் பிறக்க-நீ, கடவுள்கள் குறித்தும் , மார்க்கம் குறித்தும் மனதுக்கேற்றபடி வம்பளந்து நரமாமிசம் புசிக்கின்றாய்-மகளையாவது ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்