Skip to main content

Posts

Showing posts from 2008

வருக புத்தாண்டே, வருக!

"புது வருஷம்" உயிர் உதிரும் உடலும் உணர்வுந்துறந் தொதுங்குங் களத்தில் புதிதாய்ப் புலம்ப வருக புத்தாண்டே, வருக! தாயும் சேயும் வான்படைக் குண்டாற் சிதையுமொரு தெருவில் வன்னி விடுவிப்புக் கொடும் போர் துரத்தக் கொடுங் கோன் முறை அரசு செய் மகிந்தா தமிழாய் உதிர்க்க தமிழர் இல்லமும் வீழ்ந்தது இரத்தமும் கொட்டியது சிதறிய அன்னை விழியில் ஈக்கள் மொய்த்தன ஒன்றாய்ப் பத்தாய் இடியாய் நீ கொட்டிய குண்டுகள் மக்களுக்கானது அல்ல என்பாய் பயங்கர வாதத்துக்கு எதிர் எனும் பம்மாத்து இலங்கைத் தேசியத்துள் என்னைக் கரைக்க முனைகையில் ஆத்தையின் பிணத்தில் அடுப்பெரித்து அன்னம் புசிக்க -நீ அரிசிப் பருக்கை இட்டு யாழ்ப்பாணத்தில் வடக்கும் தெற்கும் ஒன்றாய்ப் புணர்ந்ததை ஒப்புக்குரைத்து கிழக்கின் வசந்தம் மீட்டுகிறாய் ஒத்துக் கொள்கிறேன், வடக்கும் தெற்கும் பிணைந்தே கிடக்கட்டும்! அதுவே வரலாறு முழுதும் சாத்தியமுங்கூட-இஃது சரியானதுங்கூடத் தலைவரே!இலங்கைத் தேசத்தின் ஒப்பாரும் மிக்காருமற்ற தேசியத் தலைவரே-நீ ஐ.நா.வில் மட்டுமல்ல யாழ்பாணத்துக்கும் தமிழில் உனது அரசியலை மொழி பெயர்க்கிறாய் வான்படை வழி தேசத்தின் மொழிகள் இரண்டையும் தெரிந்த...

இஸ்ரேலின் அத்துமீறிய யுத்தம்:

"காஸாப் பள்ளத்தாக்கெங்கும் குருதியாறு ஓடுகிறது!" கடந்த முப்பத்தியாறு மணி நேரத்துக்குள் சுமார் 360 பாலஸ்தீனியர்கள் காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலால் கொல்லப்பட்டும்,1000 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.காயப்பட்ட அப்பாவி மக்களில் 80 வீதமானவர்கள் படுகாயமடைந்து இறக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் என்றும் ஜேர்மனிய ஊடகங்களும்,அல் ஜெசிரா தொலைக்காட்சியும் தெரிவிக்கிறது! "நாம் நடத்தும் வான் தாக்குதல் மக்களைக் குறி வைத்தல்ல.மாறாக,காமாஸின் கட்டமைப்புகளை நோக்கியது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரானதேயொழிய மக்களுக்கு எதிரானது அல்ல"-இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர். ஒரே குரல்,ஒரே அர்த்தம்! உலகம் பூராகவும் ஒடுக்கு முறையாளர்கள் ஒரே இலக்குடன் செயலாற்றுகிறார்கள்.அது,மகிந்தாவானாலுஞ்சரி அல்லது இஸ்ரேலியப் பாதுகாப்பு மந்திரியானாலுஞ்சரி எல்லோரும் ஒரே தளத்தில் நிற்கின்றார்கள். "பொது மக்கள் இதற்கான விலையக் கொடுக்கவேண்டியதும் கவலையானது"-சிபி இலீவ்னி இஸ்ரேலிய வெளிவிவகார மந்திரி .அன்றைய அமெரிக்க வெளிவிவகார மந்திரி அல்பிறைட் அம்மையாரை விழிமுன் நிறுத்துகின்றார் சிபி இலீவ்னீ(Außenministerin ...

கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்

தீபம் தொலைக்காட்சி: "கண்ணீர் வெள்ளஞ் சொல்லிக் காசு சேர்க்கும் கயவர் கூட்டம்". -சிறு குறிப்பு. இலங்கை மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனம்,மொழி,மதங் கடந்து, தாம் அனைவரும் இலங்கையின் குடிகள்-உழைப்பவர்கள் என்றுகூவி அணிதிரளமுடியாதளவுக்குத் தமிழ்-சிங்களக் குறுந்தேசிய வெறிகளை மக்கள் விரோத அதிகார வர்க்கம் திட்டமிட்டுப் புனைகிறது!மக்கள் தத்தமது முயற்சியிலும்,உழைப்பிலும் காலத்தைக் கழித்துவரும்போது இத்தகைய மனித விரோதிகள் தத்தமது இருப்புக்காகப் புதிய,புதிய பாணியில் இனவாதத்தைக் கக்கி வருகிறார்கள்.இத்தகைய இனவாதிகள் கட்டித் தகவமைக்க முனையும் கருத்துவெளியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களுக்கும் எதிரானது! "தமிழீழம்" கதை புனைந்து மக்களின் வாழ்வைக் கருவறுத்தவர்கள், யுத்தத்தைச் சொல்லி இதுவரை பணப்பெட்டிகளை நிறைத்தவர்கள், சுனாமியைச் சொல்லிச் சுதந்திரமாக உலக மக்களின் உதவிகளைச் சொந்தச் சொத்தாக்கியவர்கள், இலட்சம் மக்களின் உயிர்களைக் குடித்தபின்பு இன்னும் தமிழீழம் கேட்டுவருபவர்கள், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கனுப்பிப் பாதுகாத்தவர்கள் மாற்றான் பிள்ளைகளைப் பிடித்துக் களத்துக்கு அனுப்புவத...

இலங்கையராய் இருக்க...

எ ன்னமாய்ப் போகிறது உலகு இருப்பவருக்கும் இறப்பவருக்கும் இடையிலிருக்கும் ஒரு நூலிழை காற்றில் ஒன்றும் ஒரு விசை கடுமனங்கொண்ட கண்ணீரும் கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும் தற்குறியாய்ப் போகும் தலைமுறையும் தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும் தாமரை இலை நீராய் உருண்டுபோகும் உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய் ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவிலங்கையர்கள் இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு! கடுமழையில் விழுதுடையும் ஆல்போல் கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும் கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும் பாழுமிந்து தமிழ்த்தேசிய அரசியல் விட்டு வைக்கா பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும் பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய் இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள் வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண் புலி-சிங்கம் வடிவில்! மெல்லப் பாடும் தென்றலும் மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும் மெட்டு விரிக்கும் முல்லையும் மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுகள் கண்ணைத் திறந்து வைத்துக் கப்பல் கட்டும் தம்பியும் கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும் அ...

பிணங்களைப் புணர்வதில் உலகமே உடந்தையாக!

அன்பு வாசகர்களே,வணக்கம்! மகிந்த இராஜபக்ஷ போப்பாண்டவரோடு கைகுலுக்கியபடி தனது வன்கொடுமை இராணுவத்தைக் காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் போராளிப் பெண்களைக் கொன்று புணருகிறான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியென்றபடி தமிழ்பேசும் மக்களைப் பாலியல் ரீதியாத்தாக்கிச் சிதைத்து,மானபங்கப்படுத்திக் கொன்று குவிக்கும் இராணுவச் சர்வதிகாரியாக இந்த இலங்கையின் சிங்களத் தலைவன் புத்தனுக்கும்,கிறிஸ்த்துவுக்கும் புகழ்பாடுகிறான் இன்றைய தினங்களில்!.ஆனால், உயிரோடிருக்கும் மனிதரைக் குண்டுகள்போட்டுக் கொன்றபடி... இலங்கையின் தேவாலயங்களின் அழகாக உடைத்தரித்து வழிபடும் பெண்கள் தமது சகோதரிகளைப் புணரும் ஒரு தேசத்தில் கிறிஸ்துவுக்குக் கொண்டாட்டஞ் செய்து பூரிப்படைகிறார்கள்!நாளை இவர்களையும் புணரும் இன்னொரு வடிவமாக இந்தப் பாசிச அரசுமாறும்போது, இவர்கள் எவரைத்தாம் துதிப்பாரோ? எமது,மக்களின்-போராளிகளின் வாழ்வைச் சிதைப்பதற்கு எத்தனை வடிவங்களிலிருந்து இந்த இராஜபக்ஷ முனைகிறான்! மக்களுக்குத் தலைமை தரும் உத்தமனாகத் தன்னைவுலுகுக்குக்காட்ட போப்பாண்டவரிடம் ஆசிபெறப் போகிறான்.அங்கே,தமிழ்பேசும் மக்களைப் புணர்வதற்கான அங்கீகாரத்தைப் பெற்ற...

சில குறிப்புகள்

தமிழ்மக்களும் புலிகளும்,இலங்கை அரசும் புலிகளின் அடிமட்டப் போராளிகளைக் காத்து நமது மக்களின் அடுத்த கட்டப் போராட்டப் பாதையைத் தகவமைப்பது குறித்து,நமது மக்கள் இன்று நடைபெறும் போருக்கெதிராகக் குரல் கொடுக்கவும்-அது,இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வெடித்துக் கிளம்பியாக வேண்டுமெனக் கூறிய நான், இப்போது பிரமைக்குள் காலத்தைக் கடத்துகிறேன்! புலிகள் இயக்கத்தை உலகநாடுகள் பல எதிர்க்கின்றன-தடைசெய்கின்றன,அவைகளுக்கான நலன் அடிப்படையில் இவை நிகழ்கின்றன.இது, புலிகளுக்குப் பாதமாக இருப்பினும்,சாரம்சத்தில் புலிகள்சார்ந்த மக்களின் ஆதரவு இருக்குமாயின்-மக்களோடு மக்களாக இருக்கும் பட்சத்தில் எவரும் எந்த அமைப்பையும் அழித்துவிடமுடியாதென்பது உண்மை.ஆனால்,சொந்த மக்களே இப்போது புலிகளுக்கெதிராக ஊர்வலம்-ஆர்ப்பாட்டஞ் செய்கிறார்களென்றால் புலிகளின் நிலை என்ன?அதுவும் பல்லாயிரக்கணக்காகத் திரண்டு புலிகளை எதிர்த்து ஊர்வலம் போகிறார்கள்!இது, நமது போராட்ட வரலாறில் எப்பவும் நிகழ்ந்தது இல்லை. கடந்தகாலங்களை, இராணுவம் கைப்பற்றிய வலயத்துள் வாழநேரிட்டதன் அடிப்படையில், தமது அன்றாட வாழ்வைக் கவனித்தார்களேயொழிய ஈழப்போராட்டத்துக்கெதிராக ஆர...

அந்நியத் தேசங்களை நம்பிய புலிகள்

நீ மரிப்பதற்குத் தயாராகிவிடு தேசம் பறிபோவதற்குள் உனது குருதியை அவர்கள் பறித்துக் கொள்வதில் களைத்திருக்கும் வேளை மெல்லச் சாய்த்திருக்கும் கருவியை இயக்கு அவர்கள் ஓராயிரம் குண்டுகள் பொழிவதனால் பிழைத்துக் கொள்வார்கள் வெள்ளைத் தேசமெங்கும் ஆயுதம் விற்று விடிதலுக்கு இன்னுஞ் சில கணமே நீ நெஞ்சு நிமிர்த்திச் சூரியனைப் பார்ப்பதற்குள் இருள் கவிந்துவிடுமாயின் தூரப் போய்விடு தமிழர்மீதான உலக யுத்தமே என்றுவிடு கடிப்பதற்குச் சயனைட்டும் குடிப்பதற்கு ஆற்று நீரும் உன்னைக் காத்திருக்கும் நியாயம் என்பது மரணத்தில் ஒப்பிக்கப்படும் நெடிய வானம் உனக்கான தேசத்தை தன் பருத்த உடலுக்குள் புதைத்திருக்கு தேகத்தைத் தொலைப்பவர்களுக்கு தெளிவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதற்கில்லை கரும் புகை உனது சுடு கருவியிலிருந்து வெளிவருவதற்குள் உனது உயிர் பிரிந்து போகலாம் மௌனித்திருக்கும் உனது வாய்க்குப் பதிலாக விழிகளால் பேசிவிடு ஓ...நியாயமற்றவர்களே! ஆசையைத் துறக்கச் சொல்லிய உங்களது புத்தர்கள் உயிர் கொல்வதற்கு எப்போது கற்பித்தார்கள்? அவர்களது செவிகளுக்குக் கேட்கும்படி கேட்டுவை ஏனென்றும் எதற்கென்றும் கேட்க நாதியில்லையானால் எவருக்காவும் எதற...

இலங்கை:யுத்தத்துக்கான கட்சி,இயக்க அரசியல்.

இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது இலங்கையிலா நடக்கிறதான பார்வையில் வாழ்கிறார்கள்.வன்னியிலோ மக்கள் சிங்கள வான்படையால் கிளெஸ்டர் குண்டுகள் போடப்பட்டு அழிக்கப்படுகிறார்கள்.என்னவொரு தந்திரமாக இலங்கை அரசு யுத்தத்தை நடாத்துகிறது!இதன் பின்னே ஒளிந்து,இவ்வகை யுத்தத்தை வழி நடாத்துபவர்கள் யார்?இவர்களுக்கும் இலங்கை யுத்தத்துக்கும் எதுவரையிலான உறவுகள் பிணைந்துள்ளன? இலங்கையின் ஆளுங்கட்சிகள்,எதிர்கட்சிகள்,இயக்கங்கங்கள்-குழுக்களென சொல்லமுடியாதளவுக்குப் புதுப்புது குழுக்கள் இவ் யுத்தத்தோடு சம்பந்தமுடைவையாக இருக்கின்றன.எனினும்,அழிவது மக்கள்.புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் மிக இயல்பான வாழ்வுக்குள் தமது பழையபாணி வாழ்வைத் தகவமைத்து வருகிறார்கள்.அவர்களின் பின்னே இலங்கை ஆதிக்கம் தமிழ்ப் பிரதேசமெங்கும் மிகச் சாதாரணமாக நிலைபெற்று வருகிறது.ஆனால், தமிழ்க் கட்சிகள் மிகவும் மோசமான-விலாங்குத் தனமான அரசியலைச் செய்து ...

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும். இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம். "பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக! இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிக...

தலைவரின் உரையைக்கடந்து...

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும். -புரிதலுக்கான உரையாடல். 2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை மேலும் போராட்டத்தோடும்,புலிகளோடும் ஈழத்தைக் கனவுகாணவும்,நிதிப் பங்களிப்புச் செய்யவும் அவர் தனது பங்களிப்பைச் செய்துவிட்டார்.எனினும்,சிங்கள அரசு போரை நிறுத்தி மக்களினது நலன்களைக் கவனிக்கப் போறதில்லை!அது,இந்திய மத்திய அரசின் சொல்படி யுத்தத்தில் முனைப்புற்றுப் புலிகளைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்துவருகிறது. தேசியத் தலைவரின் உரை மிக உருக்கமானதாக இருக்கிறது.எப்போதும்போல நாம் அதை இப்போது,உடைத்துக்கூத்துக்காட்ட விரும்பவில்லை!அவர் புலம் பெயர்ந்த இளைய தலைமுறையை மையப்படுத்துகிறார்.இது சரியானதே.எனினும்,தமிழ்பேசும் மக்களைப் புலித் தலைமை ஏமாற்றிய தவறை அவர் இன்னும் உணர மறுக்கிறார்! இந்த நிலையில்,இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே ...