Skip to main content

Posts

Showing posts from March, 2007

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்-2

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்-2 (தொடர்) ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவரும் பின்னைய காலங்களில்(1997-2001)அமெரிக்காவின் வெளித்துறை மந்திரியுமான மெடாலின் அல்பிறைட்;(Madeleine Albright)அம்மையாரை பலர் அறிந்திருப்பார்கள்.அமெரிக்கா என்பது முதலாளித்துவத்தின் மிகக் கொடு முடியென்பதும்,அதன் ஒவ்வொரு அசைவும் நிதி மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கும்,உலகை அடியோடு சுரண்டுவதற்கும் என்பது பொதுவான கருத்து.ஆனால் அமெரிக்காவானது உலகை மட்டுமில்லை இந்தப் பிரபஞ்சத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொணர முனையும் அபாயகரமான விஞ்ஞானப் பலம் கொண்ட நாடு.இந்த அமெரிக்காவை நிலை நிறுத்தியது அவர்களின் கொடூரமான இராணுவமோ அல்லது அந்த நாட்டின் நிதி மூலதனமோ அல்ல.அந்த நாடு தன்னை மேல் நிலைப்படுத்தத் தொடங்கிய தாக்குதலை விஞ்ஞானப் பலத்தோடு கட்டியமைத்த ஆண்டு 6.ஓகஷ்ட்டு 1945 ஆகும்.அன்றுதாம் இவ்வுலகைக் கரியாக்கும் அணுக் குண்டை அமெரிக்கா மனிதப் பெரும் பரம்பலுக்குள் வெடிக்க வைத்துப் பரிசீலித்த அதி துயரமான நாளை உலகுக்கு அமெரிக்க முதலாளிகள் அறிமுகப்படுத்திய நாள்!கீரோசீமா(Hiroshima)குலைந்து எரி பிண்டங்களாகச் சிதறிக்கிடந்...

பனிப் போரொன்று:National Missile Defense...

மீளவும் பனிப் போரொன்று உலகைக் கவ்வும்! அமெரிக்காவுக்கே முன்னுரிமை!America first ! -Woodrow Wilson 1916 . கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.அமெரிக்காவே முதன்மையானது.என்ற கருத்தியிலூடாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தூடாகப் பதவியை இரண்டாவது தடவையாத் தக்க வைத்த அன்றைய ஜனாதிபதி வில்சன். முதலாம் உலக யுத்தத்தில் சிதறப்பட்ட ஐரோப்பா வலுவிழந்துகிடக்க அமெரிக்கா மிக வலுவாக எழுந்த காலமது. இந்தக்காலத்துள் முகிழ்த்த நவகாலனித்துவக் கொள்கைக்கு வில்சனின் அரசு முனைப்பளித்துபோது காந்திகள் எல்லாம்"மகாத்துமா"என்பதாக உயர்ந்தார்கள்.பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் பொய்மையான விடுதலைக்கு வந்தன-நவகாலனித்துவ அமெரிக்கப் பொறிக்குள் அமிழ்ந்தன.இரும்பு விலங்குக்குப் பதிலாக பொன் விலங்கிடப்பட்டது. இத்தகைய தொடர் நிகழ்விலிருந்து அமெரிக்கா இதுவரை தனது மேல் நிலையைத் தக்க வைப்பதற்காக எத்தனையோ கோடிகள் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இன்றைக்கு இலங்கை அரசியலில் நடந்தேறும் அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளை பயனாக மேன் மேலும் விருத்தியாக அறுவடையாகிறது....

"எங்களது அழகான,புதியவுலகம்"

"எங்களது அழகான,புதியவுலகம்" 1991 இல் இருந்து 2001 ஆம் ஆண்டுவரைக்குள் இந்த ஜேர்மனிய ஆளும் வர்க்கத்திடம் வட்டியாகச் சேர்ந்த பணம் 3332 பில்லியன்கள் டொலர்களாகும் (Quelle:Budesbank/BMA) என்னடா இவ்வளவு தொகை வட்டியாக வந்திருக்கே இது யாரிடமிருந்து வந்திருக்கு? எவரால் இது சாத்தியமாச்சு-யாரிதைத் தாங்குகிறார்கள்? எவரிடம் இப்பணம் குவிந்துள்ளது?? இவ்வளவு பணம் இந்த நாட்டின் ஆளும் வர்கத்தின் கைகளில் தேங்கியுள்ளது! அப்பாவி உழைப்பாளர்கள் மற்றும் வளர்முக நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களிலிருந்து பெறப்பட்ட வட்டிக்கு வட்டிகள் இதைச் சாத்தியமாக்கிறது. ஜேர்மனிக்கே இவ்வளவு தொகை வருமானம் வட்டியாக வந்தால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இன்ன பிற வல்ல பேய்களுக்கு எத்தனை ஆயிரம் பில்லியன்கள் டொலர்கள் வட்டியாக வந்திருக்கும்? இத்தகைய நாடுகள் வட்டியை வழங்கிய நாடுகளுக்குக் கூட்டாக வழங்கிய சமூக நல(?)க் கொடுப்பனவுகளைக் கீழே பாருங்கள்.அதில் மீளவும் ஆயுத ஏற்றுமதியால் எவ்வளவைத் திருடுகிறார்கள் என்பதையும் பாருங்கள். இத்தொகையில் இவர்கள் சுரண்டுவதைச் செவ்வனவே செய்து முடிப்பதற்கும்,தமது சுரண்டலை நியாயப்படுத்துவதற்காகவு...

அம்மாளாச்சி.

அம்மாளாச்சி. கொ ட்டாத பனி கொட்ட குப்பற விழுந்த சிறிய பையன் மெல்லெழும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருக்க முதுகினில் விரியும் அன்னைக் கரம் மெல்லக் கொடுக்கும் உறு துணை! அன்னை. எனது குவளையுள் நுரையொழுப்பும் பியரைப் போல் நெஞ்சுள் நுரைக்கும் அன்னை! நொந்துலர்ந்த இதயத்தோடு நெடிய வாழ்வுக்குள் குந்த இடமின்றி அகதியாய் எந்தத் தெருவில் பேப்பர் பொறுக்கிறாளோ... சுவரில் தொங்கும் கடிகாரத்தின் ஈனக் குரலில் இதயம் குழப்பும் ஒரு கும்மிருட்டில் அவளை அணைத்தபடி அச்சம் தொலைத்து கட்டிலில் கண்ணயர்ந்ததும் வர்ண ஜாலத்துள் மிதக்கும் தலையணை. முந்தைய பொழுதின் கரைந்த தடயம் நெஞ்சில் கீறும் ஏதோவொரு அதிர்வில் வெறுமைத் தீவாய் வேளைகள் செல்ல மீளவும் பியரைக் கொள்ளும் பெருவாயுள் அகாலக் கொடுமையின் சிதை உறவுக்கான இரைமீட்பில் வேதனையைப் பகிர்வதற்கென்றே பேசப்படும் தொ(ல்)லைபேசி அதிர "குடும்பத் தகராறில் உன் தம்பிக்கு மண்டையை உடைத்தாள் அவன் மனைவி திருகுவேலைக் கட்டையால மண்டையில் பலத்த அடி-ஆபத்து, உடனே போன் செய்!" முன்னைய பொழுதில் ஒரு தம்பி நஞ்சுண்டு மரிக்கப் போன் செய்தாள் அக்காள் இன்னொரு இழவு சொல்கிறாளா இப்போது? அம்மா, தலை வெட...