Skip to main content

Posts

Showing posts from September, 2009

சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்...

சின்னமடு மாதா:     அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க...       "மெல்லப் பாடும் தென்றலும் மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும் மெட்டு விரிக்கும் முல்லையும் மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள் கண்ணைத் திறந்து வைத்துக் கப்பல் கட்டும் தம்பியும் கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும் அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"     அ து ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.     எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்...

தமிழ் "மார்க்சிய" நண்பர்கள்...

இலங்கையின் இரண்டாவது சுனாமி.   கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது.அதிர்ச்சியான யுத்த அழிவுகள் திட்டமிடப்பட்ட பொருளாதாரஞ்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அவசியமாக இலங்கை அரசினது அந்நியப் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்டபின் வன்னி மண்ணில் நிகழும் அரசிலானது மிகவும் கெடுதியானது.இது,மாறிவரும் உலகப் பொருளாதார இலக்குகளால் பந்தாடப்பட்ட வரலாற்றை எமக்கு விட்டுச் சென்ற புலிகளது "தமிமீழ"ப் போராட்டமாக எம் முன் நிற்கிறது.ஆனால், இதற்குள் பல உள்நோக்கங்கள் நிலவுகிறது.குறிப்பாக அந்நியத் தேசங்களதும்,தென்னாசியப்பிராந்தியத்தின் அரசியல் எதிர்காலமும் அதுசார்ந்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் இவற்றுக்குள் புதைந்துபோய்க் கிடக்கிறது.   கடந்தகாலத்தில் இலங்கையில் ஜே.வி.பி.யை இரண்டு முறைகள் அழித்த இலங்கை அரசும் அதன் அந்நிய எஜமானர்களும் நிச்சியம் இன்னொரு படுகொலைக் களத்தை இந்தத்"தமிழீழ"போராட்டத்துக்குச் செய்யத் துணியுமென்பதை நாம் ஏலவேஅறிந்தேயிருந்தோம்.இது, குறித்...