நெடுங்குருதி சொல்லும் நீயும்-நானும். செத்தவர்கள் செத்தவர்களாகச் சேறடிப்பதும் துரோகி சொல்வதற்கும் இடப்பட்டவொரு வெளியில் ஈழம் இருண்டுகிடக்க பேருரைகள் ஆய்வுகள் அவசரத்தில் நீதி பகிர்ந்து... தொடருகிற யுத்தக் காண்டம் உடலங்களில் எண்ணிக்கை வைத்து ஸ்ரீலங்காவின் ஒருமைப்பாட்டை சிங்கக் கொடியால் பிணைத்தபடி புலிக்கொடிக்கு நெருப்பிட்டு மகிழ்வதும் தொடர்ந்தபடி கொடிகள் எரிக்கப்படலாம் ஏற்றப்படலாம் கம்பத்தில் மனிதம் தூக்கப்படுவதை இனவொற்றுமை சொல்லியும் ஜனநாயகஞ் சொல்லியும் ஈழ விடுதலை சொல்லியும் நீ நியாயப்படுத்துவதை இத்துடன் நிறுத்து! ஒரு போரை இன்னொரு போரால் நியாயப்படுத்தி ஓரத்தில் நிற்கும் நீயோ இலங்கையின் கருப்பு ஜுலை நெடுங்குருதிபற்றி எல்லோருக்கும் வகுப்பெடுக்கிறாய் அன்று அடியாட்களை ஏவிய சிங்கள இனவாதம் இன்று உலகமகா ஜனநாயகக் காவலரின் ஆயுதங்களைக் காவி தேசியக் கொடியைத் தமிழர்களின் பிணங்களின்மீது ஏற்றியபடி இனப் பிரச்சனைக்குத் தீர்வு நன்றாகவே புகட்டுகின்றனர்! எனதுடலின் உயிரைக் குடிக்கும் மிருகக் கொடிகளுக்குள் மறைந்துகிடக்கும் சாத்தான்கள் புவிப் பரப்பில் வேதம் ஓதுகின்றன இலங்கைக்குச் சமாதானம் சொல்லி கிழக்குக்கு ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்