Skip to main content

Posts

Showing posts from February, 2016

இஸ்லாமியத் தகவமைப்பு : மாற்று மதத்தவர்கள்மீதான நிந்தனையும் -கொலையும்!

'07.07.2005 துன்பியல் நிகழ்வு [On the morning of Thursday, 7 July 2005, four Islamist extremists separately detonated three bombs in quick succession aboard London Underground trains across the city and, later, a fourth on a double-decker bus in Tavistock Square. ] நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம், இனவாதம், வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை,மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்-மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது,அது விருப்பையும் ஏற்படுத்துகிறது' இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம் (Chief Imam ,Dr. Khalifa Ezzat) இங்ஙனம் உரைத்தார்,கடந்த 07.07.2005 ஆம் ஆண்டு , இலண்டன் குண்டு வெடிப்புக்குப் பின்னரான உரையாடல் ஒன்றில். அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி ...