ஜெயலலிதா:தமிழீழத்தைப் பெற்றுத் தருவேன். ரோசா வசந்தின் பதிவில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடும் தீர்மானங்கள் நிறைவேறுகின்றன.பெரும் "படிப்பாளிகள்" தமது தரப்பு நியாயங்களை ஈழமக்கள் சார்பாகவும் சொல்கிறார்கள். கூடவே,ஜெயலலிதாவின் "தமிழீழத்தையும்" நாம் உடைத்துப் பார்ப்போம்.டாக்டர் தங்கமணி சொல்வதையும் அங்ஙனமே... இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போக்குக்கேற்றதான கோசமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இன்றைய கருத்துக்களைப் பலர் பார்க்கின்றனர்.இந்த மக்கள் விரோத அரசியல்வாதி, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குக் கொஞ்சமும் சளைத்தவர் இல்லை!பாசிசப்போக்குடைய தமிழகத்துக் கட்சி அரசியலில்,காலத்துக் காலம் மக்களை முட்டாளாக்கியும்-வருத்தியும்,கொலைகள் செய்தும்,தேர்தல் வன்முறையூடாகத் தம் கட்சிகளை வெல்லவைப்பதில் கட்சியாதிக்கம் ஒரு பெரும் சமூகக் குற்றத்தையே வழமையான-அன்றாட நிகழ்வாக்குவது.இன்று, இத்தகைய கட்சிகளின் தலைமைகள், தம் பின்னே திரண்டிருக்கும் நிதி மூலதனத்தை வைத்துப் பெரு வர்த்தகங்களில் ஈடுபடும் நிலையில்,கட்சித் தலைமை தாம் வாழும் மண்ணில் பெரும் ஆளும் வர்க்கமாக மாறியுள்ளது.மக்களதும்,தொண்டரதும் தயவில் ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்