புதைகுழிகளைப் போற்றும் தொண்டர்கள் ! ...தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது முற்றுப்பெறுகிறது... //ஆனால்,எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.// ...ம்...இம்முறை நம்மட தேசியத் தலைவர் "காலம்"குறித்த கடுமையானவொரு ஆய்வைச் செய்து,அதன்வழி தான் கண்டடைந்த தரவுகளோடு,ஞானம்பெற்ற கையோடு,இவ்வாண்டின்"மாவீரர்"தினவுரையை வீடியோக் கமிராவுக்கு முன்னால் வாசித்துக் கொண்டிருந்தார்.எனக்கு இந்தக் கதம்பத்துரையில்(விடலைக் குஞ்சுகள் வினைதீர்க்கக் கொதிக்காதீர்) எந்தவொரு கண்றாவியையும் விமர்சிக்க-விவாதிக்க விருப்பமில்லை,என்...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்