வேரோடு அறுத்தெறியவேண்டிய"NGO""க்கள்! இலங்கைப் பிரச்சனையில் அதியுயர்ந்த இழப்பாக இருப்பது மக்களின் அன்றாட உயிர்வாழும் உரிமை மட்டுப்படுத்தப்பட்டதும்,வாழ்வாதாரப் புறநிலைகள் அழிக்கப்படுவதுமே.போராடும் இரு தரப்பும்(அரசு,புலிகள்)இதுவரை எந்தவொரு நிலையிலும் மக்களுக்கான நலன்களைக்கொண்டு போராடுவதாகவில்லை.இரு தரப்புக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தத்தமது போருக்கு நியாயம் கற்பிக்கும் ஒரு விசயமாக இருக்கும்போது, இதைத் தாம் மட்டுமே தூக்கிப்பிடிப்பதாக அரச சார்பற்ற அமைப்புகள்;(non-governmental organization) என்ற இந்த என்.ஜீ.ஓ.க்கள் கதையளப்பதும், கூடவே தமது பிற்காரணங்களுக்காக இலங்கை,சோமாலியா,சூடான்,இன்னபிற ஆபிரிக்கக் கண்ணடத்து நாடுகளென விரிந்தும்(Chancen und Risiken von NGOs - Die Gewerkschaften in Guinea während der Unruhen 2007-Adama Sow,)நேபாளம்,வங்காளதேசம், என்று இவர்களின் கால்கள் எங்கும் மிக அழுத்தமாக வைக்கப்படுகின்றன. இந்த என்.ஜீ.ஓ.க்களை ஊட்டி வளர்த்தெடுக்கும் சக்திகள் பெரும்பாலும் தொழில்வளமுடைய நாடுகளாகத்தான் இருக்கிறது.இத்தகைய நாடுகளின் சந்தையை விரிவுப்படுத்தியும்,அந்தச் சந்தை...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்