இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவும்,மீண்டெழும் தேர்தல் கோசங்களும். நா ம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது. ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்