வாடாத இரோஜாவும், வரண்ட தரையும். (பகுதி:1) மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்... வா சிப்பதற்கான சூழல் வலுவற்ற பொழுதகளாகவும்,வாழ்வதற்கான முனைப்பில் உழைப்பில் உயிர்வாழும் இந்தப் பொழுதுவரையும் ஒரு நூலை முழுமையாக வாசித்துவிடுவதில் பல சிக்கல்கள்.நேரம் குறித்தான முடக்கத்திலும் வாசிப்பதற்கான அக மகிழ்வைத் தரத்தக்கத்தான புனைகதைகளை நாம் ஏலவே அறிந்தோம்.அந்த மகிழ்வும் எமக்கானதாகக் கட்டப்பட்ட அதிகாரங்களது திணிப்பென்பதும் இதன்வழி புரிந்துகொள்ளவும் முடிந்தது.அறிதல்,எனது விலங்கை எனக்கே காட்டி,உடைப்பதற்கானவொரு திசையைச் சொல்ல மேலும் அறிய வைக்கிறது.இது,வாசிப்பால் மட்டுமே நடைபெறுகிறதெனினும் எமது அனுபவப்பட்ட வாழ்வு எம்மைக்கடந்து செல்லும்போது அதை மீளவும் வழிமுன்னே நடாத்திக்காட்டுவதில் படைப்பிலக்கியம் மனித வாழ்வாழ்வின் இரண்டாவது இயற்கை என்பது உண்மையாகிறது. அறிதலிற்றாம் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டன.இயக்கத்தையும் அதன்வழி மாறுவதையும் அறிவதே இயற்கையை வெற்றிகொண்ட அனுபவம்-கல்வி! இந்த நோக்கத்தில் இன்னொரு குறுநாவற்றொகுப்பை(பசுந்தீவுக் கோவிந்தனது"வாடாத றோசா"குறு நாவற்றொகுப்பு) உள் வாங்கிக்க...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்