Skip to main content

நாளை மகிந்தாவுக்கும் ,மைத்திரிக்கும் ஓட்டுப் போடுவோம்!


இன்றுவரை சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக்கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது.தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் மகிந்தாவை ஆதரித்தும் ,மைத்திரிபால சிறீசேனாவை ஆதரித்தும் தமிழ்த் தலைமைகள் செய்யும் பெருந்துரோகம் தமிழ் மக்களுக்கானவொரு அரசியல் வெளியை இல்லாமற் செய்ததே!அடையாள அரசியலை மறுத்த  தெரிவில் தமிழ்மக்கள் தமது அரசியலைத் தீர்மானிக்கவே முடியாதபடி நம்மை அரசியல் அநாதைகளாக்கிவிட்டு, நாளை நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரியின் பின்னால் நம்மை அழைத்துச் செல்லும் நரித்தனமானது, மேற்குலக நலன்கட்கமைய கணிசமானமுறையில் வியூகத்தைச்செய்கின்றனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்!

இதைவிட தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப்புரட்சிகரச் சக்திகள் சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும், அதன்அரசியல்ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்பு களோடிணைத்துள்ளனர். இவர்களது அன்றைய அரசியல் தெரிவானது நாளை 08.01.2015 அன்று,  நடைபெறும்இலங்கை அதிபர்த் தேர்தலுக்கான தெரிவுகளை இலக்காகக் கொண்டிருந்ததென்பதை நாம் இப்போதாவது உணர்கிறோமா?






தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே அன்றி முதலாளித்துவச் சட்டவாத அல்லது நல்லாட்சி-ஜனநாயக மறுப்பு முரண்பாடல்ல!


சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் அது சார்ந்த அடையாள அரசியல்  வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணைபோபவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் தமித் தேசியச் கூட்டமைப்பு மைத்திரியை அல்லது மகிந்தாவை ஆதரிப்பதென்ற "அரசியல்" நகர்வில் மேற்குலச் சதியின் இலங்கை முகவர் மைத்திரியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.இவர்கள் இப்போது தமிழ் மக்கள்சார் அரசியற் கோரிக்கை அனைத்தையும் கைவிட்டு ஜனநாயகம்,நல்லாட்சி,சட்டத்துக்குட்பட்ட அரசு என்று தமிழ் மக்களது தலைவிதியை அதே புலிப்பாணியில் முட்டுச் சந்தியில் நிறுத்தியிருப்பது தற் செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்ட மேற்குலக வியூகமாகும்.


தமிழ் மக்கள்மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமர்த்தனமான" இனவொடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த அடையாளமும் - வெகுஜன அரசியலும் தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.இதை மையப்படுத்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களது வாக்குரிமையைத் தமிழ் அரசியலது அடையாள எதிர்ப்பாக்க மறுக்கும் மேற்குலக லொபி அரசியலது தெரிவே நமது சாபக் கேடாகிறது.அதை(அடையாள அரசியல்) மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து, அவர்களது அடியாளகவே இந்தத் "தமிழ்த் தலைவர்களது" "வகை மாதிரி" அரசியல் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.இதைத் தயார்ப்படுத்துபவர்கள் பெரும்பாலும் அந்நியத் தேசத்து இராஜதந்திரிகளாகவே இருக்கும்போது நாம் ஏலவே அந்நிய நலன்களுக்காகக் குருதி சிந்திய வரலாற்றின் இன்னொரு "மாதிரி துரோக அரசியலை" இப்போது காண்கிறோம்.இதுவே நமக்கு இனிவரும் காலுத்துள் மிகப் பெரும் ஆபத்தாக மாறப்போகிறது.


ஸ்ரீரங்கன்
07.01.2015

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...