Sunday, November 13, 2005

தமிழுணர்வு:அரசியல்.

போராட்டம்,வாழ்வு,தமிழுணர்வு:அரசியல்.


இன்றைய உலக வாழ் நிலையானது அதீத தனிநபர்வாதக்
கற்பனைகளையுங் காலம் கடந்த மிதவாதக் கனவுகளையும் கலந்து புதிய பாணிலானவொரு 'வாழ்வியல் மதிப்பீட்டைக்'கட்டிக்கொண்டுள்ளது.இந்த ஒழுங்கமைந்த கட்டகம், நிலவுகின்ற அமைப்பாண்மை
வர்க்கத்தின் நலனை மையப்படுத்திய நெறிமுறைமைகளால் தீர்மானிக்கப்பட்ட'ஜனநாயகம்'
எனும் கருத்தாக்கத்தால் உலகு தழுவிய ஒப்பாண்மையாக எடுத்துரைக்கப்படுகிறது.இந்தச் சுகமான அரசியல்
'ஒப்பாரி' எந்தச் சந்தர்ப்பத்திலும் சமூகத்தின் விளிம்பில் உந்தித் தள்ளப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகவில்லை!இது நடவாத காரியமும்கூட.எந்த வர்க்க மக்கள் கூட்டைப் 'பிரதிநித்துவப்படுத்தும்' ஆட்சியதிகாரமுள்ளதோ,அதைத்தாம் அந்த ஆட்சி கருத்தியற்தளத்திலும் விதைத்துக் கொண்டிருக்கும்.இதுவே அதன் விழுமியமாகவுமிருக்கிறது.

இதுதாம் வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலின் நிலை.

இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய'அரசியல்-பொருளியல்'வலுவும்
அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர்
தயாரிப்பான இந்த 'அலகுகள்' அந்ததந்த நாடுகளில் இன்னும்
ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய'அலகுகளை'உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் 'பொருளாதாரச் சிக்கல்கள்' அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.இதுவே நமது நாட்டில் இன்றைய கடைக்கோடி அரசியலாக நாற்றமெடுக்கிறது.இங்கு புலியென்ன ,ஈ.பி.டி.பீ என்ன எல்லாம் அராஜகக் கம்பனிகள்தாம்!



இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற 'ஊனங்களும்'அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் 'துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது'ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான'உளவியற் கருத்தாங்களால் 'கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட 'மனிதவுடலானது'அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக'மக்கள் விரோதமாக'இருந்தும்
அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் 'நாம'
மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும்
கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு'விரோதி,துரோகி'என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்.தியாகிதுரோகி' என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாக விதைத்துவரும் தமிழ்க் குறுந்தேசியமானது தனது இருப்பை
இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.இங்கே புதுவை இரத்தினதுரைகளும்,காசி ஆனந்தன்களும் சமூகத்தின் அறங்காவலர்களாகப் பாடிக்கொண்டே தமது அடிவருடித் தனத்தைச் செவ்வனே செய்து பிழைப்பதில் காலத்தைத் தள்ளுவார்கள்.இவர்களைச் சுற்றிய ஊடகங்கள் இத்தகைய கருத்துக்களைத் தேசத்தின்-இனத்தின் நலனாக வாந்தியெடுத்து மக்களின் ஒரு பகுதியை இந்த இருண்ட
பகுதிக்குள் கட்டிப் போடுகிறது.இதை வளர்த்தெடுக்கும் இயக்க நலனானது இவற்றைத் தேசிய எழிச்சியாகவேறு பிரகடனப்படுத்தி மக்களை இனவாதிகளாகச் சீரழிக்கிறது.இங்கே கொலைகளும்,மனங்களைச் சிதைப்பதும்,கொடூரமான வசவுகளும் மலிந்து'கொலைக்காரக் காட்டுமிராண்டிச் சமுதாயமாக'தமிழ்ச் சமூகம் சீரழிந்து போகிறது.

இது நோய்வாய்ப்பட்ட சமுதாயமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தச் சமுதாயத்துள் நிலவுகின்ற சமூகவுளவியலானது மிகவும்
பின்தங்கிய மொழிவுகளால் முன் நிறுத்தப் பட்டவையல்ல.இது நவீனத்துவ அரசியலின் விளை பொருள்.இதையே முழு முதலாளிய நலன்களும் முன் தள்ளிக் கொண்டு தமது நலன்களைத் தகவமைக்கின்றன.மேற்குலகில் அகதியாக வாழும் நாமிதை வெகுவாக உணரமுடியும்.இந்த நாடுகளில் உருவாக்கப்படும் 'கருத்தியல் வலுவை' எமது அநுபவத்தோடு பொருத்தும்போது இவ்வுண்மை இலகுவாகப் புரியமுடியும்.

இதிலிருந்து எங்ஙனம் மீள்வது?
இங்கேதாம் நமது எல்லை பிடரியில் மோதுகிறது.இவ்வளவு ஒழுங்கமைந்த கட்டமைப்பை-அரசியல் அதிகாரத்துவ நிறுவனங்களை எப்படி வீழ்த்துவது?இதைச் சில உதிரிச் சிந்தனையாளர்களால் வீழ்த்த முடியுமா?உதிரிகளாக அங்கொன்றுமிங்கொன்றுமாகக் கருத்திடும் நம்மால் முடியுமா?பதில் இல்லையென்பதே!பூர்ச்சுவா வர்க்கம்- கட்டமைப்பு தன்னை வலுவாகத் தகவமைத்துப் பாரிய நிறுவனங்களாகச் சமுதாயத்தில் அதிகாரத்தைக் குவித்து ஒழுங்கமைந்த கட்சியோடு வன்முறை ஜந்திரத்தைக்
கட்டிவைத்துத் தன்னை மக்கள் பிரதிநிதியாகக் காட்டிக் கொலைகளைச் செய்யும்போது'சில உதிரிகள்'இவற்றுக் கெதிராகக் கலகஞ் செய்வது வரையறைக்குட்பட்டது,
இது ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.இங்கே ஒழுங்கமைந்தவொரு 'புரட்சிகரக் கட்சி'யின்றி எதுவும் சாத்தியமில்லை.

இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த 'தீவுகளாக' வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் 'பொதுவான' வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.

அதிகார வர்க்கமானது 'புரட்சிகரக் கட்சியின் 'தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு'பின் நவீனத்துவ'தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த பூர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.

இன்றைய நிலையில் எவரெவர் 'புரட்சிக் கட்சி'க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்'மனமுடக்கங்களும்,சிதைவுகளும்'
தனிநபர்வாதமாக மாறுகிறது.இது தவிர்க்க முடியாதவொரு இயங்கில்போக்காகும்.

இத்தகையவொரு சூழலில் தமிழ்பேசும் மக்களின் இருள் சூழ்ந்த இந்தச் சமூகவாழ்வைப் போக்குவதற்கு இயலாமை நிலவுகிறது.இதனால் அராஜகத்துக்கு முகங்கொடுக்கும் மக்கள் ஸ்தாபனமடையாதிருக்கேற்வாறு'அதிகாரவர்க்கம்'செயற்படுகிறது.
இத்தகைய நிலைமையில் அராஜகவாதிகளே தம்மை 'ஜனநாயக வாதிகளாக'க்காட்டிக் கொண்டு மக்களரங்குக்கு வருகிறார்கள்(ஈ.பி.டி.பீ,ஈ.பி.ஆர்.எல்.எப்.,புளட் இப்படிப் பலர்...).இவர்களுக்குப் பாசிச உள்நாட்டு-உலக அதிகாரவர்க்கத்தோடு பாரிய கூட்டுண்டு.இவர்கள் நிலவுகின்ற கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுப்பது போல்(டக்ளசின் தினமொருமடலை அவரது வானொலியான இதயவீணை
காவி வருவதைக் கவனிக்கவும்) தம்மைக் காட்டி மக்களைக் கருவறுக்கும் அரசுகளுக்கு-அதிகாரங்களுக்குத் துணைபோகின்றனர்.

இத்தகைய கயவர்களின் ஜனநாயக முழக்கமானது போலியானது.இதற்கும் புலிகளின்'கொடூர அராஜக' அரசியலுக்கும் வித்தியாசம்'அடியாட்'படையில் மட்டுமே நிலவமுடியும்.இத்தகைய கயவர்கள் புலிகளுக்கு மாற்றுக் கிடையாது.எனவே நமக்கு நாமே துணையென மக்கள் தமது 'ஸ்தாபனமடையும் வலுவைப்' பேணி 'புரட்சிகர'அரசியலை முன்னெடுக்க உதிரிகளான நாம் முதலில் ஒன்றிணையும் நிலைக்கு வந்தாகவேண்டும்.
இது இல்லையானால் எமது எல்லைக்குட்பட்ட நகர்வு இறுதியில் நம்மைத் தோல்வியில் தள்ளிவிட்டு, நகர்ந்து வெகு தூரம் சென்றுவிடும்.இந்த நிலையில்,அராஜகம் மக்களைக் காவுகொண்டு, தன்னை முன் நிறுத்திய அரசிலூடாக நமது மக்களுக்கு'மாகாண சுயாட்சி'சொல்லிக் கொண்டு தமது வருவாய்கு ஏற்ற பதவிகளோடு ஒன்றிவிட்டு,மக்களைக் கொன்று குவித்து வருவதை எவராலும் தடுக்க முடியாது. இங்கே ஒன்றிணைந்த தொழிலாளர் ஒற்றுமை சிதைந்து உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்குப்
பலிபோவது உலகம் பூராகவுமுள்ள சாபக்கேடாக இருக்கிறது.


ஐக்கியப்பட்ட இலங்கைப் புரட்சியானது நேபாளத்தின் 'நிலைக்கு'
மாறுவதை உலகம் விரும்பவில்லை,குறிப்பாக இந்திய
ஆளும் வர்க்கத்துக்கு
இது பாரிய தலையிடி.இங்கே இந்த நிகழ்வை முளையிலேயே
புலிகள் கிள்ளி எறிந்தும் இவர்கள் திருப்தியின்றி மேன்மேலும் புரட்சிகர அரசியலைச் சிதைக்கப் பலரூபம் எடுக்கிறார்கள்.அதில் ஒரு உரூபம் ஈ.பி.டி.பீயும்,டக்ளசும்.மற்றது ஆனந்தசங்கரி...சிங்களத் தரப்பில் ஜே.வி.பீ,பேரினவாதக்கட்சிகள்,பௌத்த துறவிகளெனப் பல வடிவங்களாக இது விரிகிறது.நாமோ
உதிரிகளாகி உருக் குலையும் நிலையில் ஓலமிடுகிறோம்.

மக்கள் அராஜகத்துக்குப் பலியாகிக் கொத்தடிமையாகிறார்கள்.அகதியாகி அல்லல் படும் நாம் 'சொகுசு'வாழ்வோடு கத்துகிறோமென்று கருத்துவளையத்துக்குள் தலையைக் கொடுத்தவர்கள் கூறுகிறார்கள்.
காலம் நம்மெல்லோரையுங் கடந்து நகர்கிறது.அதை விட்டுவிட்டு,அதன் பின்னால் நாம் நாய்யோட்டம் போடுகிறோம்.வாழ்க மக்கள் ஜனநாயகம்.

பிற்குறிப்பு:

படங்கள் தேனீ மற்றும் பெயர் மறுந்துபோன தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.அத்தளங்களுக்கு நன்றி.

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2005
வூப்பெற்றால்,ஜேர்மனி.



11 comments:

Anonymous said...

SRI RANGAN

NEE RUMPA AALAAMPIIRAAI

DAI THUROOKEE YOU DIDN'T TELL US ABOUT THE MONEY YOU TOOK FROM TELO

YOU ARE THIEF YOU ROB TAMIL PEOPLE MONEY AND SETTLE IN GERMANY WITH YOUR FAMILY
DAI THIRUDA ENKA ANTHA KASUUU

Anonymous said...

பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்

Anonymous said...

பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவவே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார்.
வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டுஇ மண்ணிழந்துஇ மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும்.
அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு இரவுசியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்?
இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான்
வரலாறு எனது வழிகாட்டி
எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார். திருக்குறளில் குறிப்பிட்டது போல கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை அதாவது வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை கவச எதிர்ப்புப்படை என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள்இ கரும்புலிகள்இ வான்புலிகள் என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார். தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம்.

இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்ப்படை விமானப்படைத் தளங்களாலும் தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன். இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார். இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார்.
“பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார்.
எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரிஇ எதிர்ப்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி. இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்டு இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது.
இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது

Anonymous said...

இதோ எனது வெளிநடப்புக்கான பிரகடனம்.

நெடுஞ் சாலைகள்தோறும் நிறுவிய எனது
சிலைகளின் முன்னே
மனிதரின் நிறுவனமும் குருதியும் எலும்பும்
படையல் செய்தோரே!

இதோ ஏற்றுக் கொள்ளுங்கள்
எனது வெளிநடப்புக்கான பிரகடனம்


பௌத்தத்தின் பேரால் தோரணம் கட்டிய
வீதிகள் தோறும் நீங்கள் நிகழ்த்திய
இனசங்காரப் பெரஹராக்களின் பின்னரும்
இங்கே எனக்கு அலங்கார இருக்கையோ?


சூழவும் நெருப்பின் வெக்கை தாக்கவும்
போதிமரத்து நிழலும் எனை ஆற்றுமோ?
வெக்கை தாளவில்லை, வெளிநடக்கிறேன்.

புழுதி பறந்த வீதிகள் எங்கும்
குருதி தோய்ந்த புலைமையின் சுவடுகள்.

விலகிச் செல்கையில்
கால்விரல்களில் ஏதோ தட்டுப்படுகிறது.
பேரினவாதப் பசிக்கு மனிதக் குருதியை ஏந்திப்
பருகி எறிந்த பி~h பாத்திரம்.

ஒருகணம்
அழுத சுரபி என் நெஞ்சில்
மிதந்து பின் அமிழ்கிறது.
எங்கும் வீதிகளில் இனசங்கராத்தின்
மங்காத அடையாளங்கள்.
ஓ! என்மனதை நெருடுகிறது.

இன்னும் காற்றிலேறிய அந்தப்
படபடப்பும் பதகளிப்பும் அடங்கவேயில்லை.

எழுப்பிய அவலக்குரல்களின் எதிரொலி
காற்றிலேறிக் கலந்தொங்கும்
ஏன்? ஏன்? இக்கொடுமை என்றறைகிறதே!

இவை கேட்டதில்லையா உமக்கெலாம்?

எனக்குள் கேட்டதே!
இதயம் முழுதையும் சாறாய்ப் பிழிந்ததே!

ஓ...
இதயமே இல்லா உங்கள் இந்த
எதிரொலி எங்கே உரசிச் செல்லும்?
சந்திகள் தோறும் என்னைக்
கல்லில் வடித்து வைத்துக்
கல்லாய் இருக்க கற்றவர் மீது
கருணையின் காற்று எப்படி உயிர்க்கும்?

மனச்சாட்சி உயிரோடிருந்தால் வீதியெலாம்
மனித இறைச்சிக் கடைகள் விரித்து
மானுடத்தை விலை கூறியிருப்பீரா?
குருதியால் என்னை அபிஸேகித் திருப்பீரா?

வொலிக்கடை அழுக்குகள் உங்கள் வீரத்தின் பெயரா?
ஓ! எத்தனை குரூரம்

இத்தனை குரூரங்களும் கொடுமைகளும்
எனதுபேரில்தான் அர்ச்சிக்கப்பட்டன
அரங்கேறிஆடின.

எனது பெயரால்தான் ஆக்கிரமிப்பு, அக்குமுறை.
எனது பெயரால்தான் இன்ப படுகொலை
குருதி அபிஸேகம் இவை எல்லாமும்.

மரணத்துள் வாழ்வோம்.

உங்கள் ஆக்கிரமிப்பின் சின்னமாக
நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இழிநிலை.

நான் போதித்த அன்பு, கருணை எல்லாம்
கல்லகைகுள் போக்கிய
புதைகுழி மேட்டில் நின்று என் சிலைகளைப்
பூசிக்கிறீர்

உங்கள் நெஞ்சில் உயிர்க்காத என்னை
கல்லில் உயிர்த்திருப்பதாய்க காணும் உங்கள்
கற்பனையை என்னென்பேன்?
நானோ
கல்லல்ல, கல்லில் வடித்த சிலையுமல்ல.

கண்டதுண்டமாய் அவர்களை நீங்கள்
வெட்டியெறிந்த போதெல்லாம்
உதிரமாய் நானே பெருகிவழிந்தேன்
நீங்கள் அதனைக் காணவேயில்லை.

கைவேறு கால்வேறாய்க் காட்டிலே கிடந்து
‘தாகமாயிருந்தேன்’ என்று கதறியதும் நானே
அக் கதறல் உம் செவிகளில் விழவேயில்லை.
கல்லாய் இருந்தீர் அப்போதெல்லாம்.

ஆணவந் தடித்த உங்கள் பேரினவாதக் கூட்டுமனம்
எனக்குள் மறைந்து கொண்ட எத்தனிப்பே
என்னை வெறுங் கல்லில் மட்டும்
கண்டதன் விளைவன்றோ?

நானோ கல்லல்ல் கல்லில் வடித்த சிலையுமல்ல.
மாறுதல் இயற்கை நியதி என்ற
உயர்நிலை ஓட்டத்தின் உந்து சக்தி நான்
கல்லல்ல் கல்லே அல்ல.

எனது ராஜாங்கத்தையே உதறிநடந்த என்னைக்
கல்லாக்கிவிட்டு உங்கள்
சிங்கள பௌத்த ராஜாங்கத்துள்
சிம்மாசனம் தந்து சிறைவைக்கப் பார்க்கிறீர்

யாருக்கு வேண்டும் உங்கள்
ஆக்கிரமிப்புக் குடைவிரிப்பின்கீழ் சிம்மாசனம்?

நான் விடுதலைக்குரியவன்.
நிர்வாணம் என் பிறப்புடன் கலந்தது.



சிங்கள பௌத்தத்துள் சிறையுண்ட உமக்கெலாம்
எனது நிர்வாண விடுதலை ராஜாங்கத்தின்
விஸ்தீர்ணம்
புரியாது அன்பரே
பிரபஞ்சம் மேவி இருந்த என் ராஜ்யம்
பேரன்பின் கொலுவிருப்பு என்பதறியீர்;
வழிவிடுகள் வெளிநடக்க.

நெஞ்சில் கருணைéக்காத நீங்கள்
தூவிய பூக்களிலும் குருதிக்கறை;
சூழவும் காற்றிலே ஒரே குருதிநெடில்.

ஓ! என்னை விடுங்கள்
நான் வெளிநடக்கிறேன்
என்னைப் பின்தொடராதீர் இரத்தம்தோய்ந்த சுவடுகளோடு.

நான் போகிறேன்.
காலெடிந்த ஆட்டுக்குட்டியும் நானுமாய்
கையொடிந்த மக்களின் தாழ்வாரம் நோக்கி,
அதுதான் இனி என் இருப்பிடம்.

வருந்தி அழைத்த பெரும் பிரபுக்களை விடுத்து
ஓர் ஏழைத்தாசியின் குடிலிலன் தாழ்வாரத்தில்
விருந்துண்டவன் நான்.

நீங்கள் அறிவீர்
வரலாற்றில் என் மௌனம் பிரசித்திபெற்றது
ஆனால், நான் மௌனித்திருந்த சந்தர்ப்பங்களோ வேறு.


இப்போதே
என் மௌனத்துட் புயலின் கனம்.

ஒருநாட் தெரியும்

அக்கப்பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்,
அவாகளின் எழுச்சியில்
வெடித்தெழும் என்பேச்சு!

Anonymous said...

SRI RANGAN

PLEASE GO TO NETWORK CLASS 101

Sri Rangan said...

>>>>>ஒருநாட் தெரியும்

அடக்கப்பட்டவர் கிளர்ந்தே எழுவர்
அப்போதென் மௌனம் உடைந்து சிதறும்,
அவாகளின் எழுச்சியில்
வெடித்தெழும் என்பேச்சு!<<<<<

புதுவையாரின் கருத்தே எனதும்கூட!

இது நிகழ்ந்தே தீரும் பொருத்திருங்கள்!

Anonymous said...

"இது நிகழ்ந்தே தீரும் பொருத்திருங்கள்"

SRI RANGAN TU EPPADEE NEHAZULUMM?
FREEDOM IS NOT FREE
FREEDOM NEVER COME FROM GERMANY TO EELAM
FREEDOM NEVER COME FROM INDIAN RAW COOLIES
FREEDOM NEVER COME FROM GERMAN BEEER

Anonymous said...

நக்குகிற நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா?விட்டுத்தள்ளுங்கள்.

நற்கீரன் said...

Your essay is constructed out of an intricate complexity of subjective and objective items, that are not easy for a lay reader. You switch levels of analysis seemingly randomly, and do not follow any consistency in terms of theory or suggestions. I do not intend the above comments to be criticism, only a foot note.

Your paradigm seems to be a variant of Marxim, but informed by harsh realities of modern market. I sense a great deal of contradiction (or paradox), and tension.

It would assist a reader if you could highlight the theoretical concepts that you use, separate from the applications of them, particularly in you personal case, as well as in relative to the Tamil or Eelam context. (But I can also understand that this not an academic exercise, but your pure expressions.)

At one level, you look for or have an urge to create a Utopia, which will forever remain illusive and out of reach. But, on a another level you realize your situation. I simply want to know, what do you do or will do to correct all the deficiencies that you see? Perhaps, highlighting or trying to understand the situation is something you try to do.

Any way, a good post.

Sri Rangan said...

>>>At one level, you look for or have an urge to create a Utopia, which will forever remain illusive and out of reach.<<<

".........."
Oh yes!
"..........."

Natkeeran,
Prejudices are a bouquet of flowers that should be re-arranged from time to time,Where I feel safe I can develop myself, That's why there is no country on this earth without people of good will.My dream is to unite these people and Being virtuous doesn't mean never to fall;it means getting up and going on ever and ever again!
Any way, Thanks very much.

regards
P.V.Sri Rangan

Anonymous said...

எட தாலியறப்பாங்களே அங்க தமிழுக்காச் சாகிறாங்கள்,நீங்க என்னெண்டால் இங்கீலீசுக்காரனுக்குப் பிறந்தவன்கள் மாதிரி இங்கீலீசில மப்புக் கொட்டுறியள்.தெரியாமத்தான் கேட்கிறன் ஆருக்குத்தான் எழுதிறியள்?என்னங்கடா நீங்கள் தமிழில எழுதிறதே புரியிது இல்லை.அதுக்குள்ள இங்கிலீசு...கிலுகெட்ட நாதாரிப் பண்டியள்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...