Skip to main content

கொலைகளின் பின்னே...

கொலைகளின் பின்னே...

இன்னொரு படுகொலைக் களத்தை இந்த இலங்கையரசு செய்யத் துணியுமென்பதை நாம் அறிந்தேயிருந்தோம்.அதைத் திரிகோணமலையிலும்,யாழ்ப்பாணத்திலும் எந்தக் குற்றமுமின்றிச் செய்து முடித்தது சிங்களப் பாசிசம்.தமிழ் மக்களைத் தமது மண்ணிலிருக்கும்போதே உயிருடன் புதைக்கும் இந்தச் சூழ்நிலை எங்ஙனம் தோன்றுகிறது?இத்தகைய கொலைகளின் பின்னே அடையவிருக்கும் இலக்கென்ன?இலங்கைத் தேசியவொருமைப்பாட்டை இதனால் காத்திடுவதா இலங்கையின் நோக்கு?அல்லது தமிழ்த் தேசியவாதத்தைத் தோற்கடிக்கும் உளவியல் நெருக்கடித் தாக்குதலாகச் செய்வதா இலங்கையின் பௌத்த தர்மம்?


கடந்த-தற்கால இலங்கையரசுகளின் அற்பத்தனமான மனிதவிரோதக் காட்டுமிராண்டித்தனமானதை"barbarous"என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது!இது காலவர்த்மானத்தையும் மீறிய மிகப்பெரும் சமூகக் குற்றம்.ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் விய+கத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது.இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தரணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.

இலங்கையின் இந்த அரசியலானது இன்னொரு "இஸ்ரேல்-பாலஸ்தீனம்"மெல்ல உருவாவதைக் காட்டிவருகிறது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளால் நமது மக்களின் "தேசிய"அபிலாசைளை, நாடமைக்கும் விருப்புறுதிகளைப் பெற்றுவிட முடியுமென ஒளிவட்டங்களை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் கட்டிவிடுகிறார்கள்! சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய மனமானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க காட்டுமிராட்டித் தனத்துக்குத் தீர்வாகாது!இலங்கையின் மரபுரீதியான ஐதீகங்கள் மாற்றினத்தை சக தோழமையோடு பார்க்க மறுக்கும் ஒவ்வொரு தரணமும் பெருந்தேசியத்தின் வெற்றிக்குக் கனவு காண்கிறது!இந்தக் கனவின் பலனாக இரணுவத்தின் தேச பக்தியானது அதைக் கூலிப்படை ஸ்த்தானத்திலிருந்து விடபட வைத்துத் தமிழிர்கள்மேல் தினமும் ஏவிவிடப்படுகிறது!


இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது.என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.


இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்துபல படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் விய+கமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து,எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் விய+கத்தையுங் கொண்டிருக்கிறது.

இக்கொலைகளின் பின்னே நடந்தேறும் அரசியல்கள் சரிந்துவிழும் அமைப்பாண்மைகளை மேன்மேலும் விருத்திக்கிடவும்,அவற்றைக்கொண்டே இருப்புக்கான இனக் குரோதங்களைப் புதுப்பிப்பதற்கும் சகல பிரிவுகளுக்கும் உதவும் அபாயமுமுண்டு.

ப.வி.ஸ்ரீரங்கன்
15.05.06

Comments

Anonymous said…
முதலாளித்துவ வர்க்கத்தின் சேவகர்கள் சலுகைகளை வழங்கியே வியாபாரம் செய்கின்றனர். இதனை நன்றாக தங்களின் ஆக்கத்தின் மூலம் விளங்கியுள்ளதை அறிய முடிகின்றது.

ஈழ தேச அரசியலில் அரசியலில் எவ்வாறு கயமை செய்ய முடியும் என்பதையும் கற்றுக் கொடுத்ததே முதலாளி உறவுக்காரர்களான திராவிட பாரம்பரியம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வைகோ என்ற கோமாளி, பாப்பனிய சினிமாக்காரியுடன் அரசியல் நடத்தியதை ஈழத்திற்காக என்று கூட கதையளக்கவும் கூடும். இந்தக் கோமாளிகளிடம் இருந்து மக்களை விழிப்புற வைப்பது தங்களைப் போல சிலரது துணிச்சலான எழுத்துக்களே.
Suthan
Sri Rangan said…
நன்றி தோழரே!

சுதன்,

இன்றைய நிலையில் இவற்றைப் புரிந்துகொண்டு எவ்வளவு பேர்கள் இயக்கவாத மாயைக்கு வெளியில் பிரச்சனைகளை அணுகுகிறார்கள்?;அடிக்கு அடிதாம் என்றபடியல்லவோ கருத்திடுகிறார்கள்!

எங்கே நமது மக்களின் எதிர்காலஞ் செல்கிறது?

இன்றைய இளைஞர்களுக்கு அடி தெரியிற அளவுக்கு அரசியல் தெரிகிறதில்லை!இதுதாம் நமது பலவீனம்.

உங்கள் கருத்துகள் நம்மை இன்னும் வலுவாகச் செயற்பட வைக்கும்.

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...