Skip to main content

ஸ்ரீலங்கா எழும்பி ஆடுகிற கூத்தில்...

மேற்குலக இராஜ தந்திரிகளையே வேட்டையாடும் ஸ்ரீலங்கா:சாதரணத் தமிழர்களைச் சும்மா விட்டுவிடுமா?


»Sie werden davongejagt«
Colombo droht ausländischen Diplomaten.
Streitkräfte setzten im tamilischen Norden ihre brutale Offensive
fort.-jungewelt

இலங்கை மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களது எதிர்காலம் இருள் சூழ்ந்து ஒளிமங்கிக் கிடக்கிறது.பிராந்திய நலனுக்கும் பொருட் சந்தைக்கும் நடக்கும் போராட்டத்தில் அந்நியச் சக்திகளே முதன்மையான பாத்திரத்தை இலங்கையில் கொண்டிருக்கும்போது, நமக்கான விடுதலை,சுதந்திரம்,சுயநிர்ணயமென்பதெல்லாம் பகற்கனவாகும்.இலங்கைக்கு உதவும் இந்தியாவுக்கு, இலங்கை மக்கள்மீதோ அல்லது இந்திய மக்கள்மீதோ கரிசனை கிடையாது.மாறாக, இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களில்மட்டுமே குறிப்பான கரிசனை நிலவுகிறது.
இன்றைய இலங்கை நிலவரப்படி இந்தியாவென்ற தென்னாசியப் பிராந்தியப் பொலிஸ்காரன் தனது நலனுக்காக இலங்கையைக் குட்டிச் சுவராக்கி இன்னொரு பெரும் துயரச் சுமையை இலங்கை மக்களுக்குள் ஏற்படுத்தச் ஸ்ரீலங்கா அரசையும், அதை நிர்வாகிக்கும் மகிந்தா குடும்பத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறது.இதற்காக,"இலங்கைக்கு அந்நிய சக்திகள் ஆயுதம் கொடுத்து இலங்கையை விழுங்குவதற்குள் தாம்,தமது பிராந்திய நலனின்பொருட்டு இலங்கைக்கு உதவுவதாக"த் திமிரெடுத்த பார்ப்பனர்கள்(மாலன் வகையறாக்கள்) வக்காலாத்து வாங்குகிறார்கள்.


"பார்ப்பனர்கள் கள்ளர்கள்,கபோதிகள்!இந்திய ஆளும் வர்க்கத்தின் தின்னையில் கிடந்து நக்குபவர்கள்."


இலங்கையில் தமிழர்கள்மீது போடப்படும் குண்டுகள் யாவும்,வான் தாக்குதல் பரிசீலிப்பாக நடைபெறுகிறது.இந்தியாவென்ற அழிவுவாதி, எதிர்காலத்தில் பாகிஸ்த்தானோடோ அல்லது,சீனாவோடோ யுத்தமொன்று செய்யும் நோக்கில், இன்று இலங்கையில் தனது விமானப்படையை வைத்துப் பரீட்சித்துப் பார்க்கிறது."எப்படி,எங்கே தாக்குதலைச் செய்தால் போரிடும் இன்னொரு யுத்த ஜந்திரத்தை ஸ்தம்பிதமடைய வைக்கலமென"இந்திய ஆளும் வர்க்கம் நமது மக்களின் வாழ்விடங்களின்மீது குண்டுகளாகப் பொழிகிறது! இத்தகைய பரிசீலிப்புக்கு முழுத்தமிழ்ச் சமுதாயமே பலியாகிறது.இந்தியக் கொடியவர்களைத் துணைக்கு வைத்திருக்கும் பலத்தில், இலங்கையோ முழுமொத்தத் தமிழர்களையும் மூடிய வலயத்துக்குள் வைத்து அழிப்பதில் குறியாக இருக்கிறது.இதனால்,தமிழ்பேசும் மக்களுக்குத் தான் செய்யும் மனிதவிரோதத்தைத் தட்டிக்கேட்கும் எவரையும் வேட்டையாட முனைகிறது.இன்று, இந்தப் பிச்சைப் பாத்திரமான ஸ்ரீலங்கா எழும்பி ஆடுகிற கூத்தில் மேற்குலக நாடுகளையே அது வாயை மூடு என்கிறது!


பிச்சைப் பாத்திரம் தூக்கும் இலங்கைக்கு வந்ததே காலம்,வராது வந்த மாமணியாய் இலங்கைக்கு அம்மா சோனியா காந்தியும், இந்திய ஆளும் வர்க்கமும் கொட்டுகின்ற சில்லறைகளில் ஐயா கோத்தபத்தயும்,மகிந்தாவும் போடும் ஆட்டம் தமிழரைக் கொல்வதில் உச்சம் பெறுகிறது.நக்கிப் பிழைக்கும் நாய்க்கூட்டம்,நாட்டுமக்களுக்கு எதுவுமே செய்யாது, தமது மனைவிமாரின் சேலைக்குள் பொன் குவிக்கும் இலங்கை அரச வரலாற்றில்,அழிக்கப்படும் தமிழ் பேசும் மக்களுக்காக எவர் குரல் கொடுக்கிறார்களோ அவர்களையெல்லாம் நாட்டைவிட்டு வெளியேறும்படி எச்சரிக்கைவிடுகிறது!


தமிழ்பேசும் மக்களைப் பூட்டிய வலயத்துக்குள் வைத்து இனப்படுகொலை செய்யும் இந்தச் சிங்களக் கொலைக்காற அரசியலானது தமது இனவழிப்புக்குப் புலிகளின் படுகேவலமான பாசிசப் போக்கைச் சார்பாக்கி, நமது மக்களைப் படுகொலை செய்து வருகிறது.இதைத் தட்டிக் கேட்க முனையும் நாடுகளின் தூதர்களையே நாட்டை விட்டுப் போகவேண்டுமென்கிறது.


ஜேர்மனி,சுவிஸ்சர்லாந்துத் தூதுவர்களைக்கூடத் தனது அரசியலுக்கு உடந்தையாக இருக்கவில்லையென்றும்,புலிகளின் இராண்டாவது எழுச்சிக்கு உடந்தையாகச் செயற்படுவதுமாக கோத்தபத்தைய இராஜபக்ஷ கூறுகிறான்.எட முட்டாளே,உலகெல்லாஞ் சென்று கற்றாயா? உனது கோவணம் அவிழ்ந்து அரையைவிட்டகல்கிறது இழுத்துக்கட்டடாவெனச் சொல்வது சரியாகுமே?

அதுபோலத்தான், இன்றைய இந்தப் போக்கும்.

தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் வெளி நாடுகளுக்கே இந்த நிலையென்றால்,நீ சாதாரணத் தமிழ் மக்களுக்கு என்ன செய்வாய்?யாழ்ப்பாண-கிழக்கு மாகணத் தமிழ்பேசும் மக்களின் நிலைமையும்,அவர்கள் புலிகளுக்கெதிராகப் போடும் ஆர்ப்பாட்டங்களும் புரிகிறது!பாசிசத்தின்முன் மண்டியிடுவதுற்குக் "காந்தி"தேசமும் உடந்தையாக இருக்கிறது!


தமது மக்களின் அழிவைக்கண்டு அரசைக் குறைகூறும் சராசரியான பத்திரிகையாளர்களையே(திசநாயகம்,ஜசீகரன்) கள்ள வழக்குப்போட்டுக் கஷ்ரடியில் வைத்திருப்பவர்கள் நீங்கள்.அது, மட்டுமின்றி இந்திய அரசியல் பொறுக்கிகளை வைத்துக்கொண்டு, அவர்களது தயவில் இலங்கையைக் கட்டியெழுப்புவதாகக் கனவு காணுவதும்-ஒரு பொழுதில் சிங்கள முற்போக்கான பத்திரிகையாளர்களையே கொலை செய்வதுவரைப் பாசிசம் இலங்கையில் தாண்டவமாட, இந்த இந்திய ஆளும் வர்க்கமே உடந்தையாகவும்,மகிந்தா குடும்பத்துக்கு வழிகாட்டியுமாக இருக்கிறது.


இது,அன்று வன்னியில் செயற்பட்ட வெளிநாட்டு அரசுசாராத அமைப்புகள் முதல் இன்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பீ.பீ.சீ. எல் ஜெசிறா போன்ற ஊடகங்களையே மிரட்டிப் பணிய வைக்கின்றன.


உலகுகளுக்கெல்லாம் காதில் பூ வைக்கும் ஜேர்மனுக்கே இலங்கை தனது வாலைக் கிளப்பிக்காட்டுகிறது.இது, தமிழ்பேசும் மக்களின் நிலைமை எவ்வளவு தூரம் மோசமாகியுள்ளதென்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.இங்கே,இலங்கை அரசின் தயவில் தமிழருக்குத் தாம்பூலம் காட்டும் தமிழ் அரசியல்வாதிகள் முகத்திலெல்லாம் நன்றாகவே கரியைப் பூசுகிறது இலங்கைச் சிங்களப் பாசிச மகிந்தா குடும்பம்.இந்த நிலையில் இன்னுஞ் சில பொழுதில்,தமிழ் பேசும் மக்களுக்குக் கரிசனையோடு அரசியல் பேசுபவர்களாகக் கருணா மட்டுமல்ல ஆனந்தசங்கரி,டக்ளஸ்கூட பிளேட்டை மாற்றிப் பேசும் காலம் மாறிவரலாம்.யாரை நம்பினாலும் இவர்களை நம்பினால் இன்று நடுத்தெருவில் புலிகளாலும் இந்தியாவாலும் வந்த மக்கள், இறுதியில் நடாற்றில் நிற்கும் நிலையே நெருங்கும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.02.2009

Comments

Anonymous said…
தோழர் ரயா புலிகளுக்கு வைக்கின்ற கோரிக்கையை 4.02 அன்று போராடுகின்ற மக்கள் மத்தியில் கோரிக்கையை முன்வைத்து போராடுவதன் மூலமே எதிர்காலத்தில் சாத்தியமான நிலையை அடையமுடியும்.

இன்று தன்னெழுச்சிக்கு உட்பட்டிருகஇகின்ற மக்களுக்கான போராட்ட வடிவங்களை கொடுப்பது அவசியமாகின்றது.
யுத்த நிறுத்தம் எவ்வளவு அவசியமோ அவ்வாறே எதிர்காலத்தில் எவ்வகையான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4520:2008-11-28-19-44-34&catid=246:-7-199
மூன்றாவது பாதைக்கான திட்டத்தை உடனடியாக செய்ய வேண்டியது
அடுத்த கட்ட போராட்ட வடிவத்தில் செயல்வடிவம் கொடுத்தல் வேண்டும்.
தன்னெழுச்சிக்கு உட்பட்ட மக்களை நெறிப்படுத்துவம் அவசியமான ஒரு செயற்பாடாகும்.

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...