Skip to main content

பொய்யுரைப்பதே புலிகள் என்றாச்சு!

முள்ளி வாய்க்கால் நாடகத்துக்குப் பின்னும்,நாம் தமிழ்த் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து மாண்டுபோன பாசிசப்புலிகளது தலைமையின் தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம்,புலிகளால் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.


இன்று,வன்னிக்குள் தினமும் பட்டுணியால் செத்து மடிபவர்களுக்கு புலிகளது சரணடைவுச் சாவுத் துரோகக் கைக்கூலிப்படை போராட்ட வரலாறு என்ன தீர்வைக் கொடுத்துள்ளது?மக்களது தியாகத்தை இலங்கைப் பாசிச அரசுக்கேற்பத் தகவமைத்து, இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலில் போட்டுவிட்டு, ஒரு தலைமுறையைச் சீரழித்துச் சென்றுள்ளது தமிழ்ப் பாசிச அரசியல் வரலாறு!

மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுத்தி அழிவு யுத்தத்தில் பலிகொடுத்த புலி-இலங்கை அரச பயங்கர வாதத்துக்கும் என்ன வேறுபாட்டைக்காணமுடியும்?,இதுவரையான புலிகளது மிச்சசொச்சங்களது அரசியலானது சந்தி சிரிக்கும் வியாபாரத்தனமானது!

மகிந்தாவுக்குக் கூஜாத் தூக்கும் எஞ்சிய புலிகளோ, இலங்கையில் அரச பாசிசம் நிலைத்திருக்க வழி செய்யும்போது,புலம் பெயர் தேசங்களிலோ புலிப்பினாமிகள் மீள மக்களை மொட்டையடிக்கும் அரசியலோடு உண்டியல் குலுக்கிப் பணத்தைச் சுருட்டுவதில் கவனமாகக் காரியஞ் செய்யும்போது,நாடுகடந்த அரசாங்கம் மேற்குலக லொபியாகச் செயற்படுகிறது.மிக வியாபாரத்தனமாகச் செயற்படும் ஒரு கோமாளிக்கூட்டம் அந்த நாடுகடந்த அரசாங்கத்துக்கு எம்.பி. களாகவும்,அமைச்சர்களாகவும் இருக்கிறது!

இப்போது,இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.கள்,மந்திரிகள் பாலியல் வல்லுறவுக்காகப் பெண்களைத் தயார்ப்படுத்துகிறார்கள்?

அப்படியானவொரு சூழலுள்மாட்டுபட்டு, பாதிக்கப்பட்ட டாக்டர் மீனா கந்தசாமி,தனது ஆதங்கத்தை எழுத்தாகவும் முன்வைத்துள்ளார்.ஒரு கல்வியாளருக்கே இப்படியென்றால் பாமர மக்களது நிலை என்னவாகும்?

இத்தகையவொரு சூழலைச் சந்திக்க முனையும் புலம் பெயர் தமிழ்ச் சிறார்களது நிலை என்னவாகும்?அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் இந்தக் கூட்டத்தை நம்பிப் பேரணிகள்-போராட்டமெனச் சிறார்கள் இவர்களது பின்னே செல்வது பாதுகாப்பானதா?

இந்த நிலையில் பினாமிப்புலிக்குக் காவடி தூக்குபவர்களே,புலிகள் இதுவரை தம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள்? சொல்லுங்கள்!எஞ்சிய மக்களையும் பொருள் ரீதியாகவும்-பாலியல் ரீதியாகவும் சுரண்டுவதைத் தவிர வேறென்ன மக்களுக்காகச் செய்கின்றனர்?

மக்களிடம் சேர்த்த பலகோடிகள் டொலரை யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களுக்காகச் செலவிட்டார்களா?அல்லது அவர்களது ஒரு நேரக் கஞ்சிக்கு உப்பிட்டார்களா?

எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும்பொய்யுரைப்பதில் காலங்கடத்துகிறது!

இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் தமிழ் மக்களது சுயநிர்ணயப் போராட்டப் புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின் குறியீடாக்குவதால் நாசஞ் செய்கிறோம்.

இது,ஆபத்தானது!

போலித்தனமாகத் தேசியவிடுதலை பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் தமது தலைமையின் சரணடைவு அவலச் சாவைத் தமிழ் மக்களது விடுதலையின்பெயரால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.

இங்கே,தலைவர்கள்உயிரோடும்,தளபதிகள் போராடித்தாம் செத்தார்கள் என்று கூறுவதனூடாக இதுவரை, புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செத்தார்களெனச் சொல்லிப் பாசிச வரலாற்றை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.

ஒளிபரப்பப்படவுள்ள சனல் 4 தொலைக் காட்சியின் விவரணப் படக் காட்சிகள் "தற்போது" போலியானவை எனவும் புலிகளது ஒரு அணி பிரச்சாரஞ் செய்யத் தொடங்கிவிட்டது.இலங்கை பற்றிய குற்றத்துக்கு அதையே சாட்சியாக எடுத்தவர்கள்,பின் தமது தலைமையினது சரணடைவுத் துரோக அரசியலைக் குறித்து அச்சங்கொண்டபடி இப்போது சனல் 4 ஒளிபரப்பும் விவரணம் போலியானதெனவும் சொல்ல முற்படுகிறார்கள்.இவர்களே தமிழ் மக்களது தலைமையாம்-தமிழரின் தலைவிதிதாம் இது!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
13.03.2012

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...