Skip to main content

ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!

கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!


(நிதர்சனம் விதைக்கும் வினை.)

"முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்."

தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி.

தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி.இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா?



அது ஈ.பீ.ஆர்.எல்.எப் வரதராஜப் பெருமாளோடு இணைத்துப் பேசுவது போட்டுத் தள்ளுவதற்கான ஒத்திகைகளில் ஒன்றாக இருக்குமென்றே நாம் கருதுகிறோம்.

புலிகளின் இத்தகைய ஈனத்தனமான கருத்தியல் மற்றும் வன் முறைசார்ந்த நடவடிக்கைகள்,இன்னும் அந்த அமைப்பு ஒரு மக்கள் அமைப்பாக முடியாது, வெறும் பாசிசக் கட்டமைப்பாகவே தன்னை நிறுவிக் கொண்டு,தனது அழிவின் விளிம்பில் ஆப்பிழுத்த குரங்காகச் செயற்பட்டு வருகிறது.இன்றிருக்கும் சூழலில் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில், மாற்றுக் கருத்தாளர்களை-படைப்பாளிகளை-ஊடகவியலாளர்களைத் தமது அரசியலுக்கு இடைஞ்சல் விளைவிப்பதாகக் கருதி போட்டுத் தள்ளும் போர் உத்தியைத் தொடர்ந்து நடை முறைப் படுத்தும் புலிகள், ஈழப் போராட்டத்தை எந்தத் திசையில் எடுத்துச் செல்கிறார்களென்பதற்கு இத்தகைய இழி செயல்கள் அருமையான உதாரணம்.

நாய் வலைக்கூட நிமிர்த்தி விடலாம்.ஆனால் புலிகளின் அராஜகத்தையோ அவர்கள் கொண்டுள்ள மக்கள் விரோத அரசியலையோ மாற்றவே முடியாது.

அந்த அமைப்பும்,அதன் உத்தியோகபூர்வ இணையத் தளங்களும் தமது அரசியல் அழிவுக் காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்காகவே தமிழ் பேசும் மக்களை உளவியல் மற்றும் உயிர் பறிப்பு ஒடுக்குமுறைகளுடாய்ச் செய்து மக்கள் மத்தியில் தம்மைப் பாசிச வாதிகளாகக் கட்டமைத்து,பொது மக்களையும் கலைஞர்களையும்,புத்திஜீவிகளையும்,

ஜனநாயகவாதிகளையும் ஒடுக்கி வருகிறார்கள்.

சோபா சக்திக்கு இத்தகைய இழி நிலைகளைக் கற்பிக்கும் நிதர்சனமானது அடுத்து இன்னும் எவருக்குக் கைகாட்டிப் போட்டுத் தள்ளவதற்கான கருத்தியலை மக்கள் முன் திணிகப் போகிறதோ தெரியவில்லை.

இந்த அமைப்பும் இதன் வால்களும் எப்போதுமே மனித விரோதிகளாகவே இருக்கிறார்கள்.

இந்தப் புலிகள் அமைப்பு மக்கள் அமைப்பாக மலருமென்று நாம் கற்பனை செய்வது மடமை என்று இவர்களே எமது முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.


சோபா சக்தியையும் போடப் போறாங்கள் புலிகள்.


ஆழ்ந்த வெறுப்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
18.02.2007

--------------------------------------

Comments

ஸ்ரீரங்கன்,
இது உங்களின் பயப்பிராந்தியின் அடுத்த உருப்பெருத்த வெளியீடோ தெரியவில்லை. ஆனால், ஷோபா சக்தியின் அரசியலினை முழுதாக ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ, நிதர்சனம் அவருக்கெதிராக *நீங்கள் சுட்டுவது போலவே* கொலைப்பயமுறுத்தல் எங்கேயும் விட்டதாகத் தெரியவில்லை என்றபோதுங்கூட, விட்டதென்றால், அவரைப் பற்றி ஆதாரமில்லாமல் எழுதிய செய்திக்குறிப்பினை அவரை வாசித்த வாசிக்கின்ற ஒவ்வொருவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

நிதர்சனம்.கொம் என்ற செய்தித்தளத்தினை புலி ஆதரவாளர், ஈழ ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர், ஈழ எதிர்ப்பாளர் எல்லோரின் நன்மைக்காகவும் மூடிக்கட்டினால், நல்லாயிருக்கும் என்பது நெடுங்காலமாகப் படுகிறது. எதையும் ஆதாரமில்லாமல், அரைகுறையாக அள்ளிப்போடுவதே இச்செய்தித்தளத்தின் வேலை. இதனால், ஈழத்தேசியம் என்பதற்கு நட்டமேயோழிய எவ்விதத்திலும் பலனிருப்பதில்லை என்பதை இத்தளத்தினை முன்னிலைப்படுத்துகின்றவர்கள் உணரவில்லை :- ( புலிகள்கூட இதைத் தமக்கு ஆதரவுத்தளமென்று எண்ணிக்கொண்டிருந்தால், தம் தலையிலேயே மண்ணைப் போடுகிறார்களென்றே சொல்லவேண்டும்.

அதேநேரத்தில் உங்கள் "புலி வருகுது புலி வருகுது" ஆர்ப்பாட்டக்கூச்சலையும் குறைப்பது நல்லதென்று படவில்லையோ? சனம் நீங்கள் நல்லதாக எழுதுகின்றதைக்கூட ஸ்ரீரங்கன் பெரிது படுத்துகிறார் என்று சொல்லிவிட்டுப்போகும் நிலையிலேயல்லோ உங்கள் பதிவுகளைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது :-( இதை நன்னோக்குடன் சொன்னதாக எடுப்பீர்களென நம்புகிறேன்.
Sri Rangan said…
பெயரிலி உங்கள் கருத்துக்களோடு முழுமையாக உடன் படுகிறேன்.

நீங்கள் சொல்வது போலவே நம்மிடம் பயப்பிராந்தி மட்டுமல்ல,உடல்-உளரீதியான புலிகளின் ஒடுக்குமுறை எந் நேரமும் பாரிய அச்சத்தைத் தருகிறது.இதைப் புலிகள் நன்றாகவே அறிவார்கள்.எங்கள் நிலையில் இதைவிட எந்தத் தற்காப்பும் கிடையாது!என்ன செய்ய?புலிகளுக்கு நாமெல்லாம் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரென்றால் சிரிக்கத்தாம் வேண்டும்!

நன்றி பெயரிலி.
Anonymous said…
தன் இறுதி மூச்சுக்கு முன் புலி
தனது ஆட்டத்தை காட்டுது பாஸிசம்
பாடையில் போகமுன்பு இப்படித்தான்
ஆடும்.
//இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா?//

இதனையும் அவதூறு எண்டு தான் சொல்ல வேணும். புலிகளின் உத்தியோக இணையம் என்பது உங்கடை கண்டு பிடிப்போ.. புலிகள் அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லையெண்டு மறுப்பறிக்கை விட்டதை வாசிக்கிறதுக்கு நீங்க அவ்வப்போது புலிகள் ஆதரவு பத்திரிகைகளையும் வாசிக்க வேணும்.

(நிதர்சனத்தார்)கொஞ்சக்காலம் நிண்டு போயிருந்தாங்கள். நிம்மதியாக் கிடந்துது.. திரும்ப வந்திட்டாங்களோ..

//"ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்!"//
எனக்கென்னமோ நீங்கள் தான் புலிகளுக்கு எடுத்துக் குடுக்கிற மாதிரிக் கிடக்கு.

எதுவோ.. சோபா சக்தி தனது சத்தியக் கடதாசியில தன்ர கொம்பியுட்டர் வயருகளை மனிசி பிடுங்கி வைச்சிட்டா என எழுத மாட்டார் என நினைக்கிறன்.
பெயரிலி சிறிரங்கனிடத்தில் உள்ள பயப் ´´பிராந்தியே´´ உதுகளுக்கு காரணமாக இருக்கக் கூடும் என நானும் நெடுங்காலமாய் நினைக்கிறன். அதையே அவரும் ஏற்றுக் கொள்கிறார்.
Sri Rangan said…
//எதுவோ.. சோபா சக்தி தனது சத்தியக் கடதாசியில தன்ர கொம்பியுட்டர் வயருகளை மனிசி பிடுங்கி வைச்சிட்டா என எழுத மாட்டார் என நினைக்கிறன்.//

நிச்சியமாகக் கொழுவி!ஏனென்றால் சோபாசக்திக்குத் "தமிழ்" குடும்பச் சூழல் இல்லை.
Anonymous said…
//...அந்த அமைப்பும்,அதன் உத்தியோகபூர்வ இணையத் தளங்களும் தமது அரசியல் அழிவுக் காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்காகவே ....///

ஏனண்ணை கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைப்படுறியள். உங்கட கருத்துப்படி 'அழிவுக்காலத்தை விரைந்து செயற்படுத்துவதற்கு' எண்டால நீங்கள் சந்தோசப்பட வேணுமே? ஏன் ஒப்பாரிவக்கிறியள். முந்தி இப்பிடித்தான் 'மனுசு வயரப்புடுங்கிறா' எண்டு மயிரப்புடுங்கினியள். அதுக்குப்பிறகு ஒண்டயும் காணம்! நான் இதை எழுதினதுக்கு என்னை ஒரு 'அனாகரிகப்பேர் வழி' எண்டு பட்டம் வேற குடுத்தனியள் ஞாபமிருக்கே? நீங்கள் எழுதினால் அது இலக்கியம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம். நாங்கள் சொல்லிப்போட்டால் அனாகரிகம்.
யூரோ துலையப்போகுதெண்டு கதை விட்டனியள் எந்த நிலேல நிக்குது?
கவனம் யூரோகாரனும் உங்களப்போல 'பயப்பிராந்தி' பட்டு உங்களப்பற்றி 'ஒப்பாரி' வக்கப்போறான்!!!! ஆருக்குத்தெரியும் அப்பிடி நடந்தால் அத உங்களுக்கு கிடச்ச 'அங்கீகாரம்' எண்டும் கத விடுவியள்!!!!!
Sri Rangan said…
அநாமதேயம் என்னுடைய மனைவி வயரைப் பிடுங்கிறாளோ இல்லை என் ஆண்குறி மயிரைப்பிடுங்கிறாளோ அது எனது சொந்தப் பிரச்சனை!அதில் உம்மை வந்து விளக்குப் பிடியென்று நான் கேட்கவில்லை கண்டியோ?ஆனால் தமிழ் பேசுபவர்களைத் தமது அரசியலை விமர்சிப்பதற்காக அழிப்பதற்குப் புலிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது!அதைத்தாம் நாம் கேள்விக்குள்ளாக்கிறோம்.அடுத்து யுரோ பற்றிய கேள்வி வேறு கேட்கிறாய்.உனது பொருளாதாரப் புரிதலைக் கொஞ்சம் அவிட்டு விட்டு, என்னை -எனது கருத்தை மறுப்பதற்கு உனக்கு வக்கிருந்தால் பொருளியல் சார்ந்து வை விமர்சனத்தை.அதை விட்டு,வம்பளக்காதே!நான் ஒண்ணும் உன்னைப்போல் அரைகுறையில்லை.ஒவ்வொரு துறையிலும் அறிவை ஒழுங்காகக் கற்றுவிட்டே வலைப்பதிவில் குப்பை கொட்டுறேன்.முடிந்தால் உனது புரிதலை எடுத்துவை!வக்கில்லையா? வாயை மூடிக்கொண்டு ஒதுங்கு.உம்மைப்போன்ற அரைவேக்காட்டு மரமண்டையளோடு கருத்தாடுவதைவிட நல்ல தண்ணிபோட்டுவிட்டு ஆழ்ந்த நித்திரை கொள்வதே மேல்.போங்கடா நீங்களும் உங்கட ஈழப் போராட்டமும்.பு...
Anonymous said…
///...அநாமதேயம் என்னுடைய மனைவி வயரைப் பிடுங்கிறாளோ இல்லை என் ஆண்குறி மயிரைப்பிடுங்கிறாளோ அது எனது சொந்தப் பிரச்சனை!அதில் உம்மை வந்து விளக்குப் பிடியென்று நான் கேட்கவில்லை கண்டியோ?...///

அப்ப ஏன் ராசா வலையில போட்டு புலம்பி அழுதனி????ஒரு வரியே எழுதினா? பந்தி பந்தியா எல்லே மெமறியை கெடுத்தனி!!!

///...ஆனால் தமிழ் பேசுபவர்களைத் தமது அரசியலை விமர்சிப்பதற்காக அழிப்பதற்குப் புலிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது!அதைத்தாம் நாம் கேள்விக்குள்ளாக்கிறோம்....//

புலியளுக்கு மட்டுமில்லை எவருக்கும் இல்லை அண்டு சொல்லு மேனை. அத விட்டுப்போட்டு சோபாசக்க்திய 'எச்சரிக்கை'(!@#) விடுறதால புலி அழியுது எண்டு கதையும் சோபாசக்திய அழிக்குது எண்டு 'கவலை' பட்டு பட்டமும் விடாத ராசா. அது தான் என்ர பொயின்ற் கண்டியே!

//...அடுத்து யுரோ பற்றிய கேள்வி வேறு கேட்கிறாய்.உனது பொருளாதாரப் புரிதலைக் கொஞ்சம் அவிட்டு விட்டு, என்னை -எனது கருத்தை மறுப்பதற்கு உனக்கு வக்கிருந்தால் பொருளியல் சார்ந்து வை விமர்சனத்தை....//

ஓமண்னை இப்பிடித்தான் டொலர் கவிழும் உலகெங்கும் அந்த ரஷ்ய கரண்சி ,பேரும் மறந்து போச்சு, ரூபிள்..ரூபிள் அது தான் கொடிகட்டுமெண்டு ஊரில கத விட்டவை. நீரும் அதில ஒருவரெண்டு நினைச்சு கேட்டுப்போட்டன். அதுக்குப்போய் பொருளியல்சார்ந்த அது இது எண்டு ஏன் ராசா என்ன கொல்லுறீர். மன்னிச்சுக்கொள்ளும்...மன்னிச்சுக்கொள்ளும்!!!!

/... முடிந்தால் உனது புரிதலை எடுத்துவை!வக்கில்லையா? வாயை மூடிக்கொண்டு ஒதுங்கு.....//

இல்லை ராசா உவங்கள் ஊரில சொன்ன பொருள்முதல் வாதம், கருத்துமுதல் வாதங்களை நம்பி மோசம்போயிட்டன். அதால தான் இப்பெல்லாம் கேள்விகேக்க தொடங்கியிட்டன். அதாலதான் மேனை இப்பிடி. கோவிக்காத பிள்ள.

//... கருத்தாடுவதைவிட நல்ல தண்ணிபோட்டுவிட்டு ஆழ்ந்த நித்திரை கொள்வதே மேல்...//

சரியாச்சொன்னியள். இந்த நாசமாப்போன நாங்கள் உத முதலில செய்திருக்கலாம். அத விட்டுப் போட்டு உவங்கட பாசறை, வேலத்திட்டம் எண்ட கதயளை நம்பிப்போட்டு பாத்தா உவங்களக்காணேல்ல. ஊரில கேட்டா பின்தளத்தில எண்டாங்கள். நாங்களும் ஏதோ இந்தியா போட்டாங்கள் எண்டு நினச்சம். பிறகு தான் தெரிஞ்சுது ஜேர்மனி, பிரான்சில இருந்து வலை பதியிறாங்களெண்டு.

//...போங்கடா நீங்களும் உங்கட ஈழப் போராட்டமும்.பு......///

அது பாட்டுக்கு கிடக்க, அத ஏன் இழுக்கிறியள்!!!
Anonymous said…
இதைப்பற்றியும் கொஞ்சம் சொல்லலாமே????

http://www.thenee.com/html/200207-1.html

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...