Skip to main content

Posts

இலங்கையில் தனிநாடு உருவாகாது: ஓர் உலகளாவிய நோக்கு!

 இலங்கையில் தனிநாடு உருவாகாது: சுவிஸ் கன்டோன் மாதிரியின் அம்சங்களோடு ஓர் உலகளாவிய நோக்கு!  —ப.வி.ஶ்ரீரங்கன்  "இந்த நச்சுத்தனமான கலாச்சாரத்திலிருந்து தமிழ்ச் சமூகம் விடுபட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய ஒரு வலுவான அரசியல் பாதையை அமைக்க முடியும். " .....    நீங்கள் வலியுறுத்தும் ” மாற்றுச் சிந்தனைகளுடன் கூடிய ஒரு வலுவான அரசியல் பாதை” எது என்பதைச் சுருக்கமாகக் கூறமுடியுமா?” —பேராசன் தனம் வெற்றிவேல் ( உதயகுமார் அபிமனசிங்கம்) Thanam Vettivelu பேராசன் ஐயா தனம் வெற்றிவேல் அவர்களின் கேள்வியோடு நம் பார்வையை முன்வைக்க முனைகிறேன் . என் பார்வையில் இலங்கையில் தனிநாடு-தமிழீழம் என்பது நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் , அதை விரும்பாமலே போராடிய மக்களின்  புறக் காரணிகளை கருத்திற் கொண்டால் — பேரினவாத -செளனிச (Chauvinism) மேலாதிக்க அடக்குமுறைகளை மீட்டிப் பார்த்தால் :  1948 பிரஜாவுரிமைச் சட்டம்,  1956 சிங்களம் மட்டும் சட்டம்,  பல்கலைக்கழக தரப்படுத்தல்,  1977 இனக் கலவரம் , 1983 கறுப்பு ஜூலை,  தமிழ்ப்பிரதேச இராணுவ ஆக்கிரமிப்பு,...

“முஸ்லிம் மனிதன் ஜனநாயகத்துக்குத் தகுதியானவனா?”

  ரிஷானாவிலிருந்து  அனோஜன் வரை: மனிதனுக்கு மேலான சட்டம் எது? மதம், ஷரியா, மரணதண்டனை, கருத்துரிமை மற்றும் , நவீன ஜனநாயகம் குறித்த ஒரு விசாரணை —ப.வி. ஸ்ரீரங்கன் 09. ஜனவரி 2013 —சவூதி அரேபியாவின் தாவாத்மி. இலங்கையின் ஒரு இளம்பெண் —  ரிஷானா நபீக்  — மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட நாள் இஃது. 2026 செப்டம்பர். மீண்டும் சவூதி அரேபியா. இலங்கையின் இன்னொரு இளைஞன் —  சிவராசா அனோஜன்  — சமூக ஊடகப் பதிவொன்றைச் சார்ந்த வழக்கில் முதலில் ஐந்து ஆண்டுச் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருக்கும் தருணம். பதின்மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் , கேள்வி மாறவில்லை. ஒரு மனிதனின் உயிரைவிட மேலானது சட்டமா? அல்லது, சட்டத்தின் நோக்கமே மனித உயிரையும் மனித மாண்பையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டுமா? இதுதான் ரிஷானாவிலிருந்து அனோஜன் வரை நம்மைத் தொடர்ந்து வரும் கேள்வி. இதைவிட்டு , மதவாத அரா௧ஜக வாதிகளாக ,கருத்தியலால் உத்தப்பட்ட அடிப்படைவாதிகளாகக் கருத்து உதிர்...