Skip to main content

Posts

ஷோபாசக்தி-லீனா மணி மேகலை.

இ ந்தப் பிரச்சனைகள் யாவும் ஒன்றுடனொன்று தொடர்புப்படுத்தப்பட்ட சிக்கலிலிருந்து பேசப்படும் பிரச்சனையாக இருக்கிறது.ம.க.இ.கவுக்கு மனிதவுணர்களைத்தாண்டி வார்த்தைகளுக்கு அர்த்தங்காணும் தூய்மைவாதக் கருத்தென்றால் இரயாகரனுக்குத் தொழிலாளர்மீது தாக்கியதும் அதன் தளத்திலிருந்து மறுமுனையில் சோபாசக்தி செயற்படுவதுமான எண்ணத்தை உரைத்துப் பார்த்தல் சோபாசக்திக்கும் அவனது தனிப்பட்ட பாலியல் நடாத்தைக்குமான புள்ளியில் நிகழ்கிறது.எனவே, நீங்கள் என்ன வேடமிட்டு எழுதினாலும் இந்தப் புள்ளிகளை அழித்துவிட்டுப் புரிய முனையாதவரை எம்மில் பலர் "நல்ல-தூய"தொழிலாள வர்க்கத் தோழர்கள்தாம்.இதைத் தாண்டுவதற்கு நாம் பலதரப்பட்ட மக்களோடிணைந்து வாழ-போராடக் கற்றாகவேணும்.அது மறுக்கப்படும் சூழலில் ஒவ்வொருவரும் தத்தமக்குத் தோதான அட்டைகளை எழுதி நெற்றியில் ஒட்டுவதைத் தவிர வேறெதுவையும் செய்யவில்லை.இதுதாம் இன்றைக்கு அதிகாரத்துக்கு அவசியமானது.அதை நாம் எல்லோருமே சரியாகச் செய்கிறோம். பரவலாகப் பேசப்படும்-எழுதப்படும் எழுத்துக்கள் யாவும்"மக்கள் நலன்"சார்ந்தது என்பதாகவே நமக்குள் வருகின்றன.இதில் இன்றைய பிரச்சனைகள் யாவும் ஏதோ சில த...

இனம்,இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம்.

என்னைவிடப் பொறுக்கி உலகினில் உண்டோ? சோ பாசக்தி, ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்நிலை குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.அக்கட்டுரையில் சொல்லப்பட்டது யாவும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.அக்கட்டுரையும்,எனது கட்டுரையும் சோபாசக்தியின் தனி-பொது வாழ்வும் விமர்சனத்துக்காகிறது தமிழரங்கத்தில் ! நான் "சோபாவின் இந்தக் குரல் நியாயமென்பது" எனது கருத்து.அதற்கான நியாயப்பாடுகளோடு கட்டுரை ஒன்றை எழுதியிமிருந்தேன். என்னைப் பொறுத்தவரை கார்ல் மார்க்ஸ் உழைப்பாளர்களுக்கு ஒரு ஏசு அல்ல.அவர் உழைப்பாள வர்க்கத்துக்கான விடுதலைக்கான போராட்ட ஆயுதத்தைக் கண்டடைந்த மனிதர். அவரது வாழ்வில் ஹெலேனாவின் பாத்திரம் வெறும் வீடுபராமரிப்பது மட்டுமல்ல.அதற்கும் மேலான நிலைகளை அடைந்திருப்பது.அது குறித்து நீண்ட தகவல்கள் இணையத்திலும், எனது புத்தக விறாக்கியிலும் நான்றுகொண்டு இருக்கின்றன.நான் அது குறித்துத் தகவல்களுடன் கட்டுரை செய்தேன். இங்கே,சோபாசக்தியின் தனிபட்ட நடாத்தைக்கும் இதற்கும்-எனக்கும் என்ன முடிச்சு வேண்டிக்கிடக்கிறது? நான் இந்தச் சமூகத்தின் காவற்காரனோ அன்றி அதன் குத்தகைக் காரனோ அல்ல.முதலாளிய அமைப்பில் இச் சமூகத்தின் நிலைய...

நித்தியாநந்தா பாலியல் வல்லுறவுக்காரனா?

திருச்சபைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்: பாலியல்,மனித ஒடுக்கு முறைகள். ஜே ர்மனிய அதிகார வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாகும் தருணம் பாலியல் பலாத்தகாரம் அதை விஞ்சும் அளவுக்குத் திருச்சபைகளைச் சந்திக்கு இழுத்து வருகின்றன .இதற்குள் நித்தியானந்தாவின் போலிப் பிரமச் சாரியம் அம்பலத்துக்கு வரும்போது அனைத்தும் ஒன்றினது தொடர்ச்சியாகவும்,பிளவுமாக நம்மை அண்மிக்கிறது. பிரமச் சாரியத்தைப் பரப்பிய நித்தியானநந்தா என்ற மனிதன் பெண்களோடு(பெண்ணோடு?) பாலியல் உறவை வைத்துக் கொண்டதும் ,அவன் வெளியல் தன்னைப் பிரமச் சாரியகக் காட்டிக் கொண்டதும் இந்தியாவில் தொடர்கதைகளில் ஒன்று.நித்தியாநந்தா"பிரமச் சாரியம்" பேசாது ஆச்சிரமங்களை நடாத்தியிருந்தால் அவரது பாலியல் உறவுகள் குறித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவரோடு பாலியல் உறவுகளைச் செய்வதற்கு விரும்புவது அல்லது மறுப்பது சம்பந்தப்பட்டவர் உரிமை-சுதந்திரம்.அதுள் தலைபோட எவருக்கு உரிமையுண்டு? இத்தகைய நித்தியானந்தாக்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் பூராகவுமே இப்போது அம்பலத்துக்கு வருகிறார்கள். ஜேர்மனியக் கத்தோலிகத் திருச்சபைகளுக்குள் "தமது உடலைப் பாலியற் சுரண்டலுக்குக் க...

அதிகாரமும், ஜனநாயகமும்

இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவும்,மீண்டெழும் தேர்தல் கோசங்களும்.     நா ம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.   ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது ...

ஊடக தர்மம்

சேதுவுக்கு ஒரு முகம்-"செய்தியாளன்".   -சேது ரூபன்: சில கருத்துகள்   சே து ரூபன் கேட்கின்றார் "ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா?-குற்றமா?" என.   இதை யாரிடம் கேட்கின்றார்?   பொதுவானவொரு மக்கட்டொகுதியின்முன்!   நன்று.   இதுவரை,புலிகளுக்கும் உங்களுக்குமானவுறவு,தனியே"செய்தியாளன்"என்பதாக இருக்கின்றதெனப் புலம் பெயர் மக்களுக்குச் சொல்கிறீர்கள் இதன் மூலம்!நீங்கள் புலியினது அரசியலை"தமிழீழத்தின்"பொருட்டு ஏற்று,அவர்கட்காகக் கருத்துக்கட்டியதென்பதை பலரும் அறிவர்.இந்த அரசியற்போக்கில் உங்களுக்கும் அரசுக்குமானவுறவு தனியே"செய்தியாளன்"என்பதுவரை நீடித்ததாகவிருந்தால், இலங்கை அரசு சசிகரனை-திச நாயகத்தைக் காரணமின்றித்தாம் கைது செய்து கூட்டில் அடைத்திருக்கிறது என்றாகிறது!   சேது ரூபன் என்ற "செய்தியாளன்"புலிகளையும்,அவர்களது கொலை அரசியல்-போராட்டத்தையும்"நியாயப்படுத்தியது அவரது(சேதுவின்) ஜனநாயக உரிமையென இலங்கை அரசுகொள்ளும்பட்சத்தில், அதை, ஏன் சசிகரனுக்கும்-திசநாயகத்துக்கும் வழங்கவில்லை என்ற கேள்வி எனக்கு விடையளிக்கிற அளவுக்குப் புரிதற...

எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல்

தேசம் நெட்டில் எனக்கும்,சேது ரூபனுக்கும் நடக்கும் உரையாடல். இது முழுமையான தேடலை நோக்கி நகர்வதற்கு சேதுவை எனது தளத்துக்கு வரும்படி அழைக்கின்றேன். தேசம் நெட்தான் வசதியானால் ,அங்கே மேலும் தொடர்வோம். ஸ்ரீரங்கன் 29.12.09 http://thesamnet.co.uk/?p=18429 சேதுரூபன் on December 29, 2009 12:23 pm ப.வி.சிறீரங்கன் ஒரு செய்தியாளன் அரசுடன் தொடர்பில் இருப்பது தவறா? குற்றமா? என்னதான் உங்கள் அறிவு? ஒரு செய்தியாளன் தமிழீழ போராட்டத்தை நியாயபடுத்துவது தவறா? குற்றமா? அப்ப எதிர்பது குற்றம் இல்லையா? எந்த உலகில் எவன் சொன்னது? இன்றும் இலங்கை தமிழ் ஊடகங்கள் ஆதரவாகவே செய்திகளை வெளியிடுகின்றது ஆகவே அவர்கள் குற்றவாளிகளா? புலிகள் வேறு செய்தியாளன் வேறு என்ற வேறுபாடு தெரியதவராக தாங்கள் இண்றும் உள்ளது வேதனைக்குரியது. சேதுருபன் ஏன் துரோகியாக வேண்டும்? சேதுருபன் புலி உறுப்பினராக இருந்தால்தானே புலிகள் அவரை துரோகி என்று அறிவிக்க முடியும்? சேதுருபன் துரோகி என்றால் இலங்கையில் ஊடகங்களில் சேலை செய்யும் 100க்கு மேற்பட்ட தமிழ் செய்தியாளர்கள் துரோகிகளா? ஊங்களை எட்டபன் என்று புலிகள் சொன்னால் அதற்கு சேதுவா பொறுப்பு? சேதுவிடம் ஒரு ...

சேது ரூபன் உமக்கு இருக்கும் சட்டவுரிமை எமக்கும் உண்டுதானே?

இ ஃது, தேசம் நெட்டில் போடப்பட்ட பின்னூட்டம்.சேது கேட்கின்ற நியாயம் குறித்தான தேடலில் , புலிகளால் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டு,இன்றும்"துரோகியாக"பல புலிவிசுவாசிகளால் உளவியற்றாக்குதலுக்குட்படும் நான், அதே நியாயத்தைக் கேட்பதற்காக இதை பதிவிடுகிறேன்!   புலிகளும்,அவர்களது விசுவாசிகளும் இப்போது "வெள்ளைவேட்டிக் கத்தசாமிகளாக"த் தம்மை இனங்காட்டுகின்றனர்.பாசிசச் சேட்டையால் மற்றவர்களைக் கொன்று தள்ளியவொரு கூட்டம்,தம்மை மனிதாபிமானிகளாகவும்;ஜனநாயகவாதிகளாக்காட்டவும் இந்தத் தருணத்தில் வெளிப்படையாகப் பேசுவதென்று முலாம் பூசும்போது,இவர்களால் பாதிப்புக்குள்ளாகியவர்களும் அவர்களது நியாயத்தில் தமக்கும் அதே அளவுகோல் இருப்பதாகச் சொல்கின்ற உரிமைக்காக நானும் பேசுகிறேன்!   எனக்கு,இவர்களது ஒற்றைத் தன்மையிலான நியாயமும்,இரட்டை வேடமும் எப்போதோ புரிந்தவொன்றுதாம்.எனினும்,புலிகளது மக்கள் விரோதம் எத்தகையது என்பதைப் புரிய இப்பதிவு வழி வகுக்கும்.   நாம்,சமூக விரோதிகளைப் பல தளங்களில் இப்போது இனங்காணமுடியும்.அவர்கள் தம்மால் தாமே அம்பலமாகி வருகின்றனர்.       >>எனது இப் படத்தை பிலிக்கரிலிருந...

அர்த்தங்காண்,வெற்றி உனக்கே!

நீதி என்பது உண்மைகொள்ளலே. ஆ ன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய எம் மக்கள்தம் அர்ப்பணிப்பு இலட்சம்.எங்கெல்லாம் இன்பமென அலைகிறதோ இந்த மனம், அங்கெல்லாம் இன்பமெனும் அற்பச் சுழற்சியில் அவதிகளைக் கட்டிவைத்து, ஆன்மாவை அழிப்பதுதானே உலகத்தின் நியதி?இது,எமக்கு நீதியாக! இந்த நியதிகளின் பின்னே அலைந்தோடுகிறேன்,அற்பமான எனது உணர்வுகளை கடைந்தேற்ற முடியாத எனக்கு, அன்றைய வாழ்வுக்கு அர்த்தமொண்றுண்டென அப்பப்ப என்னைத் துரத்தும் இந்த மக்கள் குழாம், எல்லாம் செத்து,சிதைந்து மக்கிப்போகும் எலும்புகளோடு உலகெமல்லாம் வரலாற்றைச் சொல்லும் எச்சங்களாகின. என்ன சொல்வேன்,எப்படி ஏற்பேன்?எனக்கென்றொரு பணியொன்றுண்டானால் எல்லாவற்றையுமே சகஜமாகப் பார்க்கும் மானிடர்தம் வாழ்வில் வதைகளகற்றிய வழிகளைச் சொன்னார், பழிகளைக்கண்டு வாழ்வுக்கு என்னவொரு தேவையென உயிர்கொண்டலையும் என்னையே கேள்விக்குட்படுத்தும் எனது நிலையைச் சொல்வேன்.பொழுது புலர்ந்து விடியலை அண்மித...

அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம்.

புலிக்குப் பின்னான சூழலில்:மே.18 இயக்கமும்,அதன் கடந்தகால அரசியல் திசைவழியும்.     -சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.     இ லங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் இனம்சார்ந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளாலும், சிறுபான்மை இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்.     இவ்வொடுக்குமுறைகள் மனித நடாத்தையின் அனைத்துத் தளத்திலுமாக(நிலம்-பண்பாடு,மொழி,இன அடையாளம்,சாதிய,பெண் அடையாளம்,பிரதேசம்,ஆன்மீகம்,அறிவு-கல்வி,வரலாற்றுப் பெருமிதம்,உயிரியல்மரபு என...) நடந்தேறியது-நடந்தேறுகிறது!     இதன் பாதகமான பக்கத்தின் விளைவாகப் பல நிகழ்ந்தேறினெ: >>இனம்சார் விடுதலை,தனித்தேசம்,புரட்சிகர ஐக்கிய இலங்கை,தொழிலாளர் வர்க்க விடுதலை இத்யாதி >இதைச் செய்பவர்கள் யார்?, அவர்களது கடந்தகாலத்தின் போராட்டப் பங்கு என்ன? இரகுமான் ஜான் என்பது ஒரு பொது அடையாளம் புரட்சிவாதியாக அக்கேள...