சிந்தனையை சிறப்பாக்கிய சிற்பி! ஜேஆன்-பவுல் சாற்ரார் (1905-1980) சாற்ராரும் மானுடவிடுதலையும்-கனவுகளுக்கு விடைகொடுத்த இருப்பின் வலியுணர்ந்த உன்னதம். வரும் 21.ஜுலை 2005 சாற்ராருக்கு 100 வயது,இது நினைவாகி விட்டது. ஒரு பிந்திய- மந்தமுடைய சமூகமாக மானுடம் இருப்பதும்,உற்பத்தியின் வீச்சில் உறுதிப்படுமெனவெண்ணும் வாழ்வாதாரங்களையும் நம்புவதற்கு மனத்தளவிற்கூட முடியாதிருக்கும் காலம் இன்றைய காலமாகும்.எந்தத் தளத்திலும் கால்வைத்திருக்க முடியாத தரணத்தில் மிதக்கும் மௌன மனவோட்டத்திற்கு மதிலொழுப்பிக் கொள்ள முனைவதில் ஆத்மீகம் தோற்றுப்போனது. அவதியோடு சாவை நோக்கும் கரித்துண்டமாக வாழ்வும்,உயிர்ப்பும் சிறுமைப்படும். 'சுதந்திரம்-விடுதலை' இன்றைக்கு அதிகமாக உணரப்படும் வார்தைகள்,குறியீடாகிக் கருத்துணர்ந்து அநுபவிக்கும் மானுட தரிசனமாகும்.இவற்றை இதுவரை மானுடம் நேர்த்தியாகப் பெறமுடிந்ததா?அநுபவித்துக்கொள்ளும் வாய்ப்புத்தாம் கிடைத்ததா? இன்னும் யோசிப்பதே விடையாகும். பொருளுண்டு,புவியுண்டு! எனினும் மானுடர் வாழ்வு வெற்றுப் புள்ளியில் வீரியம்பேசி வினையாற்ற வக்கின்றித் தன்னைத்தானே அடிமைத் தளைக்குள் உந்தி தள்ளியபடி. இங...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்