Thursday, May 12, 2005

தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!

தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!


இன்றெமது காலத்து உயிர் வாழ்வானது உயிர்த்திருப்பதற்கான நோக்குநிலையாக மாறியபின்> நமது வாழ்வூக்கம் அதுசார்ந்த உணர்தலை சமூகமட்டத்திலும்,அறிவத்தளத்திலும் உறுதியாகப் பதியம் போட்டுவிட்டது. இந்தப் பொருள் வாழ்வானது நமது இருப்பைக் குறுகிய மதிப்பீடுகளால்(இன்றைய வாழ்வியல் மதிப்பீடுகள்)அன்நியப்டுத்தியபோது,நமது வாழ்வு விலங்கிடப்பட்டு ' இருப்பழிந்த-உளமிழந்த' நிலையாகிப் போனதால் ஜந்திரத்தனமானோம். இப்போதெல்லாம் வாழ்வினது பெறுமானம் நிம்மதியான வேலையும்,அதைத்தக்கவைப்பதற்கான விடாமுயற்சியுமே மனித வாழ்வினது பெருநோக்கில் முக்கியமான பெறுமானம்! எந்தவொரு சூழலிலும் இந்த வகைப் புரிதலோடுதாம் நமது உயிர்வாழ்வு இருப்பை உறுதிப் படுத்துகிறது.இதன்போக்கு தொழில்சார் கல்வியின் தேவையை உந்தித் தள்ளி,அறிவுப்பரப்பை ஊனப்படுத்தியதாக மாற்றியுள்ளது.


பண்டுதொட்டு ஆத்மீகத்தேவையைச் சிதைத்து மலினப்படுத்திய மதங்கள்-பொருளியல் நலன்கள் மனிதர்களின் மனித முகத்தைப் பறித்தெடுத்துவிட்டு,ஜந்திரத்தின் உதிரிப்பாகமாக மனிதர்களை அத்துடன் இணைத்துவிட்டுள்ளது.இதுதாம் நமதான இன்றைய வாழ்வும்,அதன் பெறுமானமும்!இதிலிருந்து விடுபடக்கூடிய வழிவகைகளைக் கல்வியிலிருந்து தொடக்கி வைக்கக் கல்வியும் மானுடர்சார்ந்த நோக்குநிலையிலிருந்து பயிற்றுவிப்பதாகவுமில்லை.அதைக் கட்டுப்படுத்தும் பெருமூலதனம் தனது இருப்கேற்றவாறு கல்வியைத் தயார்படுத்தி,ஒழுங்கமைந்த தொழில்சார் முறைமைகளுக்கே முன்னுரிமை கொடுப்பதால் நமது எதிர்காலம் இன்னும் அமைதியிழந்தும்,ஆறுதலின்றியும் போகப்போகின்றது.மனித முகமிழந்த வெறும் ஜந்திரத்தனமான உணர்வுகளோடு மனிதர்கள் சமூகக்கடமையிலீடுபடுவது எதைநோக்கி? உற்பத்தியிலீடுபடுவதும்,பெருமூலதனம் உபரியீட்டுதலுக்காகக் காரியஞ் செய்வதுதாம் வாழ்வின் பெறுமானமா?


நேற்று ஊரோடு வாழ்ந்த வாழ்வு பறிபோனது.


இன்று உடலோடு உயிர்த்திருப்பதுகூட முடியாதவொரு சூழலைத் தந்துள்ள நமது பொருளாதாரப் பொறிமுறை,இனிப் பெரும்பாலும் பூமியில் மானுட வாழ்வுக்கேற்ற பகுதிகளை இல்லாதாக்கிவிடும்.நர்மதா அணைக்கட்டு,மின் திட்டங்கள்-எண்ணையூற்று வயல்கள்,இன்னும் எத்தனையோ கனிவளச் சுரண்டல்களுக்காக மானுடமற்ற திட்டங்கள் நம் வாழ்வைச் சிறப்புறச் செய்யப்போவதில்லை.இந்த இருள்சூழ்ந்த வாழ்வில் எப்படியொரு நம்பிக்கை முகிழ்த்து, எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும்?பிரிடிஷ் பெற்றோலியம் நையீரியாவில் செய்யும் அனியாயக் காரியம் அந்தப் பகுதி மானுடர்களின் வாழ் நிலங்களை நஞ்சாக்கி மக்களின் இருப்பையே அழித்துக் கொண்டிருக்கிறது.


இந்தியாவிலோ பாரிய ஏகாதிபத்தியத் தொழில் நிறுவனங்கள் தமது வேட்டையைத் தொடங்கி நமது பக்க வாழ்சூழலைக் கெடுத்து வருவது தொடர்கிறது.மனித இனம் வாழ்வதற்காக இடம் பெயர்ந்த காலங்கள் போய்,இப்போது தொழிற்கழகங்கள் தாம் உயிர்த்திருப்பதற்காக இடம் பெயரும் காலம் இன்றைய காலம்.இங்கே அனைத்து மனிதவிழுமியங்களும் சிதைக்கப்பட்டு உருத்தெரியாது அழிக்கப்படுகிறது!நமது அறிவுஜீவுகளும் தமது பொன்னான அறிவை இந்தக் காட்டுமிராண்டித் தொழில் கழகங்களுக்கே வழங்கி நமது வாழ்வையின்னும் மோசாமாக்கிவிட்டார்கள்.


1993 இல் தொடங்கி இன்றுவரை தென்கிழக்காசிப் பிராந்தியம் அன்நியக் கம்பனிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது.
இந்தியத் துணைக்கண்டம் தனது வாழ்சூழலைத் தொழிற்கழகங்களுக்காக ஏலம்விட்டு மனிதவதையைச் செய்தத் தொடங்கியுள்ளது.
இதனால் யுத்தங்கள்,அரசியற்கொலைகள்,அமைதியின்மை,
சமூகப்பதட்டம்,
இராணுவமயப்படுத்தலாகக் குடிசார் வாழ்வு அழிந்துபோகிறது.நாமெல்லாம் வாழ்விழந்தோம் வாழ்வதற்காய்!வாழ்வுதாம் கிட்டவில்லை,வதைபடுகிறோம்.எதிலுமே ஆதாயம்தேடும் ஐரோப்பிய மனம் எமது காலத்தை தொழில் கழகங்களின் உயிர்ப்புக்கான காலமாகமாற்றியுள்ளது.இங்கே மனிதர்கள் வெறும் கச்சாப்பொருளே.
இதனால் வதைபடுகிறோம்.வார்த்தையிற் சொல்லமுடியாத வேதனைகளை அகதி வாழ்வு தந்துவிடுகிறது.உற்றார்களில்லை,உறவில்லை,சுற்றமில்லை,
சூழலில்லை.
எங்கே போய் வாழ்வின் சுகத்தைத்தேடுவது?யாரோடுபோய் எதைநோக?நமக்கான குறியீடென்ன? அகதி! அற்புதமான காலம் அவதியோடும்,அழுகையோடும்போவதா?


எதைநோக்கி?...


மனித்தைநோக்கி மதங்கள் காட்டிய பாதை அடிமைத்தளையைத் தந்தது.முன்னேற்றம் காட்டிய பொருளாதாரமோ உயிர்ப்பலியைத் தந்தது.
ஆன்மாவின்றி அவதிப்படும் உலக மனிதர்கள் அங்கம் வகிக்கம் பொருளாதாரப் பொறிமுறை அழிவைநோக்கித்தாம் செல்லுமேயொழிய அற்புதங்களைச் செய்யமுடியாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வதைகளையே தந்துவிடுகின்றன,வரும் காலமெல்லாம் மனித அழிவின்றி வளமான வாழ்வு வரப்போவதில்லை.


அழிந்துதாம் ஆக்கமானல்,மனிதத்தோடு வாழ்வதற்கு-எல்லோரும் சமமுற ஏதுசெய்வோம்?...

ப.வி.ஸ்ரீரங்கன்
13.05.05

14 comments:

Anonymous said...

kdpj cwTfSfk; rpijtilfpd;wd> Kd;dH gyUld; ciuahLtjw;F Neuk; ,Ue;jJ> jhHkPfff; flik ,Ue;jJ. ,itfs; mw;Wg; Ngha; jdpj;Jtthjk; jiyJ}f;fpapUf;dpw;dJ. kdpj cwT vd;gjd; tl;lk; RUq;fpapUf;fpd;wJ. ,Jjhd; vkJ tho;T epiy.

Ntyd;

Anonymous said...

மனித உறவுகளும் சிதைவடைகின்றன, முன்னர் பலருடன் உரையாடுவதற்கு நேரம் இருந்தது, தார்மீகக் கடமை இருந்தது. இவைகள் அற்றுப் போய் தனித்துவவாதம் தலைதூக்கியிருக்கின்றது. மனித உறவு என்பதன் வட்டம் சுருங்கியிருக்கின்றது. இதுதான் எமது வாழ்வு நிலை.

வேலன்

Sri Rangan said...

வேலன் உங்கள் கருத்துச் சரியானது.இதிலிருந்து மீண்டுவிடத்துடிக்கும் மனிதர்களுக்கு எந்தச் சமூகமுன்னெடுப்புமற்ற நிலைதாம் இன்னும் மோசமாக இருக்கிறது.மனிதர்கள் அதிதீவிரச் சுதந்திரத்தை நாடிச் சுயநலமிகளாக உருப்பெற்றுவிட்டோம்.முதலாளியம் எப்பவுமே தனிநபர் சுதந்திரத்தைத் தூண்டியபடியேதாம் தன்னைக் காத்துக்கொள்கிறது.இத்தகைய தனிநபர் சுதந்திரத்தின்பாலான சமூகவுணர்வு தன்னை மற்றவர்களுடன் பிணைக்க முடியாத உளவியலைத்தோற்றி மனிதர்களின் படைப்பாற்றலை முழுமையாகச் சிதைத்துவிடுகிறது.இதைநோக்கிய விவாதமொன்றைத் தொடங்கும்வாயிலாக எழுதிய, மிக முக்கியமான தேவையை இக்கட்டுரையில் சொன்னோம்,யாருமே திரும்பியும் பார்க்கவில்லை!நீங்களாவது அப்பப்ப கருத்துக்கூறும்போது ஒரு உற்சாகம் மனதில்தோன்றி மறைகிறது.உங்களுக்கு என் உளமொப்பிய நன்றி வேலன்.
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

Anonymous said...

cz;okapy; nrhd;dhy; cq;fs; vOj;jpy; ,yFj;jd;ik Ntz;Lk;. vy;NyUk; cq;fs; vOj;J tbtj;ij mwpe;J nfhs;tjpy; rpukk; ,Ug;gij ehd; czHe;Js;Nsd. ,jw;F mjupubapy; vOJfpd;w NghJ xU vspikg; Nghf;if filg;gpbf;fpd;Nwd. mit $w jpUg;jp ,y;iy. fhuzk; murpay; tQ;Qhdk; ,yFthf vOj vd;Kd;NdhHfs; fw;gpf;ftp;iy. ,J xU fhuzkh mikayhk;
rhuk;rj;ijg; Gupe;J nfhs;fpd;Nwd; mt;tsTjhd; mjpypUe;J ePQ;fs; vd;d nrhy;y tUfpd;wPHfs; vd;gijg; Gupe;J nfhs;fpd;Nwd;. jaT nra;J cq;fs; vOj;J tbtj;jpy; khw;wk; nfhz;LthUq;fs;.
khk; vy;NyhUk; ,e;jr; r%fj;jpy; CWjpahf epiy nfhz;ltHfs; ,e;jr; r%fk; vk;ik jpUg;gjp nfhs;sitf;fpd;wJ. jdpehHfshf ,Ue;J nfhz;L RajpUg;gjpf;F mg;ghy; vjw;Fk; ,lkpy;iy.
Gjpy Mf;fk;,te;Js;sJ mjidg; ghUq;fs;
ed;ap

Anonymous said...

,jw;F ,d;ndhU fhuzKk; ,Uf;fpd;wJ. xNu rpe;jidia kw;wtHgfs; $Wffpd;w NghJ mtw;iw milahsk; fhz ,yFthf mikrfpd;wJ. ,itfs; Njlypd; xU epiy. Mdhy; xt;nthUtupd; NjlYk; tpj;jpahrkhd epiyiaf; nfhz;lJ.
ehk; Xustpw;F trjpahf tho;eJ nfhz;bUf;fpdNwhk; me;j Neuj;jpy; njUtpy; gLj;J Vd; njUtpy; kw;wtHfs; gLjlJ cw;q;Ffpd;wdH vd;W Ma;tJ vy;NyhUf;Fk; mtrpakhdJ xd;whf ,Ug;gjy;iy. kdpj cwT vd;gJ jd; Nrhypiag; ghHg;gJ vd;gJ ,ay;ghfp tpLtjpy;iy ,e;jr; r%f mikg;gpd; cw;gj;jp vd;gij thrfHfs; Gupe;J nfhs;shik nghWf;ffj;jf;fJ. nghWikahf mtHfSf;F mtHfspd; tHf;f milahsj;ij fhl;LtJ cq;fs; khjpupahdHtHfspd; Ntiyahf flikahf ,Uf;f KbAk;.
ed;wp

Anonymous said...

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. ஒரே சிந்தனையை மற்றவர்கள் கூறுகின்ற போது அவற்றை அடையாளம் காண இலகுவாக அமைகின்றது. இவைகள் தேடலின் ஒரு நிலை. ஆனால் ஒவ்வொருவரின் தேடலும் வித்தியாசமான நிலையைக் கொண்டது.
நாம் ஓரளவிற்கு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம,; அந்த நேரத்தில் தெருவில் படுத்து- ஏன் தெருவில் மற்றவர்கள் படுத்து உறங்குகின்றனர் என்று ஆய்வது எல்லோருக்கும் அவசியமான ஒன்றாக இருப்பதல்லை. மனித உறவு என்பது தன் சோலியைப் பார்ப்பது என்பது இயல்பாகி விடுவதில்லை. இந்தச் சமூக அமைப்பின் உற்பத்தி என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளாமை பொறுக்ககத்தக்கது. பொறுமையாக அவர்களுக்கு அவர்களின் வர்க்க அடையாளத்தை காட்டுவது உங்கள் மாதிரியானர்வர்களின் வேலையாக- கடமையாக இருக்க முடியும்.
நன்றி

--

உண்மயில் சொன்னால் உங்கள் எழுத்தில் இலகுத்தன்மை வேண்டும். எல்லேரும் உங்கள் எழுத்து வடிவத்தை அறிந்து கொள்வதில் சிரமம் இருப்பதை நான் உணர்ந்துள்ளேன். இதற்கு அதரிரடியில் எழுதுகின்ற போது ஒரு எளிமைப் போக்கை கடைப்பிடிக்கின்றேன். அவை கூடத் திருப்தி இல்லை. காரணம் அரசியல் விஞ்ஞானம் இலகுவாக எழுத என் முன்னோர்கள் கற்பிக்கவி;லை. இது ஒரு காரணமா அமையலாம்.
சாரம்சத்தைப் புரிந்து கொள்கின்றேன,; அவ்வளவுதான். அதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றேன். தயவு செய்து உங்கள் எழுத்து வடிவத்தில் மாற்றம் கொண்டுவாருங்கள்.
நாம் எல்லோரும் இந்தச் சமூகத்தில் உறுதியாக நிலை கொண்டவர்கள். இந்தச் சமூகம் எம்மை திருப்பதி கொள்ளவைக்கின்றது. தனிநபர்களாக இருந்து கொண்டு சுயதிருப்பதிக்கு அப்பால் எதற்கும் இடமில்லை.
புதிய ஆக்கம் வந்துள்ளது. அதனைப் பாருங்கள்.
நன்றி.

Sri Rangan said...

உங்கள் கருத்துக்களில் எனக்கு எப்பவும் உடன்பாடுண்டு!இவை சரியான-நேர்த்தியைக் கொண்டிருப்பவை.உண்மையைச் சொன்னால் என்னால் இந்த நடையை மாற்றமுடியாதுள்ளது.25 வருடங்களாக இப்படியெழுதியே பழக்கமானது.முடிந்தவரை முயற்சிசெய்கிறேன்.வீட்டில் கூட பேச்சுமொழியில் உரையாடுவதில்லை. என் மனைவிகூட பலமுறை பரிகாசித்துச் சுட்டிக்காட்டுவது உண்டு.

Anonymous said...

,e;j ciwe;j epiyia vt;thW Nghf;fKbAK;.

Anonymous said...

இந்த உறைந்த நிலையை எவ்வாறு போக்கமுடியும்?.

Voice on Wings said...

அருமையான கட்டுரை, இந்நாளில் தேவையானதும் கூட. நடையைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. கனமான விஷயங்களை விவரிக்க இத்தகைய நடை தேவையென்றே எண்ணுகிறேன்.

Sri Rangan said...

வணக்கம்>;Voice on Wings !
தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.இன்றைய கால நமது வாழ்வானாது மிகவும் கெடுதிக்குள்ளான சமூகப் பொருளாதாரப் பொறிமுறையால் நாசமாகப்படுகிறது.அனைத்து உயிரினங்களும் பூமியல் வாழமுடியாதவொரு சூழலை இன்றைய உலகப்பெரும் தொழிற்கழகங்கள் ஏற்படுத்துகின்றன.இதை நமது அரசுகளும்,புத்திஜீவிகளும் எந்த வகையிலும் எதிர்க்கத் திரணியற்று அதன் வீச்சோடு ஒன்றுபட்டுத் தத்தமது நலன்களோடு காரியமாற்றுகிறார்கள்.நாமோ போலியான தப்பித்தல்களோடு காரணஞ்சொல்லிக்கொண்டு நமதுபாட்டைப் பார்க்கிறோம்.எனினும் நமது குழந்தைகளின் எதிர்காலமானது... மிகவுமொரு அடிமைப்பட்ட-நோய்வாய்ப்பட்ட வாழ்வையே எதிர்கொள்வார்கள்.இதிலிருந்து விடுதலை பெறுவதானால் குறைந்த பட்சமாவது அருந்ததி ராய் போன்றோர் மாதிரியான முதலாளிய ஜனநாயகப் பண்புக்கான போராட்டமாவது செய்தே தீரணம்.இதை மையப்படுத்திய போராட்டமானது இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய முதலாளியத்தைத் தோற்றுவிக்கவேண்டிய அவசியத்தோடு-நமது பாரிம்பரிய இயற்கையோடொன்றிய பொருளாதார முன்னெடுப்புகளையும் பாதுகாக்கவேண்டிய தேவையாகும்.இவைகாலத்தின் அவசியம்.

Anonymous said...

ePq;fs; fUJtJ rupNa vdpDK; Njrpaj;jpd; mtyk epiy vd;gJ %yjdj;jpw;F mbik (epjp) nfhs;Sk; epi iyjhNd cs;sJ. Mdhy; ePq;fs; $Wk; mbepiy mZFKiw rhjf> fhjf epiy gw;wp Muha;jy; mtrpakhFK;. Vnddpy; jkJ Njit Kbe;jTld; Njrpak; jiyfPohf khWk; vd;gJ epr;rakhdNj.
Rjd;

Anonymous said...

நீங்கள் கருதுவது சரியே. எனினும் தேசியத்தின் அவல நிலை என்பது மூலதனத்திற்கு அடிமை (நிதி) கொள்ளும் நிலைதானே உள்ளது. ஆனால் நீங்கள் கூறும் அடிநிலை அணுகுமுறை சாதக, பாதக நிலை பற்றி ஆராய்தல் அவசியமாகும். ஏனெனில் தமது தேவை முடிந்தவுடன் தேசியம் தலைகீழாக மாறும் என்பது நிச்சயமானதே.
சுதன்

Sri Rangan said...

இது சரியானது சுகன்.ஏற்றுக்கொள்கிறேன்.

ஐரோப்பா , அமெரிக்கா , உலக அளவில் ஜனநாயக நாடுகளெனில் ஏனிந்த நிலை?

  ஐ.நா’வில்     பாலஸ்த்தீனத்தின் கழுத்தை அறுத்த அமெரிக்காவும் , ஐரோப்பாவும் —சிறு, குறிப்பு !   இன்றைய நாளில் , அமெரிக்கா -ஐரோப்பியக் கூட்டம...