Skip to main content

Posts

எது பயங்கரவாதம்?

அதிகாரம் என்பது வியூகமாகுமா? உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் ,வர்க்கப்போரும், இன்று மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் இந்த வேளையில் அதிகாரத்தையும் -ஆதிக்கத்தையும் தக்க வைத்தலே மேலானவொன்றாக அமெரிக்க -ஐரோப்பியப் பாசிச அரசுகளுக்கு மாறியுள்ளது.அதன் நோக்கமானது ஒரு தேசத்தை அடியோடு சாய்ப்பதற்கு -ஆட்சிமாற்றத்தை செய்வதற்கு போரிட்டும் ;மக்களை  அச்சப்படுத்திக் கொன்று குவித்தும்; இடம் பெயர வைத்தும்  நிலை நாட்ட முடியுடிமென்பதற்கு சிரியா நல்லதொரு உதாரணமாகப் போகின்றது.இதன் மூலம் ஒரு இனத்தின் தேசிய -வரலாற்று அடையாளங்களைக் கூட அழித்து ஆதிக்கத்தை நிலைப்படுத்தி விடுவதில் ஈராக் மீதான அழிவு யுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து நடாத்தியபடி சிரியாவில் அதன் உச்ச இலக்கை எட்ட முனைகிறது.இதற்காக இத்தேசத்தைப் பயங்கரவாதிகளது கூடராமாக்கி விட்டுள்ளது.இந்தப் பயங்கரவாதிகளேதாம் வொசிங்டனின் வெள்ளை மாளிகைக்குள் நவீனத் தலைவர்களாகவும் அரபு நாடுகளில் ISIS பயங்கரவாதிகளாகவும் மக்களைக் கொன்று குவிக்கின்றனர். ஆனால் ,பரந்துபட்ட மக்களுக்கு இந்த அதிகாரத்தைத் தோற்கடித்தல் என்பது முன்நிபந்தனைச் சிந்தனை,அரசியல் நடைமுறைப் பயிற்சியில்....

நாளை மகிந்தாவுக்கும் ,மைத்திரிக்கும் ஓட்டுப் போடுவோம்!

இ ன்றுவரை சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக்கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது.தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் மகிந்தாவை ஆதரித்தும் ,மைத்திரிபால சிறீசேனாவை ஆதரித்தும் தமிழ்த் தலைமைகள் செய்யும் பெருந்துரோகம் தமிழ் மக்களுக்கானவொரு அரசியல் வெளியை இல்லாமற் செய்ததே!அடையாள அரசியலை மறுத்த  தெரிவில் தமிழ்மக்கள் தமது அரசியலைத் தீர்மானிக்கவே முடியாதபடி நம்மை அரசியல் அநாதைகளாக்கிவிட்டு, நாளை நடைபெறும் இலங்கை அதிபர் தேர்தலில் மைத்திரியின் பின்னால் நம்மை அழைத்துச் செல்லும் நரித்தனமானது...

வடக்கு ஆதிக்கம்

"வடக்கும்,கிழக்கும் "பிரிவதற்குப் புலிகளே காரணம்! 42 வது இலக்கியச் சந்திப்பு : பிள்ளையான்-கருணா கம்பனியின் பிரச்சாரகப் பீரங்கி ஞானம் தரும் மாகாணசபை குறித்த விளக்கந்தாம் என்ன-ஏன்? இ லங்கை-இந்திய அரச லொபிகாளாலும் ,மேற்குலக என்.ஜீ.ஓ.களது[Non-governmental organization ] தயவில் உயிர்வாழும் தமிழ் விசமிகளாலும் நடாத்தப்பட்ட பேர்ளின் 42 வது இலக்கியச் சந்திப்பு முற்றுமுழுதும் இந்த விசமிகளாலேதாம் நிறைக்கப்பட்டது.இதை ஏலவே புரிந்துகொண்ட பலர் இதைத் தவிர்த்துக்கொண்டனர்.இந்த இலக்கியச் சந்திப்பானது அதை உருவாக்கியவர்களால் நிராகரிப்பட்டு, இறுதியாவிருந்த ஒரு சிலரும் அதைவிட்டு ஒதுங்கும் அரசியலாக இந்த இந்திய-இலங்கை லொபிகளது கை மேலோங்கி வருகிறது. இன்று,இந்த இலக்கியச் சந்திப்பு முன்னெடுப்பும்;நகர்வும்  ஒருவரையொருவர் கேவலமாகப் பழிவாங்கும் அரசியலாக மாறியுள்ளது. புலத்தில் எல்லோருக்கும்  தத்தமது அரசியல் நலன் சார்ந்தும்-பொருள் சார்ந்தும்;இருப்புச் சார்ந்தும்  ஏதோவொரு குழுக்கட்டல் தேவையாகி,ஒவ்வொருவரும் சிறு சிறு தீவுகளாக இருந்துகொண்டே குழுவோடு ஐக்கியமாகியுள்ளார்கள். இவர்களிடம் ஒருவரையொருவர் ...

தலித்துத் Theva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு...

காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்: T heva Thasan : கவுண்டமணி் . வடிவேல் எந்த முலைக்கு [ அஃது முலையில்லை - "மூலை"  என்று புரியுங்க மக்காள்] தூக்கிச்சாப்பிறாரு சீமான் பிணத்திலும் அரசியல் பிழைப்பு நடத்தும் பிணம்தின்னிகள்.... [ https://www.facebook.com/shoba.sakthi.1/posts/10203054637468366?stream_ref=10   ] "முற்றத்து வாழை குலையீன     முத்தனும் பெண்டிலுங் கூத்தாட" இடையீடு: முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க : "Ich glaube an die Sonne,auch wenn sie nicht scheint.      Ich glaube an die Liebe, auch wenn ich sie nicht spüre. Ich glaube an Gott,auch wenn ich ihn nicht sehe." - Unbekannt [Quelle: Jüdische Inschrift im Warschauer Ghetto]  "சூரியன் பிரகாசிக்காதபோதும் நான்  சூரியன் இருக்கிறதென்பதாகவே நம்புகிறேன்.    அன்பின் தடையமே அற்றிருக்கும்போதினுங்கூட நான் அஃதிருப்பதாகவே நம்பு...

(இ)லீனா மணிமேகலைக்கு "எவர் " காட்டுவார் "ஆதாரம்"?

" சி ங்கள-இந்திய ஆளும் வர்க்கங்கள் "ஈழத்தில்" நடந்த இந்திய-இலங்கை-அரசுகளினது யுத்தக் குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை மற்றும் தென்னாசியப் பிராந்திய மேலாதிக்க இந்திய ஆளும் வர்கத்தின் கொடிய மனிதவிரோதச் செயற்பாடுகளை  மெச்சவும் அரசியல் -உளவுப் படைகளை முடுக்கிவிட்ட இன்றைய நிலையுள், இந்திய ரோவானது பல உப கூலிகளைக் கிழ்வரும்படி தகமைத்து இயக்குவது பரவலாகப் புரியவேண்டும். ஒரு நோக்கு நிலைக்குட்பட்டு  பல்வேறுபட்ட செயற் தளத்தில் தத்தமக்கான கூலிகளை ஏற்படுத்தியிருப்பதை இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட இலங்கையின் இற்றைவரையான அரசியல் போக்கில் பலரது புதிய-பழைய வருகையும், புலிகளுக்குள்ளிருந்து புறப்பட்ட "கலைஞர்கள்-படைப்பாளிகள்-விமர்சகர்கள்" வரையும் கூடவே, இந்தியாவின் அரசியலுக்குத் தகவமைக்கப் போதாதெனப் தமிழக்கத்துப் பல "புரட்சியாளர்கள்-குறும்படக் கோணங்கிகளென" க் கூடிக்கொண்ட அரசியல் அரங்கில், இந்தச் சுண்டங்காய்ப் பெண்ணு, லீனா மணிமேகலை போடும் தனது தனிப்பட்ட...

சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம்

சுகனார் படிகம். கருவரத்தேவர் எண்ட நம்மட சுகனார் ரொம்பத்தான் காவடியொண்டை அன்று தூக்கினார்-1990 வாக்கில்! // Shoba Sakthi : 'தன்னைச் சாதிவெறியன் அல்ல என மறுபடியும் மறுபடியும் நிரூபிக்காதவரை ஒவ்வொரு வெள்ளாளனும் சாதி வெறியனே ' - சுகன் // அ தில்லப் பாருங்கோ, அவர் சும்மாவொரு வெறும் காவடியைத் தூக்கியிருந்தால் பறுவாயில்லை.இது,முழுமொத்தக் குறைபாட்டையும் இரண்டாயிரம் வருடங்களாக வந்த அனைத்து வினைகளையும் மறுத்து "வேளாளன் சாதி வெறியன்" என்றாக்கி வைத்து, அதன் தேற்றங்களுக்குப் பிரியாவிடைகொடுத்த சுகனது வரண்ட பார்வைக்கு அல்லது சமூகத்தைப் புரியும் திரணியற்ற கிறுக்குத் தனத்துக்கு இன்று, மகுடம் வைத்து அதையும் சோபாசக்தி ,தனக்கேற்ப வளைத்துப்போடுவது சுத்த சாக்கடைத் தனம். இலங்கையில் இலக்கியச் சந்திப்பை நடாத்துவது இவர்களுக்கு அவசியமானால் அதை நடாத்துவதை விட்டுச் சாதிய அரசியலாக இதையொரு முரண்பாடாக்குவதன் தெரிவில் மீளவும், அனைவரையும் பிளந்து குருதி குடிக்கும் அந்நிய வியூகத்துள் இயங்கும் அரசியலுக்குச் சோபாசக்தி உயிர் கொடுப்பது கயமைத்தனம் என்று சொல்லேன்.ஏனெனில், அதன் பிதாமகனாக அங்கீக...

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும்.

"ஆண்டாள் மார்க் அளவு நாடா" வும் இலக்கியச் சந்திப்பும். 40 வது , இலக்கியச்சந்திப்பின் வரலாற்றைச் சொல்லும் சுசீந்திரன்,சந்துஷ்-சில கருத்துக்கள்! இதுவரையான இலக்கியச் சந்திப்புக்குறித்தும்,அதன் வரலாற்றுக் கட்டங்கள் குறித்தும் சந்துஷ்,சுசீந்திரன் இருவரும் தங்கள் அநுபவங்களைச் சொல்கின்றனர்.இலக்கியச் சந்திப்புக் குறித்துக் கருத்தாடுவதில் சந்துஷ்கும்,சுசீந்திரனுக்கும் காத்திரமான பாத்திரமுண்டு.இந்த 40 வது, இலக்கியச் சந்திப்பை நாமும் நேரடியாகப் பார்க்க வழி செய்த தலித்தியத்துக்கு நன்றி.இல்லையேல் இவர்களது கருத்தை நாம் கேட்கும் எந்தச் சந்தர்ப்பமும் கிட்டியிருக்காது! பொதுவாகக் கருத்தாடியவர்கள்-விவாதித்தவர்களென்போரைக் கடந்து, இவர்களை 1988 ஆம் ஆண்டு செம்படம்பரிலிருந்து தொடரும் இலக்கியச் சந்திப்பின் தொடரில் வைத்துக் காணமுற்பட்டபோது இந்தச் சந்திப்பு பெரிதாக எந்த உள்ளடக்க மாற்றத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவாக இவர்களே உரைக்கின்றனர். எனினும்,வரலாற்றின் நிகழ்வு சார்ந்த இலக்கியச்சந்திப்பின் பாத்திரத்துள் சந்துஷ் வகுத்துக்கொள்ளும் பிரிப்புகளும்,அதுசார்ந்து மாவோயிசம்,ரொக்சிசம்...

புலத்துத் தமிழர்களும் ஆதிக்கப் பரீட்சார்த்தமும்

வா னேவித் தாக்குதல்களின் [Drone attack ]சனநாயகக் கோரிக்கை என்ன?அரசியல் அறமெனக் கொள்ளும் மேற்குலகத்துக்கு யுத்த அளவு கோலாக  ஜப்பான் மீது போடப்பட்ட  Fat Man and Little Boy  சட்ட -நீதிசார்ந்த அறமாக இருக்கும்போது , நாகசாகி-கீரோசீமாக்கள்[ Nagasaki and Hiroshima  ] வெறும் தார்மீகத்துள்கூட ஒட்டவில்லையே! சமீபகாலமாக ,இந்த வானேவிகள்[Drone ]  இந்தியத் துணைக்கட்டத்துள்[Drone attack in Pakistan  ] போட்டுத் தொலைக்கும் மழலைகளது இருப்பை மறுப்பதென்பது பயங்கரவாதத்துக்கெதிரான யுத்த அளவுகோலக இருக்குமெனில் இலங்கையில் செத்த பிஞ்சுகளுக்கு இவர்களது அகராதியில் என்ன அர்த்தமுண்டு? அதிகாரம் மற்றும் ஆதிக்கம்  குறித்துண்மையில் அடிக்கடி மிக தெளிவாக நான்  உணருவதென்றாலும், சமூக உறவுகளில் இந்த அடிப்படை கூற்றுப்  பார்வையில் பல புள்ளிகள் அரசியல்-சமூகப் பிரதிநிதித்துவம் கொண்ட  சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான பிரச்சினை போன்றதே  அறிவியல் விவாதத்திலும் சமாந்தரமானதும்-விரிவானதுமான  விதிமுறைகளை வழங்க வேண்டுமென நினைக்கிறேன்.இன்றைய தமிழகத்து மாணவர்களது போராட்ட...

என்ன செய்யப் போகின்றோம்?

இலங்கையின் தலைவிதி! :என்ன செய்யப் போகின்றோம்? இ ன்றைய இலங்கையின் இனப்பகை அரசியல்-தமிழ்பேசும் மற்றும் சிறுபான்மையினங்களது அனைத்து முரண்பாடுகள்,அரசியல் அபிலாசைகள்அதன் வழியான ஒத்துழையாமை-மறுப்பு அரசியல்,இனவொடுக்குமுறை-பகையெல்லாம் திட்டமிட்டுக் கூர்மைப்படுத்தப்படுகிறது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தும் அரசியலாகப் புத்தபிக்குகள்,மற்றுஞ் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைத் தமிழ்நாட்டில் திட்டமிட்டு நடாத்தும் அரசியல், நிச்சியம் நமது மக்களது நலனின்பாற்பட்டதல்ல! இது,மீளவும் அந்நிய நலனுக்கானதென்றே கருத வேண்டியிருக்கிறது. சீன-இலங்கை அரச வியூகத்துள் இனங்களுக்கிடையிலான ஒரு மொன்னைத்தனமான  ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் முன்னிலைச் சோசலிசக்கட்சி,மற்றும் அதன் சமவுரிமை இயக்கம் முன்னெடுக்கும் அரசியல் மாறிவரும் பொருளாதாரச் சாய்வில் இலங்கைச் சீன வியூகத்துக்கு அவசியமானது.இதை உடைத்து மேற்குலக நலன்களை அறைவடை செய்யும் ஒரு காட்டுமிராண்டித்தனமான அரசியலை-அமெரிக்கச் சீ.ஐ.ஏ.க்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்கும் தமிழ்நாட்டுச் சீமான் வகைப்பட்ட அரசியலது நோக்கம் ம...