Skip to main content

இலங்கையில் இராஜபக்ஷ குடும்பத்தின் வீழ்ச்சி, சட்டவாத மக்களாட்சியின் வெற்றியாகவோ அல்லது, அதன் அடுத்த சோதனையாகவோ இருக்கலாம்.

 வாரீசுகளின் எழுச்சி : பிலிப்பீன்ஸ் , பிரேசில் அடுத்து இலங்கை  ? மகிந்தாவின் சகாப்தம் முடிவுறா நிலைக்கு மகன் நாமல் இராஜபக்ஷவால் உருவாகும் சந்தர்ப்பமும்—சிறு, கண்ணோட்டமும் !


—ப.வி.ஶ்ரீரங்கன்


இன்று , அரசியல் வாரீசுகளின் தீவிர எழுச்சி/வீழ்ச்சி  உலகம் முழுவதும் ஒரு தனித்துவமான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றன. ஒரு தலைவரின்/தலைவியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கும் தருணத்தில், அவர்களது வாரிசுக்கள் மீண்டும் அதிகாரக் கதவைத் தட்டுகின்றனர் . தென்னமெரிக்கக் கண்டத்தின் பிராதனப் பலம்வாய்ந்த நாடான பிரேசிலில் ஜாயிர் போல்சனாரோவின் மகன் பிளவியோ போல்சனாரோ தற்போது உருவாக்கியிருக்கும் அரசியல் எழுச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 


இந்த வெற்றி மகிந்தா குடும்பத்துக்கு இலங்கையில் நிச்சியம் ஓர் நப்பாசையை/ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது! 


இந்தப் பின்னணியில், இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் இராஜபக்ஷவுக்கும் இதே போன்றவொரு அரசியல் மறுவாழ்வு சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை நிச்தியமாக நாம் உரையாடவேண்டும் . அகில இலங்கை ஊழற் பேர்வழிகள் மீளவும் எழுச்சிகொண்டு அழகிய இலங்கையைச் சுரண்டுவதை என்னால் சீரணிக்கவே முடியவில்லை நண்பர்களே ! இலங்கை/பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளினதும் அரசியல் யதார்த்தங்களை ஒப்பிட்டுப் பார்த்தோமானால் , 


பிரேசிலில் போல்சனாரோ சகாப்தம் முடியவில்லை என்றே அங்கிருந்து கிடைக்கும் செய்திகளும் , ஜெர்மனிய இடதுசாரிய வட்டங்களது எழுத்தும் , ஆய்வும் மெளிவுப்படுத்துகின்றன . ஜெர்மனிய கோப்பிரேட் செய்தி ஊடகங்கள் போல்சனாரோ வாரீசின் எழுச்சியை உச்சத்தில் வைத்து கொண்டாடுகின்றன . படு கேவலமான யதார்த்தம் மீளவும் நம் உச்சியில் இடியாக இறங்குகிறது . 


முன்னாள் அதிபர் ஜாயிர் போல்சனாரோவின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவே நானுட்படப் பலரும் கருதினோம் . ஆனால், கடந்தகிழமை 2026 ஒக்டோபர் 4 அன்று நடந்த பிரேசில் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில், அவரது மூத்த மகன் பிளவியோ போல்சனாரோ 47.03% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 


இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிய ஒரு அதிர்ச்சியூட்டும் வெற்றி என்பதில் எதுவித ஐயமும் இல்லை . 


56.1 மில்லியன் வாக்குகளைப் பெற்ற அவன் தற்போதைய இடதுசாரி அதிபர் லுலா டா சில்வாவை (45.1%) பின்னுக்குத் தள்ளியுள்ளார். பெரும்பான்மை கிடைக்காததால் ஒக்டோபர் 25 அன்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.


யோசித்துப் பார்க்கிறேன் , கடந்த நான்காண்டுகளுக்குமுன் பிலிப்பீன்ஸின் மாபெரும் ஊழல் மன்னனும் சர்வாதிகாரியான முன்னாள் பெர்னாந்து மார்கோஸின் மகன் , 
பெர்னாந்து "போங்போங்" —மார்கோஸ் ஜூனியர் (Ferdinand "Bongbong" Marcos Jr.),2022 ‘ஆம் ஆண்டு மே 9 ‘ஆம் தேதி ,அன்று நடைபெற்ற பிரிப்பீன்ஸ் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றான். இந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவன் அதே ஆண்டு ஜூன் 30, 2022 அன்று பிலிப்பீன்ஸின் 17’வது அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். 


தற்போது , அதேகதை மீளவும் உலக அரங்கில் திரும்ப ஒலிக்கிறது ; வானெங்கும் நவ லிபரல் சாக்கடை ஊடகங்கள் துள்ளிக் குதிக்கின்றன ! ; தமிழ்நாட்டுத் திரைபட நடிகர் விஜேயின் கொண்டாட்டம் போன்று !போல்சனாரோ குடும்பத்தின் மறுவருகைக்குக் காரணந்தான் யாது ; மக்கள் மீளவும் , மீளவும் முதலைகளின் வாயில் தன்னியல்பாய் வீழ்வதன் மர்மாந்தாம் என்ன ? 


முதலாவதாக, நாடாளுமன்றத்தில் 'போல்சனாரிச' அலை வலுவடைந்துள்ளது. பிளவியோவின் லிபரல் கட்சி (PL) மக்களவையில் 99 இடங்களிலிருந்து 121 இடங்களாகவும், செனட் சபையில் 81 இடங்களில் 28 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் பிளவியோவின் தம்பி கார்லோஸ் மற்றும்,  மாற்றாந்தாய் மிஷேல் ஆகியோரும் செனட் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தெளிவாகிறது.


இரண்டாவதாக, தந்தையின் அரசியல் வாரிசாக பிளவியோ உருவெடுத்துள்ளார். 2022-23 ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் ஜாயிர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அரசியலில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டதால், பிளவியோ தனது தந்தையின் அரசியல் வாரிசாக மாறினார். தனது தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் பழிவாங்கும் கதையாடலை உருவாக்கி, தீவிர வலதுசாரி வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளார் , என்பது நாம் கற்க வேண்டிய பாடம் ! 


மூன்றாவதாக, அமெரிக்க தொனால்ட்டு துரும்பு நிர்வாகத்துடன் நெருக்கமான கூட்டணியைப் பிளவியோ கொண்டுள்ளார். “கொண்டுள்ளார் என்று எழுதும் மரியாதைக்கு அவன் உரியவனா ?” என்பது காலம்தாம்  பதில் சொல்லவேண்டும் . எனவே , நாம் , கொஞ்சம் கண்ணியமாக விளிப்போம்! பிரேசிலின் மிக முக்கிய கனிம வளங்களை அமெரிக்காவின் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்கள் மற்றும் , குற்றக் கும்பல்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் மூலம் சர்வதேச அளவில் தனது செல்வாக்கைப் பயல் புள்ள பலப்படுத்தியுள்ளார்.


நான்காவதாக, பொருளாதார நெருக்கடி, குற்றச் சம்பவங்கள் மற்றும் , மீளவும் , “பழைய குருடி கதைத் திற” என்ற சொல்வடைக்கிணங்க , ஊழல் புகார்களால் லுலா அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை பிளவியோ தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை, வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம், சிறைச்சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற தீவிர வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.


நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி, பிரேசிலின் அரசியலமைப்பை மாற்றி "நாட்டை மறு-ஜனநாயகப்படுத்துவோம்" (Redemocratize) என்று பிளவியோ போல்சனாரோ அறிவித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் அரசியலில் மீண்டும் , போல்சனாரோ குடும்பத்தின் சகாப்தம் மிக வலுவாகத் தொடங்கியுள்ளது. விட்டில் பூச்சியாய் பிரசிலின் உழைக்கும் வர்க்கம் இனவாத்தீயில் வீழ்கின்றனர் . 


இந்த பிரேசிலின் அரசியல் , மக்களின் சமூக எண்ண ஓட்டம் இலங்கையர்களுக்கும் ஓர் ஊக்க மாத்திரையாக எழுமா ? 


இலங்கையில் , இராஜபக்ஷ சகாப்தம் தொடர் வீழ்ச்சியாகுமா அல்லது , மீள் எழுச்சியாகுமா ?


பிரேசிலில் போல்சனாரோ குடும்பம் மீண்டும் அதிகாரத்தை நெருங்கி வரும் அதே வேளையில், இலங்கையில் இராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இளவரசன் நாமல் இராஜபக்ஷவுக்கு பிளவியோ போன்ற ஒரு எழுச்சி ஏற்படுமா என்றால் , நிச்சியம் தற்போதைய சூழலில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். காரணம் யாவரும் நாளாந்தம் அறிந்து வரும் ஊழல் குற்றவியல் செயல்களுக்குள் நாமல் வீழ்ந்துள்ளது .


இலங்கை-பிரேசில் ஆகிய இரு நாடுகளின் அரசியல் யதார்த்தங்கள் முற்றிலும் வேறானவை. பிரேசிலில் போல்சனாரோ குடும்பம் செல்வாக்குடன் இருப்பதற்கும், இலங்கையில் நாமல் இராஜபக்ஷ வீழ்ச்சியைச் சந்திப்பதற்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் பின்வருமாறு பார்க்கலாம்.


மக்களின் தற்போதைய ஆதரவு நிலையைப் பொறுத்தவரை, பிரேசிலில் பிளவியோ போல்சனாரோ அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 47% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்; அவரது கட்சி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ,இலங்கையில் இராஜபக்ஷாக்களின் SLPP கட்சி ஊழல் /அதிகாரத் துஷ்பிரயோகக் கட்சிவாத அராஜகத்தால் மிகக் கடுமையான மக்கள் அதிருப்தியைச் சந்தித்து, நாடாளுமன்றத்திலும் சமூகத்திலும் பலவீனமடைந்துள்ளது.


பொருளாதாரப் பொறுப்பைப் பொறுத்தவரை, பிரேசிலில் ஜாயிர் போல்சனாரோ நாட்டை முழுமையான திவாலா நிலைக்குக் கொண்டு செல்லவில்லை; மாறாக, தற்போதைய லுலா அரசின் மீதான அதிருப்தியே பிளவியோவுக்கு உதவுகிறது. ஆனால் , இலங்கையில் 2022’இல் ஏற்பட்ட நாட்டின் வரலாற்றுப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் , திவாலான நிலைக்கு இராஜபக்ஷ குடும்பத்தின் தவறான நிர்வாகமே நேரடிக் காரணம் என மக்கள் நம்புகின்றனர்.


சட்ட ரீதியான நெருக்கடிகளைப் பொறுத்தவரை, பிளவியோ போல்சனாரோ விசாரணைகளை எதிர்கொண்டாலும் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்து தேர்தலில் வென்றுள்ளார். இலங்கையில் ,அதிபர் அநுர குமார திஸாநாயக்கா அவர்களின் ஆட்சியின் கீழ் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளால் நாமல் இராஜபக்ஷ மற்றும் , அவரது தம்பி யோசிதா ஆகியோர் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று,  இவர்களது தாய் ஷிரந்தி இராஜபக்ஷவும் நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பமே கோவிந்தா !


சமூக/அரசியல் ; பொருளாதாரப் பிளவைப் பொறுத்தவரை, பிரேசிலில் தீவிர வலதுசாரி மற்றும்,  பழமைவாத வாக்காளர்கள் போல்சனாரோ குடும்பத்துக்குப் பின்னால் பின்னால் ஒருமுகப்பட்டு நிற்கிறார்கள். ஆனால் இலங்கையில் இராஜபக்ஷாக்களின் பாரம்பரிய சிங்கள/பௌத்த செளனிச வாக்கு வங்கி, தற்போதைய இடதுசாரி தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ,இதர எதிர்க்கட்சிகளால் முற்றிலுமாகச் சிதறடிக்கப்பட்டுள்ளது.


இறுதியாகச் சொன்னால் , பிரேசிலைப் போல இலங்கையில் உடனடியாக ஒரு 'இராஜபக்ஷ அலை' மீண்டு வருவதற்கான வாய்ப்பில்லை. 


நாமல் இராஜபக்ஷ நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்று, தற்போதைய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினாலும், மக்கள் மத்தியில் அவர்களுக்கான செல்வாக்கு மிகக் குறைவாகவே உள்ளது.


ஊழல் பின்னணி கொண்ட வாரிசுகளின் வெற்றியின் பொருள் என்வாக இருக்கும் ? 


உலகளவில் ஊழல் மற்றும் சர்வாதிகாரப் புகார்களுக்கு உள்ளான அரசியல் குடும்பங்களின் வாரிசுகள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவது, மக்களாட்சியின் சில முக்கிய சமூக-அரசியல் யதார்த்தங்களை உணர்த்துகிறது:


ஒன்று, தற்போதைய அரசின் மீதான அதிருப்தி (Anti-Incumbency). புதிய அரசு பதவியேற்ற பிறகு பொருளாதார நெருக்கடி அல்லது , குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, மக்கள் பழைய ஆட்சிக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகின்றனர். போல்சனாரோவுக்குக் கிடைத்த வாக்குகள் அவரின் மீதான ஆதரவை விட, தற்போதைய லுலா அரசுக்கு எதிரான அதிருப்தியின் வெளிப்பாடே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.லூலா , மீளவும் தவறுகளை விடும் அரசியல் நிலைக்கு உட்பட்டுள்ளார் . 


இரண்டு, தீவிர தேசியவாதம் மற்றும்,  துருவமயமாக்கல் (Polarization). வாரிசு அரசியல்வாதிகள் தங்களை "நாட்டின் பாரம்பரியக் காவலர்களாகவும்", தங்களுக்கு எதிரான ஊழல் புகார்களை "அரசியல் பழிவாங்கல்" (Political Witch-hunt) எனவும் சித்தரித்து உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரங்களைச் செய்கிறார்கள். இது தீவிர ஆதரவாளர்களைத் தக்கவைக்க உதவுகிறது.


மூன்று, கட்டமைக்கப்பட்ட வாக்கு வங்கிகள். பல தசாப்தங்களாகத் தங்களது குடும்ப அதிகாரத்தின் மூலம் அரசு இயந்திரத்திலும்,  உள்ளூர் அமைப்புகளிலும் அவர்கள் உருவாக்கியுள்ள ஆதரவு வலைப்பின்னல் மற்றும் ,பாரம்பரிய விசுவாசிகள் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.


நான்கு, அரசியல் மாற்று இல்லாமை. மாற்றுத் தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறும்போது( சஜித் போன்று , நம் முஸ்லீம்/தமிழ்த் தேசியச் சக்திகள் போன்று ) வாரிசு அரசியல்வாதிகள் தங்களை மட்டுமே "வலுவான -அனுபவமிக்க" ஒரே மாற்றாக முன்னிறுத்துகிறார்கள்.நாமலைக் கண்முன்னே நிறுத்துங்கள் புரியும் ! 


இலங்கைக்கான பாடம்


பிரேசில் மற்றும், இலங்கை ஆகிய இரு நாடுகளின் அரசியல் பாதைகள் ஒன்றையொன்று கடந்து செல்வதில்லை. பிரேசிலில் போல்சனாரோ குடும்பம் மீண்டும் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் , இலங்கையில் இராஜபக்ஷ குடும்பம் மக்கள் நம்பிக்கையை இழந்து, சட்ட ரீதியான நெருக்கடிகளைச் சந்தித்து, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


நாமல் இராஜபக்ஷவுக்கு பிளவியோ போல்சனாரோவின் பாதையைப் பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய சூழலில் மிகவும் குறைவு. ஏனெனில், பிரேசிலில் போல்சனாரோ குடும்பம் எதிர்கொண்ட நெருக்கடிகள் தந்தையின் தனிப்பட்ட சட்டப் பிரச்சினைகளால் ஏற்பட்டவை. ஆனால், இலங்கையில் இராஜபக்ஷ குடும்பம் எதிர்கொண்ட நெருக்கடிகள் முழு நாட்டையும் திவாலாக்கிய பொருளாதார மோசடி மற்றும் , மக்கள் விரோத ஆட்சியின் நேரடி விளைவுகள். இந்த வேறுபாடுதான் இலங்கையில் இராஜபக்ஷ குடும் வாரீசுகளின் மறுவருகைக்கான சாத்தியத்தை மிகவும் குறைத்து மதிப்பிட வைக்கிறது.


அரசியல் வாரீசுகளின் எழுச்சி/வீழ்ச்சி உலகம் முழுவதும் தொடர்கின்றன. ஆனால் ,அவற்றின் வெற்றியும் தோல்வியும் மக்களின் நினைவாற்றல், பொருளாதார யதார்த்தங்கள் கூடவே,  நிறுவனங்களின் வலிமையைப் பொறுத்தே அமைகின்றன. பிரேசிலில் போல்சனாரோ குடும்பத்தின் மறுவருகை, மக்களாட்சியின் சோதனையை எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இலங்கையில் இராஜபக்ஷ குடும்பத்தின் வீழ்ச்சி, சட்டவாத மக்களாட்சியின் வெற்றியாகவோ அல்லது,  அதன் அடுத்த சோதனையாகவோ இருக்கலாம். காலம்தான் பதில் சொல்லும்.இதைவிட , வேறென்ன உரைக்க முடியும் ? 


—ப.வி.ஶ்ரீரங்கன்


08.10.2026

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...