Skip to main content

Posts

"ஆண்கள் விற்பனைப்" பார்த்திபனும்,நூறு யூரோவும்...

"ஆண்கள் விற்பனைப்" பார்த்திபனும்,நூறு யூரோவும்,ஸ்ரீரங்கனும்-சில குறிப்புகள். த னிபட்டதும்,அஃது,சந்தர்ப்பத்தில் "பொது" வெளிப்பட்டதும்,அரசியல் வாழ்வில்-"நண்பர்களாக" ச் சில தன்முனைப்பு மனிதர்கள்-என்னைப்போலவேதாம்? இடது கரங்கொடுத்ததை வலது கரம் தெரியாதிருக்கும் "கர்ண" பரம்பரை- குபேரன்அல்லது வங்கிக் கொள்ளைப் பணத்தில் சொத்துச் சேர்த்து வைத்துப் புரட்சி பேசும்"தோழரும்" நானில்லை! நான் சாதாரணத் தொழிலாளி-சாமான்ய மனிதன். என்றபோதும்,எனக்கும் "தமிழ் பேசும்" மனிதர்களைக் குறித்து ரொம்ப நல்ல அநுபவ வாழ்வைக் காலம் கனிய வைத்திருக்கிறது. அதற்குத் "தமிழீழப் போராட்டம்" இன்றைய புலிகளது வாழ்வியல் நிலவரம்,மக்களது நிலைமையென ஓராயிரம் பக்க விளைவுகள் புரியுவும்-தெரியவும்.இந்தக் காலம் உதவித்தாம் இருக்கிறதென்று சொல்வதை விட வரலாறு இப்படியெல்லாம் நம் முன் உண்மைகளோடு உறவாடுகிறதென்றுரைப்பதே சரி!. இந்தத் தமிழ்ச் சமூகத்துள்தாம் நானும்,பார்த்திபனும் வாழ்கிறோம்! சமீபத்தில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அக்குறிப்பின் ஆரம்பம்"நான் ரொம...

புலத்து இயக்க அராஜக வாதிகளது...

புலத்து " இயக்க" அராஜக வாதிகளது  உளவியல் சார்ந்த அரசியலும், இலங்கைப் புரட்சியும்(?!) எ திரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணிப்பதற்கான இன்னொரு வடிவமாக இந்தப் புரட்சி-போராட்டம்,புதிய-பழைய ஜனநாயக முன்னணி என்றெல்லாம் திடீர்க் கட்சிகள் கூட்டுகளெல்லாம் புலம்பெயர் தளத்தில் கட்டிப் பத்திரிகை வெளியீடு,புத்தகவெளியீடு செய்து புரட்டு விடுவதில்"தடைகளைத்தாண்டிப் பத்திரிகைகள்" இலங்கையிலிருந்து வருகிறதாம்! கடந்த கார்த்திகை 2012 இல் "மாவீரர்" தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து மாணவர்களைத் தமது அந்நிய எஜமானர்களது வலையில் வீழ்த்தி அப்பாவி மாணவர்களைக் கலகஞ் செய்யத் தூண்டிவித்தவர்கள் , அந்தக் கலகத்தை மாணவர் எழுச்சி,மக்கள் எழுச்சியெனக் குரல்கொடுத்து இலங்கையிலொரு சதி அரசியலைக் கட்டவிழ்த்த இந்தக்கூட்டம் அம்பலப்பட்டுப் போனபின் இப்போது அந்தச் சதியின் பலாபலன்களை போலிக்கு மறுத்து ப் "பல்கலைக் கழகங்கள் இராணுவ மயமாகிறதென்று " ஓலமிடுகின்றன. இரணுவவாதத்தைத் தொடர்ந்திருத்தத் தமது எஜமானர்களது கட்டளைக்கிணங்கக் காற்றியமாற்றிய இவர்கள்,தம்மைத் தர...

இரயாகரன் குழுவைப் புரிந்துகொள்ளல்

இந்த இரயாகரனிடமுள்ள கற்றன் நசனல் வங்ககிக்கொள்ளைப் பணமானது எப்படியெல்லாம் பொய்யுரைத்துக் காக்கப்படுகிறதென்பது மேலுள்ள "பகிரங்கமடல்" மற்றும் அவர்களது போர்ட்மெம்பர் "நாதன்-வேலன்-சிலோன்-இல்லைகை"என்ற அவர்களாலேயே புரியப்படவேண்டும். //சிறிரங்கனுக்கு பகிரங்க மடல்... ............................. Sri Rangan Vijayaratnam க்கு 'கற்றன் நசனல் வங்கிக் கொள்ளை! மட்டுப்படுத்தப்பட்ட விபரம்... * இந்த வங்கி 'மனேசர்' சுட்டுக் கொல்லப்பட்டார்... ** இதன் சொத்துக்கள் புலிகளால் அபகரிக்கப்பட்ருந்தது... *** இராயாகரானால் பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் முதுகெலும்பில்லாதவர்காளால் தாரைவார்க்கப்பட்டது... *** ஐயரிடம் ஒப்படைக்பப்பட்ட சொத்துக்களின் விபரத்தை... 'இனியொரு' , 'சிறீரங்கன்' போன்றவர்களால், ஏதோ 'பில்டா விடுபவர்கள்' சரியாக, அல்லது மாதிரியாகத்தன்னும் வெளியில் (முகப்புத்தகத்தில்) வைக்க முடியுமா???-குமார் Ceylon Illaikai : ஐயரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அது தமிழீழக்கட்சியிடம் கொடுக்கப்பட்டது. இப்போ வசதிக்காக அனேக முற்...

மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா?

சிங்கள இராணுவக் குடிப் பரம்பல் கண்டு, மனோ கணேசன் வருந்துகிறார்-நியாயமானதுதாமா? " மனிதர்கள் உன்னதமாகவிருக்கவேண்டும் கருணை நிறைந்ததும் மற்றும் சிறப்புமாகும் இது. இந்தவொன்றே அவர்களை மற்றெல்லா உயிரினத்திடமுமிருந்து வேறுபடுத்திக் காட்டும் ." -Goethe [„Edel sei der Mensch, hilfreich und gut! Denn das allein unterscheidet ihn von allen Wesen, die wir kennen.“- Goethe] இங்கு திரு.மனோ கணேசன் அவர்கள் தொட்டிருக்கும்-சுட்டும் பிரச்சனைகள் கடந்த 20 வருடங்கட்கு முன்னமேவுணரப்பட்டது!புலிவழிப் போராட்டமென்பது புதிய இராணுவக் குடியேற்றங்களைச் செய்யுமென்பதை யாழ்"இடப் பெயர்வோடு"அதிகமாகவழுத்திச் சொன்னோம்.50 ஆயிரம் சிங்கள இராணுவத்தினர்  காலவோட்டத்தில்50 ஆயிரம் குடும்பங்களை அமைப்பதும்,அதன் வழி இராணுவக் குடியிருப்புகள் குடும்பங்களாகிக் குடிசார் இணக்கத்துள் வரும்போது அவை ஒரு இனத்தினால் விடப்பட்டு,பாழாய்ப்போன வாழ்விடங்களுக்குள் உள்வாங்கப்படும்.அப்போது,சிங்களமயப்படுத்தலது விருட்ஷம் நமது முகத்தில் ஓங்கியறையும் என்றாகச் சொல்லியே "தமிழீழப்போராட்டம்"வழி தந்துரோபாய இடப்பெய...

Eastern provincial election soon:

PROVINCIAL COUNCIL ELECTIONS – EASTERN PROVINCE 9th September  2012 By P.V. Sri Rangan Why did I turn to the issue of politics? I used to think just like many other citizens that politics is a boring business, and anyway I can not influence. But then I got information that made me aware and I began to self-investigate. What I found out it is scandalous. Anyway, the more I am venturing into this field, the more exciting it became. The tamils_politics is a dirty business, where lies and corruption are commonplace, that actually know most people in Sri Lanka. Therefore it is all the more shocking that there are still so many people participating in this game wrong by supporting the system. You have certainly experienced many times that grandiose announcements were made in anticipation of elections, from which the corresponding politicians after the elections, as then strangely not want to know much. And yet there are still many citizens go to the polls, in the hope that the...

ஒன்றுபடும் இந்திய நலன்சார் அரசியல் தரகர்கள்:

இந்த நூற்றாண்டானது தமிழ்பேசும் மக்களது உரிமைகளைப் பகிரங்கமாகவே காட்டிக்கொடுக்கும் நூற்றாண்டாகும்.இதுவரை ஆயுதப் போராட்டத்தின்வழி தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்த இந்தியா,இப்போது நேரடியாகவே தனது அநுதாபிகளைக் களத்தில் இறக்கி இந்திய அரசியல் நலன்களைத் தமிழ்பேசுபவர்களது நலனாகக் காட்டுகிறது. புலிகளுக்குள் இருந்த இந்தியக் கருத்தியலாளர்களும்-அநுதாபிகளும்,முகவர்களும் பகிரங்கமாகவே இந்தியப் பிராந்திய வியூகத்தின் நிகழ்ச்சி நிரலைப் பேசுகிறார்கள்.அவர்களில் கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்றோர் மிக ஆபத்தாகவே தமிழ்பேசும் மக்களது நலனைப் பற்றிய உரையாடல்வழி இந்திய அரசியலை தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கின்றனர். இவர்களும்,இந்தியக் கைபாவைகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்.வரதராஜப் பெருமாள்,புஷ்பராஜா குடும்பத்தவரோடு கை கோர்ப்பதில் புதிய வகை மாதிரியான அரசியலைப் பேசுகிறார்கள். கடந்த காலத்தில் எதிரும் புதிருமாகக் காட்டிக்கொண்டவர்கள் இவர்கள்.ஆனால்,இந்திய சாணாக்கியமானதுகடந்தகாலத்துள் தனது முகவர்களை எங்ஙனம் அனைத்து அமைப்புக்குள்ளும் பிரித்துப் பிரித்து உள் தள்ளியிருப்பதென்பதற்கு இவர்களே சாட்சி. இவர்கள், அனைவருமே ...

உரையாடல்களுக்கிடையிலான பொது உரையாடல் வெளியினைத் திறப்பதே எமது நோக்கமாகும்

"புதிய இணைய மாத சஞ்சிகைக்கு எழுதுமாறு உங்கள் அனைவரையும் கேட்கிறோம்! ஆரோக்கியமான கருத்துபரிமாற்றத்திற்கும் கருத்தியல் வாதம்,உரையாடல் வெளிக்குமான புதிய கதவினை திறப்போம்! " -by Mahroof Fauzer பௌ சர், உங்களிடம் சில விளக்கங்களைக் கேட்பது அவசியமெனக் கருதுகிறேன். 1: "தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்" என்கிறீர்கள்.இந்தச் செயற்பாடுகள் எதை நோக்கியது?ஏனெனில்,இன்று மொழி,மதம்,பண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகள்-பௌதிக இருத்தலை மறுக்கும் ஒடுக்குமுறைகள்அனைத்தையுஞ் செய்தபடி அதற்கும் மேலாக மனிதர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்படுபவர்களாகவும்,ஒடுக்குபவர்களாகவுமிருக்கிறார்கள்.இதுள் நீங்கள் எந்த வகைமாதிரியை உணர்கிறீர்கள்? 2: செயற்பாட்டகம் என்பதன் பொதுப்படையான புரிதலென்ன?செயற்பாடு வினையுறும் திசைவழியின் செல் நெறி என்ன-எதைச் சார்ந்து செயற்பாடு விரிகிறது? 3:"தமிழ் மொழிச் சமூகங்கள்" என்பதன் விளக்கமென்ன?சமூகம் என்றால் என்ன-சமுதாயம் என்றால் என்ன?இதுள் மொழிகள்-மதங்கள்,பண்பாடு,பால் வேறுபாடுகள் கடந்து இயங்க முனையும் மனிதர்களின் இடம் என்ன? 4:"ஜனநாயக அடிப்படை"என்கிறீர்கள் நீங்கள...

பொய்யுரைப்பதே புலிகள் என்றாச்சு!

மு ள்ளி வாய்க்கால் நாடகத்துக்குப் பின்னும்,நாம் தமிழ்த் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம். முள்ளி வாய்க்காலில் சரணடைந்து மாண்டுபோன பாசிசப்புலிகளது தலைமையின் தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம்,புலிகளால் இரண்டு இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இன்று,வன்னிக்குள் தினமும் பட்டுணியால் செத்து மடிபவர்களுக்கு புலிகளது சரணடைவுச் சாவுத் துரோகக் கைக்கூலிப்படை போராட்ட வரலாறு என்ன தீர்வைக் கொடுத்துள்ளது?மக்களது தியாகத்தை இலங்கைப் பாசிச அரசுக்கேற்பத் தகவமைத்து, இலங்கை ஆளும் வர்க்கத்தின் காலில் போட்டுவிட்டு, ஒரு தலைமுறையைச் சீரழித்துச் சென்றுள்ளது தமிழ்ப் பாசிச அரசியல் வரலாறு! மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுத்தி அழிவு யுத்தத்தில் பலிகொடுத்த புலி-இலங்கை அரச பயங்கர வாதத்துக்கும் என்ன வேறுபாட்டைக்...

ஐ.நா. முன்றலில் நாளை கூடும் மக்களைப்பாத்து...

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில்... மு ள்ளிவாய்க்காலுக்குப் பின்னும்,எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.நாம் ஏதோவொரு சதி அரசியலைப் புரட்சி சொல்லி நகர்த்துகிறோம்.குழுவாதிகளாகவும் சீரழிந்து மொக்குத்தனமாக ஒவ்வொரு முகாமுக்குள் நின்று, இருப்புக்கான அரசியலைச் செய்கின்றோம்.இந்த நாம்தாம் புலம்பெயர் தளத்தில் மீளவும் காய்நகர்த்தும் புலிப்பினாமிகள்-வியாபாரிகள் கோரிக்கையின்வழியிலான ஐ.நா. முன்றலில் நாளை கூடும் மக்களைப்பாத்து அறைகூவல் இடுகிறோம்! மீளவும் பிழைப்புவாத புலிவழி வியாபாரிகளால்,சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது. கடந்த காலத்தில் புலிகளது வளர்ச்சியும்,அழிவும் அவர்களைமட்டும் பாதிக்கவில்லை! புலிகளாலும்-சிங்கள அரசாலும் செத்தவர்கள்-அழிக்கப்பட்டவர்கள் இலங்கையின் அனைத்துப்பகுதி மக்களுமே.இனவாத அரசியலது பங்கு இஃதென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.எதிரெதிர் இனக்குரோத அரசிலானது இலங்கையின் அனை...

15 வயதுப் பாலகனது தற்கொலை!

தற்கொலை! இ துகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது. 15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது. எனது தலை குனிகிறது! இன்றைய குழந்தைகளது தேவையைப் புரியமுடியவில்லை! அவர்களது உலகத்தைத் தரிசிக்கத் தெரியவில்லை.அவர்கள் முற்றிலுமே வேறானவர்களென்பதை அங்கீகரிக்கவும் முடியவில்லை! குழந்தைகளை நமது சொத்தாக,எமது பிற்காலத்து முதுமைக்கு ஒரு ஊன்றுகோலாகவே நாம் கண்டு வந்திருக்கின்றோம்.இதை எமது பெற்றோர்களிடமிருந்து நான் கற்றுவந்தேன்.எனது குழந்தைகள் என்னிடமிருந்து இதைக் கற்கக் கூடிய ...

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்(2)

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்(2) சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல். (அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!) (2) பொனபாட்டிசம் தமிழ்ச் சூழலில் மிக அவசியமான ஆய்வுத் தன்மையுடன் கூடிய கட்டுரைகள் வரவேண்டுமென எனக்குள் எண்ணுவதுண்டு.இந்த வகைப்பட்ட கட்டுரைகள் அதிகமாக வருவதற்கான ஆய்வுத்தகமை சமகால நிகழ்வோட்டத்துடன்,அதுசார்ந்த மிகுந்த புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இந் நிலையுள்,சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது! அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர்வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?அல்லது,மிகேல் பூவ்காவினது பரந்துபட்ட புரிதலுள் புலிகளது இயக்கவாத-அந்நிய அடியாட்படைச் சேவையை ஒடுக்கப்படும் இனத்தின் எதிர்ப்புப் போராட்டமாகவும்-அதுசார்ந்தெழுகிற அதிகாரமாகவும் பார்க்க முடியுமா? எவன்(ள்),எந்தெந்தத் திசையில் ...

அதிகாரம்: ...பூப்காவின் பாத்திரம்

முள்ளிவாய்க்காலும்,தமிழ் மேட்டுக்குடிகளது தேசியவிடுதலைக் கோரமுகமும்! சிங்களத் தேசிய வாதத்தை-ஒடுக்குமுறையை முள்ளிவாய்க்காலுக்குப்பின் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறித்த உரையாடல். (அதிகாரம் குறித்த மரபுசார்,நவீனப் புரிதல்களில் பூப்காவின் பாத்திரமும்,மானுடவிடுதலையும்-சில குறிப்புகள்!) (1) இ லங்கைச் சிறுபான்மை இனங்கள் ஒரு சிக்கலான காலக்கட்டத்துக்குள் புதிய ஆண்டில் நுழையப்போகிறார்கள்.இலங்கை அரச ஆதிக்கத்தின்-அதிகாரத்தின் பதில் விளைவுகளாகப் பின்னப்பட்ட புலியழிப்புப் போராட்டத்துக்குப் பின் இலங்கையின் பொது அரசியற் சூழலானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மாற்றுக் கருத்தியல்-வெகுஜனக் கணிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது.இலங்கை அரச ஆதிக்கத்தைப் புரிந்துகொள்வதென்பதும்,அரச வன் முறை-வன்முறைசார ஜந்திரங்களின்வழி பின்னப்பட்டிருக்கும் அதிகாரமென்பது பெரும் பான்மை மக்களையும்,அவர்களது சுதந்திரத்தையும் "விடுதலை-சுதந்திரம்-இறைமை-தாயகம்" எனும் மந்திரச் சொற்களால் எங்ஙனம் பறித்துவிட்டிருக்கின்றவென்பதும் பெரும் வியப்படையத் தக்க குறிப்புகளாகும்.இதுள் தமிழீழ விடுதலைக்காகப் போராடியதாகச் சொல்லப்பட்ட புலிகள...