Skip to main content

Posts

சரி,அப்ப ஐ.பீ.சீ வானொலி கேட்போம்

தமிழ். "தமிழினி மெல்லச் சாகும்"என்றொரு கட்டுரையைத் தொண்ணூறின் ஆரம்பத்தில் அறிஞர் கோப்பாய் சிவம் எழுதினார்.அப்போது இலங்கைச் சூழலில் இது சாத்தியமில்லை என்றே நான் எண்ணியிருந்தேன்.நாமெங்கே ஆங்கிலக் கலப்போடு தமிழ் பேசுகிறோம்!முன்னம் கலந்த வடமொழியோடு தமிழைத் தமிழாகப் பேசுபவர்கள் நாம்.நமக்கு அந்தப் பிரச்சனை எழ முடியாதென்றும்,திரு.கோப்பாய் சிவம் அவர்கள் வரும் முன் காப்புக்காக அப்படிப் பாரதியின் வாக்கியத்தைச் சுட்டுவதாகவே கருதினேன்.இது தவறென்றாகுமா?எனக்குள் குடையும் ஒரு பெரிய கேள்வி இது. இயலாமையைச் சொல்லுதல்... நேற்றுத் தமிழ் வானொலி கேட்போமே-நல்ல பாடல்களைக் கேட்டு இரசிப்போமேயென்று வானொலி கேட்பதற்காக உட்கார்ந்தேன். சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும் சூரியன் பண்பலை(அவர்கள் மொழியில்:சூரியன் எப்.எம்.) வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.இதை ஒரு பத்து நிமிடம்கூடக் கேட்க முடியாதவொரு அவஸ்த்தைக்குள் நான்.என்ன நம் தமிழ்நாடு! அந்த வானொலியில் பாடல்களைத் தொகுத்து வழங்கும் பெண்ணின் தாய் அல்லது தந்தையார் ஆங்கிலேயரோ என்னவோ,அப் பெண்மணிக்குத் தமிழ் வரவில்லை.ஆங்கிலத்தில் தொகுத்துத் தமிழ்ப் பாடல்களை வழங்குகி...

இறுதிக் காவலர்.

உ னது தூக்கம் எவ்வளவு கருமையானது கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும் பாரத்தைப் போலவே, நீ அவர்களை விட எங்கோ தூரத்தில் என் குரலை நீ கேட்கமாட்டாய்? புள்ளியான வெளிச்சத்தின் கீழே நீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய், உனது சொண்டுகள் விகராமாக நித்தியத்தின் நெடுந்தொலைவை முத்தமிட... நாளை என்பது இங்கே மௌனமாகலாம் கூடவே காற்றுந்தாம், எனினும் மனித நாற்றமும் இயற்கையின் கோரமும் அடங்கப் போவதில்லை. இரவென்பது வெறுமையாகிறது விடியலைத் தொலைத்து, வருசா வருசம்! இது முன்னரங்கக் காவல் அரண், நீ முழுமையாகக் கனவுகாணத் தவறிய பொழுதொன்றில் உனது மூச்சு மிக அமைதியாக மெலிய சத்தமாய் அமிழ்ந்து போகும். தெருவோரத்துக் குடிசைகளின் மெல்லிய சல சலப்பில் உனது பெயரும் அறுந்துதிரும் நீ அவர்களுக்கு நெருக்கமானவ(ள்)ன். காலத்தைக் கொடிய ஜந்திரமொன்று துண்டு துண்டாய்க் கத்தரித்தது, நெடுக்கும் குறுக்குமான அளவுகள் சொல்லி வைத்தபடி 90, 180, 360 பாகைகளில், அது எப்போதாவது தேசங்களாக இருக்கும்போது. இந்த நோக்கத்துள் தூக்கம் தொலைத்த உனது முகமும் அழகிய சிறு விழிகளும் ஜொலிக்கின்றன! இப்போது உனது தோலின் குளிர்ச்சியுள் பெருமித எச்சமொன்று அம்மாவாய் முலையுத...

சிறு உரையாடல்

குழந்தைகளின் உலகம் மிகப் பெரியது.அந்தவுலகத்தை நாம் அநுபவித்து வளர்ந்தபின் மறந்து விடுகிறோம்.அற்புதமான அந்த உலகத்தை அப்பா,அம்மா என்ற உரிமையில் தகர்த்தும் விடுகிறோம்.குழந்தைகளை நமக்குச் சமமான மனிதர்களாக நம்மால் புரிந்து கொள்ளப்படுவது மிகக் குறைவாகும்.இந்தப் பருவத்தில் எத்தனை வண்ணமயமான எண்ணங்கள் ப+த்துக் குலுங்கும்! காகத்தையும்,குயிலையும் கண்டு பாட்டுக்கற்கும் குழந்தை,மலர்களையும் பச்சைப் புற்களையும் கண்டு துள்ளிக் குதிக்கும் மழலை.நம்மை அண்டி நமக்குள் வாழும் அது நம்முடமையல்ல.அதுகள் முற்றிலும் வேறானவர்கள்.அவர்களை உரித்துக் கொண்டாடி, உருமாற்றாமல் நம்மில் எத்தனை பெற்றோர்கள் அவர்களைச் சிறப்புற நடாத்துகிறோம்? படி,படி என்ற ஒரே கழுத்தறுப்பில், அவர்கள் தமது குழந்தைத் தனத்தையே இழந்து வருகிறார்கள். இந்தவுலகத்தின் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கின் தேவைக்கேற்பக் குழந்தைகளை இப்போதே வாட்டியெடுக்கும் கல்விக் கூடங்கள்,அந்தக் குழந்தைகளின் பிஞ்சுக் கனவுகளை அழித்தே விடுகின்றன. அந்தக் குஞ்சுகளின் அற்புதமான உணர்வுகளை இந்த ஆக்கம் பேசுகிறது.தந்தையும் மகளும் சக தோழர்களாக உரையாடுவது நம் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமானது. ...

வென்றது அவர்கள்தானே?

வென்றது அவர்கள்தானே? " ரோம் எரியும்போது நேரோ(Nero)மன்னன் பிடில் வாசித்தானாம்"என்று மனிதவுணர்வின் வக்கிரத்தைக் குறித்துச் சொல்வதற்குத் தமிழ்ச் சூழலில் சொல்வார்கள்!அப்போதெல்லாம் அவன் ஏன்-எதற்காக மகிழ்ந்து, இசைத்தான் என்பதற்கான காரணம் அறிய விருப்பு இருக்கவில்லை.அதையும் நமது தமிழ்ச் சூழல் சொல்லவுமில்லை. இப்போது நேரோ மன்னன் மகிழும் அந்தத் தரணம் இலங்கையில் உருவாகி வருகிறது. ரோமானியச் சாம்ராஜ்சியத்தில் ஏற்பட்ட தேக்கம்,பொருள் வளர்ச்சிக்குரிய சூழல் ஸ்த்தம்பித்திருந்தபோது, கட்டுமானத் துறையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி நேரோ மன்னனுக்குத் தலை வலியாகியது.அவனது பரிவாரங்கள்,பல் துறை விற்பனர்கள்,பொருளாதார மேதைகள் அவனுக்கு அறிவுறுத்தியது "அந்த நேரத்தில் தப்பிப் பிழைக்க முயிற்சித்த" கட்டுமானத்துறையின் நலனுக்கானதாக இருந்தது. ரோமை எரி. எரிப்பதன் பலனாகக் கட்டமானத் துறை மீளவும் வீரியத்துடன் வெற்றியீட்டிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறும் என்றார்கள். நெருப்பிட்டான் நேரோ. எரிந்தது ரோமபுரி. பிடிலெடுத்து வாசித்தான் நேரோ,மகிழ்ந்தான்:கூத்தாடினான். சிறப்பாக ஆதாயமடைந்தார்கள் கட்டுமானத்துறை முதலா...

மலையகப் பரிசுக் கதைகள்

மலையகப் பரிசுக் கதைகள். "மலையகச் சிறுகதைத் தொகுப்புள்"வாழ்வு"-ஒரு தேடல்" மலையகச் சிறுகதைத் தொகுப்பை விரித்து அணிந்துரைகளைக் கண்ணுற்றவேளை, திரு.தெளிவத்தை ஜோசெப்பின் விளக்கங்களோடு,திரு.விக்கிரமசிங்காவின் கூற்றுக்களையும் துணைக்கழைத்து- "மலையக வாழ்வுக்குள் என்னைத் தொலைக்கிறேன்". முதலில் "விரக்தி" சிறுகதையை என் வசமாக்கிறேன்...சமீபகாலமாகப் புலம் பெயர்ந்து வாழும் எனக்குள் வெறுமையும்,வெறுப்பும்,விரக்தியும் நெஞ்சுள் நிறைந்து உணர்வுகளைக் கேலிக்குள்ளாக்க நான் விரக்தி சிறுகதையை என்னுள் செலுத்தினேன். ஒரு தடவை... இரு தடவைகள்... மூன்று...நான்கு... தடவைகள் பலவாகின.எனினும் அடுத்த சிறுகதைகளுக்குள் கவனதைச் செலுத்த முடியவில்லை.விரக்திக்குள்ளேயே வாழ முற்படுவது மிக இயல்பாகிறது! முயன்று,முயன்று தோற்றேன்! விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்... "தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?" தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள், பிறந்து வளர்ந்த மண்:தாய்! இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மற...

மக்கள் விழிக்கின்றார்கள்?

மக்கள் விழிக்கின்றார்கள்? மக்களின் அதீத மானுடத் தேவையான உணவு,உடை,உறையுள் யாவும் இலங்கையின் யுத்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கைக்கெட்டாத கனியாக்கப்பட்டுள்ளது.இதனால் யுத்தத்துக்குள் வாழும் தமிழ் பேசும் மக்களின் அதீத மனிதாயத் தேவையாக இருப்பது அவர்களது உயிர்வாழும் வாழ்வாதாரங்களே. இங்கே அந்த ஆதாரங்களை யுத்த அரசியலூடாகத் தட்டிப் பறிக்கும் இலங்கைச் சிங்கள மற்றும் தமிழ்ப் புலிகளின் யுத்த ஜந்திரங்கள் மக்களின் விடிவுக்காகப் போரிடுவதாகக் கூறிக்கொண்டே அவர்களை பொருளாதாரத் தடையால் போராட்ட வலுவற்றவர்களாக்கித் தத்தமது இருப்புக்கேற்ற அடிமைக் கூட்டமாகவும்,தமது எஜமானர்களின் தேங்கிய சந்தைகளை மீளவும் உயிர் பெற வைப்பதற்காவும் தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள் இருத்திவைக்கின்றார்கள்.இதிலிருந்து மீளமுடியாதபடி இனவாத அரசியல் முன்னெடுப்பை இலங்கையூடாகவும் அதை எதிர்ப்பதற்கானவொரு அரசியலையும், போராட்டத்தையும் மட்டுப்படுத்திப் புலிகளிடம் வழங்கியுள்ளது,அந்நியச் சக்திகள். இதை நோர்வே ஊடாகச் சிறுப்புறச் செய்து முடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையில் மக்களை இருவேறு முனைகளாகத் தாக்குகிறது. ஒன்று பொருள...

புலனாகும் பிரபஞ்சம்

புலனாகும் பிரபஞ்சம் புனைவும் பிராண்டலும்... பெருவெடியின் முன்கதை : இரண்டாம் உலக யுத்தத்திற்குப்பின் இன்னொரு யுத்தத் தாண்டவம் வரமுடியாது,அதுவும் மகாயுத்தமாக உலகு தழுவி வரமுடியாது என்பதில் என் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. இருக்காதா பின்ன? செல்களும்,குண்டுகளும்,தோட்டாக்களும் பொலு பொலுவென்று உடம்பெல்லாம் பட்டுத் தெறித்து, உயிர் குடிக்கும்போதும்,அந்த இயக்கம் துரோகிகள்-இந்த இயக்கம் துரோகிகள் என்று எல்லாத் தமிழ்ப் பாலகர்களுக்கும் சாவோலையெழுதித் "தமிழ் வீரர்கள்" மண்ணெண்ணையும்,இரயரும் கொண்டலைந்தபோது"ஐயோ கடவுளே வரந்தரமாட்டீயா உயிர் தப்ப?" என்று பெருமூச்சு விட்டெல்லே அகதியாக ஜேர்மனிக்குள் கால் பதித்தது!(இப்படித்தாம் யாழ்ப்பாணப் பிரபஞ்சப் பந்து இறுகி-அமுங்கி"Big Bang"கண்டது.) இந்த யுத்த சாட்சியங்களிலும்,ஈழவிடுதலைப் போராட்டத்திலும் கொலைக்களத்தைத் தவிர எந்தச் சாரமும் இல்லாது போனதாக நான் உணர்ந்தபோது-அட கடவுளே! என்னால் ரொம்பக் காலத்துக்கு உயிர் வாழமுடியாது என்பதில் ஒருவிதக் கோபமும் இருந்து கொண்டே வந்தது. (1) அம்மாவுக்கு இருத்திவைச்சுச் சோறு போடவேணுமெண்டு அடிக்கடி யோசிப்பத...

என்ன சொல்கிறீர் கொழுவி?

கொழுவி,என்னைப்பற்றிய உங்கள் கோஷ்டிகளின் எந்தப் பதிவுக்கும் நான் பதிலளிப்பதில்லை என்ற முடிவோடிருக்கிறேன். எனினும், உம்மைப் பேடியென்றெழுதியது பற்றியும்,நீர் என்னைக் குறித்து- புலிகளின் கள நிலைவரம் பற்றிய பார்வையையும் வைத்தெழுதியது பற்றி, நான் சில வற்றைச் சொல்வது அவசியம். முதலில் பேடியென்று உம்மை கடிந்தது ஏன்? நீர் சுட்டியது போன்ற என்னைக் குறித்த உமது எதிர் எழுத்துக்கல்ல! அதை நான் உண்மையில் எதிர்க்கவில்லை. அதில் நீர் குறித்த எதையும் தவறாக எடுக்கவில்லை.நீர் போடும் பதிவுகளை முதலில் வாசித்து உமது சகோதரத்துவக் கண்ணோட்டத்தை விரும்புவது வழமை. ஆனால் உம்மைக் கடிந்தது எதனால்? நீரே கிண்டலாக எழுதிய பின்னூட்டுக்காகவே! //At Sun Dec 24, 11:33:00 AM 2006 , கொழுவி said... ஏற்கனவே புலிகளின் பாசிசத்துக்கு Google துணை போகுது எண்டு பெடியன்கள் எழுதியிருந்தவங்கள். ஒரு வேளை புலிகள் தான் Google காரரிடம் சொல்லி உங்கடை பதிவோடை விளையாடுறாங்களோ தெரியாது.. வடிவா விசாரிக்கவும்.// கூகிள் கணக்கிற்கு நான் மாறிய பின்,பதிவினில் பல தவறுகள் நேர்ந்தன. அது குறித்தெழுதியதைப் பெடியன்களின் பதிவினில் வந்த நையாண்டியைக் காரணம் காட்...

வருமாண்டைக் குறித்து...

வருமாண்டைக் குறித்து... அன்பு வாசகர்களே, அருமை நண்பர்களே-தோழர்களே! இன்றும் தொலையும் 2006, இனியும் வரக் காத்திருக்கும் ஒரு புது வருடத்தில் புலம்புவதற்குப் பல இருக்கின்றன. பசியும் பட்டுணியும் பாருக்குள் கொலையும்,அநீதியும் பண்டத்தைக் குறித்தே... இவை அநுதினம் மலிய அன்பாய்-ஆதரிப்பாய் எப்படி அளவளாவ? இருந்தும், ஒரு செக்ற்(உவையின்) போத்தலைத் தனிமையில் திறந்தபோது "நான் சமைக்க இருக்கிறன் நீ குடி"என என் தோழி-துணைவி புலம்ப புது வருடம் வரப்போகுது. வெடிகள் கொஞ்சம் வேண்டினேன் என் மழலைகள் மகிழ்வதற்கென! எல்லாம் சேர்த்து, பதினைந்து பொருள்களென என் சின்னவன் கல்குளேற்றரில் பார்த்துச் சொன்னான். அவர்கள் வெடிப்பதற்குத் தயாராக... நான் இரவு பன்னிரெண்டுவரையும் பொறுக்கச் சொன்னேன். இதுதாம் நமது மகிழ்வு,அழுகை,வருத்தம்,தைப் பொங்கல், எல்லாம்! உங்களோடு உறவாடும் ஒரு பொழுதைத் தவிர எனக்கென்று எந்த விருப்புமில்லை! இந்தவுலகத்தில் மானுடம் அமைதி,சாந்தம் இன்பம், சுகம் இதயம் மலர்வாய் இருப்பதைத் தவிர எதுவும் நாம் கேட்கவில்லை! எல்லோரும் இன்புற இனியவொரு உலகைத் தவிர எது வேண்டும் எமக்கு? நானொரு குடிகாரன். நல்லதற்காய், கெட...

படுகொலை செய்யப்பட்ட சதாம் !

படுகொலை செய்யப்பட்ட சதாம் உசைன் அவர்கள்... கொலையாகிய சதாமின் அரசியல் வாழ்வு கூறுவது என்ன? 1:அரபு மொழி பேசுபவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 2:இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒரு தேசிய இனமல்ல. 3:அரபு தேசத்தில் வாழும் முஸ்லீம்,அரபு மொழி பேசுபவர்கள் யாபேரும் ஒரு தேசிய இனமல்ல. 4:எண்ணை வயல்களைச் சொந்தமாக்கிய அரேபியர்கள் எந்தச் சொத்துமற்ற அரேபியர்களுக்கு பாதுகாவலர்களில்லை. 5: எண்ணை டொலர்களே ரிம்மில் ஓடும் அமெரிக்கப் பாசிச இராணுவத்தின் இருப்புக்கு மிக உந்து சத்தியாகும். 6: உலக ஏகாதிபத்தியத்தின் கனி வளத் தேவைக்கு எந்தத் தேசத்தின் இறமையும் ஒரே நொடியில் சிதைக்கப்பட்டு,பிற தேசங்களின் வளங்களை ஒட்டச் சுரண்டும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய மூலதனம். 7:இந்த ஒழுங்குக்காகவே தமது அடிவருடிகளைப் பயன்படுத்தும் அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் பிற சமூக ஏகாதிபத்தியங்கள்,அந்த அடிவருடியைத் தமது தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் கொலைகளைச் செய்வதற்குக் தூண்டித் தேவையுருவாகும்போது அதையே காரணமாக்கித் தமது அடிவருடியைக் கொல்லவும் முனையும்(இந்த இடத்தில் இந்தியச் சமூக ஏகாதிபத்திய-தரகு முதலாளியத்தை ஞாபகப்படுத்துவோம்:இ...