Skip to main content

Posts

தவழ்புனல் குருதிநெடிலகற்றும்!

தவழ்புனல் குருதிநெடிலகற்றும்! இ ரவைத் தின்ற பகற் பொழுதொன்றில் தன்னை, குண்டொடு வெடித்திடத் தேம்பியழுதாள் ஒருத்தி! அப்பாவித் தமிழிச்சி "ஐயோ அம்மா!"வெனப் புலம்பிச் சிதறினாள் எவனுக்காகவோ! பற்றை,நாகதாளி,கள்ளி, எருக்கலை,ஆமணக்கு,ஈச்சை நிரம்பிய ஈழம் புகைபடியக் குருதி கொட்டி விரிந்து,குவிந்து பலரைச் சிறைப்படுத்திப் பட்டுணியிட்டு பங்கருள் திணித்தது. புலிகள்,சிங்கங்கள் கழுகாய்மாறி அவர்கள் நிணத்தைப் புசித்தன நாய்கள் ஒன்றையொன்று கொன்றுண்டு அகம் மகிழ்ந்தன!! இன்னுஞ் சிலர் அவர்களிலொத்தவர்களைத் தேடியலைந்து ஈற்றில் முழு ஈழத்தவர்களையும் புசிப்பதற்காய் முடிவுகட்டிக் குண்டெறிந்தார்கள் அதையும் விடிவுக்கானதெனச் சில புத்திசீவிகள் விண்கட்டிப் பட்டம் ஏற்றினார்கள் கழுகாய் மாறிய புலிகளில் சிலர் ஐரோப்பாவரைப் பறந்து புகலிடத் தமிழரின் புதை குழி தோண்டினர் ஈழப்போர் நான்கு அவசியமென்றபடி! எனினும், காலக் கொடுவாள் தன் கோரப் பாய்ச்சலை அவர்கள் சிரசுகளில் ஓர் நாட்பாய்ச்சும்!! பள்ளமும் திட்டியுமாய் சமன்பட மறுக்கும் அராஜகம் தினமும் ஒரு புதிய அரும்பாய் மக்களின் எழிச்சியைத் தூண்டும். சமாந்தரமாய் முளைவிடும் புதிய ஜனநாயக...

யுக்கோவின் முன் நாள் அதிபர்!

யுக்கோவின் முன் நாள் அதிபர்! முன் நாள் யுக்கோஸ்லோவிய அதிபர் திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் இன்று அரசியல் கைதிகளுக்கான சாவதேசச் சிறைச்சாலை( Das UN-Kriegsverbrechertribunal in Den Haag )டென்காக்கில் மர்மமான முறையில் இறந்துள்ளார்! இந்தச் சாவின் மர்மம் என்னவென்பது தெரியாதிருப்பினும் யுக்கோஸ்லோவிய அரசியலிலும்,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்ப்பதில் இந்தத் தலைவரின் செயல் முறையிலும் நான் அதிக கவனஞ் செய்திருந்தேன், கடந்த காலங்களில்.அதற்கானவொரு வலுவான காரணமானது எப்பவும் எனக்குள் நிறைந்திருந்தது. திரு.ஸ்லோபோடான் மிலோசேவிக் ஏகாதிபத்திய அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறித்திருக்கும் பிம்பத்துக்குரியவரில்லையென்பதை, அவர் தமது நாட்டின் இனப்பிரச்சனைகளில் நிரூபித்திருந்ததே எனக்குள் ஒரு மரியாதயை ஏற்படுத்திருந்தது. கடந்த கால ஒன்றிணைந்த யுக்கோ ஸ்லோவியா பாரிய பொருளாதாரக்கட்டமைப்பைக் கொண்டு, நாட்டின் கட்டுமானங்களை முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகளுக்கிணையாக வளர்த்திருந்தும்,அதன் இனங்களுக்குள் வலுவான சமத்துவமின்மை வளராதிருந்தவேளை அதன் தகர்வு சாத்தியமாகும் நிலை தோன்றியது.இங்கேதாம் இந்தத் தலைவரின் செயற்பாடு கவனத்தை ஈர...

சமூக மனிதர்கள்:2

சமூக மனிதர்கள்:2 மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது. ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலு...

சமூக மனிதர்கள்!

சமூக மனிதர்கள்! "நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும், குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும் எந்நேரமும் போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றியமையாதவை..."- டோல்ஸ்டோய். நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி... என்னதாம் நமது பிரச்சினை? எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா? எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது? மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் ச...

சில குறிப்புகள்...

குறிப்பு:1 எனக்குச் சில நேரங்களில் தமிழ்ச் சனத்தின்மீதான கோபம் என்மீதாகவே வரும்.அந்த நேரங்களில் அதிகமாக விஸ்க்கி அருந்துவேன்.அப்படியருந்திவிட்டு மல்லாந்து எங்கவாவதொரு தெருவில்"கூரையற்றவர்கள்"போன்றே நானும் என்பதாகச் சரிந்து... இந்தக் காலம் குளிராகிறது.எங்கள் தேசச் சனங்களின் "எளிய"மனத்தை எண்ணிய போதெல்லாம் பாரதியின் பாடலொன்றே எண்ணமெல்லாம் நிறைந்து கொள்ளும்! "சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச் செத்திடுவார் ரொப்பாவார்,சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம். தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார் சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச் செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்..." இந்தப்பாடலை அவன் யாத்தபோது அவனுக்கு வயது வெறும் முப்பதே கடந்திருந்தது!இப்போத நமக்கு அறுபது கடந்தாலும் வாழ்வைப்பற்றிய உண்மை புலப்படவில்லை.என்ன நம்ம சனங்கள்!ஏதுசெய்தும் பிறன்வதைசெய்து, பிறவுள் நினைவு புகுத்தித் தீராது வன்மம் கொண்டலையும் மனிதாராகித் தமிழ்பேசிப் பயன் யாது? இந்த வ+ப்பெற்றாலில் ஒரு ஆசியன் கடையை எனக்குத் தெரிய பலர் நடாத்தி...

புதிய தலிபான்கள்!...

புதிய தலிபான்கள்!... இலங்கையின் இனமுரண்பாட்டை வெகுவாக உள்வாங்கும் ஒரு சராசரி குடிமக(ளு)னுக்கு அதன் முரண்பாடானது இன ஒடுக்குமுறையின் பலாத்தகார வன்முறையாகத்தாம் தெரிகிறது.நாம் எதற்காகப் போராடுவதற்கு வெளிக்கிட்டோம்?, ஈழக் கோசம் எதையொட்டி எழுந்தது?,போராடும் சூழ்நிலை எங்ஙனம் தோன்றியது?,இப்போது மீளவும் இலங்கையரசோடு பேசவேண்டிய தேவையும்,யுத்தம் மேற்கொண்டு நகர முடியாத சூழ்நிலையும் எப்படித் தோன்றியது?,எமது பிரச்சனை இலங்கை அரசுக்கும்,தமிழ் பேசும் மக்களுக்குமானதாகக் கற்பிக்கப்பட்டது சரிதாமா? கூடவே, எங்கள் இனப் பிரச்சனையில் வெளி நாடுகளின் பங்கு எதை நோக்கித்தாம் நகர்ந்து கொண்டு செல்கிறது? இவை கேள்விகள்தாம்! ஆனால் பதில் எத்தகைய தளத்திலிருந்து மேலெழுகிறதென்பதும் ஒரு கேள்வியாகவே விரிகிறது.இது குறித்துச் சில உள்மறைவு நலன்களைப் பார்ப்போம்.இவை எமது மக்களின்-நாட்டின் நலனுக்கு எதிராகவே இருப்பதை நாம் கவனிக்கத் தவறும் ஒவ்வொரு கணமும், நமது மக்களின் "சுய நிர்ணயத்தின"; இருப்புப் பலவீனமானது.இந்த மக்கள் இதுவரை இலட்சம் மக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கும்போது, நாம் வாழாதிருக்க முடியாது.இன்றைய பாலஸ்தீன அரசி...

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு...

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்! தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு"பொய்யான"உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக் கட்சியையும் இன்றைய நிதிமூலதனமும்,விஞ்ஞானமும் விட்டுவைக்கவில்லை.வர்க்கமென்றாலே என்னவென்றறிய முடியாதவொரு இரண்டுங்கெட்டான் சமுதாயமாக மனித சமூக வாழ்வு கட்டப்படுகிறது.இதுவரையான எல்லா மதிப்பீடுகளும் வரலாற்று இயங்கியல் போக்கில் வடிவத்தை உடைத்துவிட்டு உள்ளடக்கத்தையே முன் தள்ளுகிறது.இதன் பக்கவாட்டுக்கு எந்தச் சமூக இயக்கமும் கடக்க முடியாது.இது சமூக விஞ்ஞானத்தின் விதி.குறைவிருத்திச் சமுதாயங்கள்கூடத் தமது முரண்பாடுகளால் சமூக வளர்ச்சியை எட்டாது,திடீர்த்தனமான அந்நிய உந்துதலால் சமூகத்தின் வளர்ச்சியை பொய்யாக உந்தித் தள்ளுகிறது.எந்தவித வளாச்சியுமற்றவொரு நாடு இத்தகைய அத்துமீறிய தகர்வால் சமூகக் கட்டமைப்பின்மீதான அனைத்து அதிகாரங்களையும் திடீர்வரவ...

இயற்கையும்,விடுதலையும்...

இயற்கையும்,விடுதலையும்... பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதுவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது உணர்வினது மட்டுப்படுத்தப்பட்ட "அறிதிறனால்"செயலூக்கமாக விரிகிறது.வாழ்வாதரமற்ற பகுதிகளைவிட்டகலும் உயிரியானது தனது இருப்புக்காக இன்னொரு பகுதியைக் கண்டடையவேண்டிய நிர்பந்தம் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.இந்தச் சூழலலைத் தீர்மானித்த இயற்கையானது வரலாற்றுப்போக்கில் வெகுவாகப் பாதிப்படைகிறது.மனிதரின் உயிர்வாழ்வுக்கான புவிமீதான இடைச்செயல் அத்தியவசியத்துக்கு மீறிய மட்டுப்படுத்தமுடியாத குவிப்புறுதிய+க்கத்தால் தொடர்ந்து இயற்கை வளம்,மனித வளம் அழிக்கப்படுகிறது.இதன் உச்சபச்ச நுகர்வ+க்கம் மக்களின் உயிர்வாழ்வைக் கேள்விக் குறியாக்கிவிடுகிறது.இத்தகைய நிலைமையில் இன்றைய மக்கள் சமுதயாங்களின் இருப்பானது எதுவரை சாத்தியமாகும்? ஆபிரிக்கக் குடிகளும்,ஆசியக்குடிகளும் இப்போது எதிலிகளாகப்பட்ட நிலையால் இடம்பெயர்தல் தவிர்க்கமுடியவில்லை.அவர்க...

அவசியம் அறிந்து கொள்வோம்.

இதையும் அவசியம் அறிந்து கொள்வோம். உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது. ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா? போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டுள்ளது.மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் பூராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது. நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழங்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அ...

அன்னையின் மடி தேடி...

அன்னையின் மடி தேடி... அந்நியர்களின் விருப்பாய் அழிவு வந்தது ஈழமென்று! குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின் செல்லக் கால்கள் எங்கள் தெருவெங்கும் ஒடிந்து கிடக்கின்றன. அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத் தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி, தங்கை சிரசுகள் இழந்து நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்! எம் முன்னோர் தோணிவிட்ட வளம் நிறைந்த எங்கள் கடலை வழித்து நக்கும் அந்நியன் எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே இன்னுமெமது சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு மாவீரர் பாட்டோடு தீராத கொலை வேட்கையுடன் அலைகிறான். இந்த நிலையில் என் தேசக் குஞ்சுகளுக்கு சில வற்றைச் சொல்வேன்: மற்றவர்களின் விருப்புக்காய் மடிந்தது போதும்,மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு வயதாகிப் போகவில்லை! அதோ, வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல் துள்ளி விளையாடத்தக்க உங்கள் மனதைக் கெடுக்கும் கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள். 'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்' என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில் வாழ்வின் உண்மையையும் வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும் நான் தரிசிக்கிறேன். ஏழைத் தாய் ...

ஈர விழிகளும்,இதய வலியும்...

ஈர விழிகளும் இதய வலியும்... உ லக மக்களிடம் நாளந்தம் ஒரு நிகழ்வு நன்மையானதாகவோ அன்றித் தீமையாகவோ வந்து தொலைகிறது.இலங்கைத் தமிழிரின் வாழ்வில் இவை வேறொரு வடிவில்'சாவு,கொலை'- தீமைகளாகவே வருகின்றது!எம் வாழ்வில் மகிழ்வோடு பண்டிகைகள் வருவதில்லை.குருதி கொட்டி உயிரிழந்த உடல்களைச் சுமந்து வரும் பண்டிகைகளும்,வாழ்வும் எம்மை வருத்துகிறது.போதுமடசாமி! போர்,இயற்கை அழிவு,ஆயுத்தால் மனிதவொடுக்குமுறை,அரச பயங்கரவாதம்-அட்டூழியம்!சர்வதிகாரச் சிங்கள அரசும்,ஆயுதக் குழுக்களும் பேயாட்சி செய்ய-இம்மென்றால் கொலையென்று காட்டாட்சி செய்ய, மக்களோ இருவேறு அரசஜந்திரங்களுக்கு முகங் கொடுத்து வாழும் துயரச் சூழலில்தாம் ஓ...அந்தத் துயரக் கொடுமை சுனாமிப் பேரலையாக எங்கள் குஞ்சுகளை,அவர்கள் உறவுகளை அள்ளிச் சென்றது. அள்ளியுண்ட வாயும்,உணவளைந்த பிஞ்சுக்கரங்களும்,அம்மாவின் மடியில் தொட்டில் கட்டிய குழவியும்,முற்றத்தில் தவழ்ந்த சின்னக்கால்களும் அள்ளுப்பட்ட பேரலை அவலம் ஆருக்குத்தாம் நோகவில்லை? பல இரவுகள் அமைதியிழந்த உளத்தோடு நகர்ந்துள்ளன.அற்புதமான எங்கள் மழலைகள்- பிஞ்சுகளை இறால்களைப்போல் அள்ளிக் கொட்டிய அவலத்தை எப்படித்தாம் மறப்...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமிய...

தேசிய மாவீரர் தினமும்,இஸ்லாமியத் தகவமைப்பும்... >>>>>'07.07.2005 துன்பியல் நிகழ்வு நம்மெல்லோருக்கும் உரைப்பது என்னவென்றால் திறந்த அரங்கில் குடிமக்களும் மதவாதிகளும் கூட்டாக வாழ்வதும் இஸ்லாமமியத் தத்துவார்த்தம்,இனவாதம்,வேலையில்லாத்திண்டாட்டம்,ஏழ்மை, மற்றும் சமூகப் பார்வைக்கு உட்படுவதும்- மேற்சொன்ன சில காரணங்கள் எங்கள் குழந்தைகளை அந்நியப்படுத்திக்கொண்டபோது,அவர்களின் ஆத்திரமானது அவர்களைக் கண்கெட்ட செயல்களுக்குள் தள்ளிவிடுகிறது, அது விருப்பையும் ஏற்படுத்துகிறது' இங்கிலாந்து தேசத்து மாபெரும் இமாம்(இவர் 'யூரோ இஸ்லாத்தை' முன் மொழிபவருங்கூட) இங்ஙனம் உரைத்தார்,கடந்த இலண்டன் குண்டு வெடிப்புக்குப்பின்னரான உரையாடல் ஒன்றில். அதாவது பிரச்சினைகளின் ஒரு துரும்பைக்கூட தொடுவதற்கான முயற்சி அடியோடு அழிக்கப்படுதலும் அதிலிருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை மற்றவர்களின் முதுகில் கீறி விடுதலுக்கான அறிவுஜீவி ஒருவரின் கருத்தாக இந்த இமாமின் கூற்றை மேற்குலக இடதுசாரி வட்டாரம்கூட நோக்குகின்ற பாதகமான சூழலின் விருத்தி எங்ஙனம் நிகழ்தது என்று எனக்கு நீண்ட நாளாக ஒரே கேள்வியாக எழுவதும் பின்...