Skip to main content

தவழ்புனல் குருதிநெடிலகற்றும்!

தவழ்புனல்
குருதிநெடிலகற்றும்!


ரவைத் தின்ற
பகற் பொழுதொன்றில்
தன்னை,
குண்டொடு வெடித்திடத் தேம்பியழுதாள் ஒருத்தி!

அப்பாவித் தமிழிச்சி "ஐயோ அம்மா!"வெனப்
புலம்பிச் சிதறினாள் எவனுக்காகவோ!



பற்றை,நாகதாளி,கள்ளி,
எருக்கலை,ஆமணக்கு,ஈச்சை நிரம்பிய ஈழம்
புகைபடியக் குருதி கொட்டி
விரிந்து,குவிந்து
பலரைச் சிறைப்படுத்திப் பட்டுணியிட்டு
பங்கருள் திணித்தது.


புலிகள்,சிங்கங்கள் கழுகாய்மாறி
அவர்கள் நிணத்தைப் புசித்தன
நாய்கள்
ஒன்றையொன்று கொன்றுண்டு அகம் மகிழ்ந்தன!!



இன்னுஞ் சிலர்
அவர்களிலொத்தவர்களைத் தேடியலைந்து
ஈற்றில் முழு ஈழத்தவர்களையும்
புசிப்பதற்காய் முடிவுகட்டிக் குண்டெறிந்தார்கள்
அதையும் விடிவுக்கானதெனச் சில புத்திசீவிகள்
விண்கட்டிப் பட்டம் ஏற்றினார்கள்


கழுகாய் மாறிய புலிகளில் சிலர்
ஐரோப்பாவரைப் பறந்து
புகலிடத் தமிழரின் புதை குழி தோண்டினர்
ஈழப்போர் நான்கு அவசியமென்றபடி!

எனினும்,
காலக் கொடுவாள்
தன் கோரப் பாய்ச்சலை
அவர்கள் சிரசுகளில் ஓர் நாட்பாய்ச்சும்!!



பள்ளமும் திட்டியுமாய்
சமன்பட மறுக்கும் அராஜகம்
தினமும் ஒரு புதிய அரும்பாய்
மக்களின் எழிச்சியைத் தூண்டும்.
சமாந்தரமாய் முளைவிடும்
புதிய ஜனநாயகம்!


மூச்சிறைக்க இடறி விழும் புலிப் பாசிசம்
உணர்ந்தொதுங்கும் சிங்கம்,
தலை குத்தி மண் கவ்வும் இனவாதம்
காலமிதைக் கவிதையாய் வடிக்கும்.


உருத்தெரியாது அழிந்துவிடும் ஆயுதங்கள்
உப்புக்கு நிகராகா ஈழக் கோசம்!
புதுவாழ்வின் ஆசையின் எச்சத்தில்
மனிதம் முளையெறியக் காத்திருக்கும்,
அந்த நாளைப் படைப்பதற்குத் தோழர்கள் கரங்கள்
செங்கொடி தாங்கும்


அப்போது
தவழ்புனல் குருதி நெடிலிழந்து குதூகலிக்கும்
எங்கள்
குழந்தைகள் அதுள் தப்படிப்பார்!


அவர்கள் பெற்றோர்
எடுப்பார் கலப்பை,
எருதுகளெங்கும் உழைத்துதவும் எங்கள் வாழ்வுக்கு,
காகங்கள் யாவும்
களிப்பாய்ப் பாட
கருங்குழற் பெண்கள் பட்டுத் தரிப்பார்,

பருவப் பயல்கள் அவர்களிடம் பதுங்க
எங்கள் தேசம் இனிதாய் மலரும்
"இனியும் ஒரு வாழ்வு எங்களுக்குண்டென"
இளையவர் கூடுவர் இதயம் மலர!

கோவில்கள் எங்கும் குழலும்,
கொட்டும் தவிலும்,சங்கும் ஒலிக்கும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.06

Comments

Anonymous said…
Thank you!
Sri Rangan said…
விமலா தங்கள் வருகைக்கு நன்றி!

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்!

மீண்டும்,மீண்டும் நிருபணமாகிய வர்க்க நலன்! மேதின ஊர்வலம்...நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால் நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்? தமிழ் மொழிமீதான பற்றுறுதி தமது உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்ந்த கல்லொழுங்கையூடாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால் அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொழித்துவிட்டது. இப்போது மத்திய ஐரோப்பிய நேரம் 16.மணி(மாலை 4மணி),இன்று காலை 9.30 மணிக்கு இடுஸில்டோல்வ்(Duesseldorf) நகரத்தில் கூடினோம்.மே தின ஊர்வலம்!உலகத்து மக்ளெல்லம் செங்கொடிகளோடு திரண்டிருக்க,நாம் தமிழர்கள் கிட்டத்தட்ட 150 நபர்கள் புலிகளின் தலைமையில் திரண்டுகொண்டோம்,நாதஸ்வர இசையோடு. சந்திரிகா ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் கேலிச...