Skip to main content

Posts

புலத்திற் புலனாகாத மாற்று அரசியல்

நிலையெடுக்கும் அரச ஆதிக்கமும் அதன்வழி அரங்கேறும் இனவொதுக்கற் குடிப் பரம்பலும். -சில கருத்துக்கள் வரலாற்றில் புலிப்போராட்டம்: பு ரட்சி,விடுதலை,சோசலிசம்-சுயநிர்ணயப்போராட்டம் குறித்துப் புலிகள் போட்ட முடிச்சுகள் யாவும் படுபிழையானதென்பதை எப்பவோ விமர்சித்து முடித்தாகிவிட்டது.மீண்டும், இந்தப் புலிகளின் கடைக்கோடிப் போராட்டச் செல்நெறி குறித்துப் புலம்பத் தேவையில்லை!ஆனால்,மக்களின் அழிவைக்கொண்டு தமது இருப்பின்வழி மீளவும் புரட்சிகரமான அணித் திரட்சிகளைப் ப(பி)ணப்புலிகள் இல்லாதாக்கும் அரசியலுக்குப் பலர் முண்டுகொடுப்பது சுத்தக் கபடத்தனமானது. இதற்காகவேனும் தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் குறித்துப் பக்கச் சார்பு(புலி-இலங்கை)இன்றி மக்களின் நலனிலிருந்து கருத்துக்களை முன்வைத்தாகவேண்டும்(இனியொருவில் அத்தகைய கருத்தாடலுக்கான வெளியைக் கோருவதிலிருந்து புதியதிசைகள் நோக்கிய பாதையை மெல்ல உருவாக்கிக்கொள்ள முடியும்). புலிகள், இதுவரை செய்த போராட்டம் தமிழ் மக்களை அந்நியச் சக்திகளிடம் அடைவு வைக்கும் சூழ்ச்சிமிக்க போராட்டமாகும்.இது, தமது அரசியல்-போராட்ட நெறிமுறைகள்தாம் "மக்களின் விடுதலைக்குச் சரியான தெரிவு...

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி?

புலிக்கொடி : தமிழர்களது தேசியக்கொடி? " எனக்குத் தேசிய அடையாளங்களது புனித விம்பம் என்பது,நிலவுகின்ற ஆளும்வர்க்க அரசியில் ஆதிக்கத்தினது கருவி என்பதும்,ஒடுக்கு முறைக்குள்ளாகும் ஒரு தேசிய இனத்தின் கோரிக்கைக்குள் கனவாகிக் கிடக்கும் தேசிய விம்பங்கள் அவர்களது இருப்பைக் காக்கும் அலகுகள் என்ற புரிதலும் இருவேற சூழலில் உண்டு! " தீ பம் தொலைக்காட்சியின் புலிக்கொடி பற்றிய உரையாடலின் பின்பு,புலிக்கொடிக்கு எதிராகக் கருத்தாடிய ராஜ் தாக்கப்படுகிறார். இலங்கை அரசுக்குச் சார்பான கொன்ஸ்சன்ஸ்ரையின் அருகினில் இருந்து, அவரது கருத்துக்குத்தோதாக உரையாடிய ராஜ், தன்னை இலங்கை அரசினது போக்குக்கு இசைவானவராகக் காட்டப்பட்ட சூழ்நிலையைக்கடந்து, இந்த விவாத்தின் பின் எழுந்த தேசிய அடையாளங்களது புனித விம்பம்,மற்றும் பாசிசக் குறியீடுகளது இருப்பும் அதன் பின்னான சித்தாந்த வலுவும் குறித்து, கவனத்தைக்கொள்வதும் எனது நோக்கு அல்ல! இது, குறித்து நிறைய விவாதித்தாகிவிட்டது!தேசங்கடந்த ஆய்வாளர்களது புரிதல் நமக்குப் பல புரிதலைத் தந்துவிட முடியும்.எனவே, நாம்,தமிழர்களது அவல நிலையுள் இந்த விடையங் குறித்துச் சில கவனத்தைச் சுட்ட முடி...

மிகேல் அபத்த உலகை வெற்றியீட்டியவனா?அல்லது அபத்தத்தின் அதியுயர்ந்த கீரோவா?

முப்பது இலட்ச முழு நிதியும் மார்க்சிய கட்சிக்கே போய் சேரட்டுமென முதலாளி... Der Mythos des Michael May_Sisyphos வ ரலாறு பூராகவும் இந்த மனிதவாழ்வுக்கு அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகிறது.எந்தக் கற்பித்தல்களும் மனித வாழ்வைப் பூரணமான-சுதந்திரமான புரிதல்களோடு நியாயப்படுத்தவில்லை! ஏன் வாழவேண்டும் என்பதும்,எதற்குச் சொத்துச் சேர்க்க வேண்டுமென்பதும் நியாயப்படுத்தும்படியாக எப்போதும்இருக்க முடிவதில்லை! "Absurd" முற்றிலுமாக விரிகிறது,வாழ்வை எண்ணி! குடும்பம்-பிள்ளை,குட்டி எனக்கொண்ட உறவொடு விரிந்து போகும் விருப்புக்கு குவிப்புறுதிகொள்வதில்மனித வாழ்வு அதிகம் சலித்துப் போகிறது.எதிலும் நம்பகத் தன்மை இல்லை-எங்கும் போலித் தனமும்,நம்ப வைத்துக் "கழுத்து அறுப்பும்" நிலவுகிறது. நான், எந்த நோக்கமுமற்ற வினைகளுக்குள்த் தினமும் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். "unsinnig" அர்த்தமற்ற உலகமாகப்பட்ட மனித வாழ்வு அழிவிற்குள்...அது,"தவறான-தப்பான,நியாயமற்ற"சட்டங்களால்- ஒழுங்குகளாற் தினமும்இந்த வாழ்வை அழிப்பதில் முடிகிறது.மீள,மீளத் துரத்திவரும்"அபத்தம்(Absurditaet)பயனற்ற,அர்த்தம...

புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர் விடுக்கும் அவசர வேண்டுகோள்: பாசிசப் புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்! அ ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!, முள்ளி வாய்க்காலில் பாசிசப் புலிகளோடு எமது மக்கள் வகை தொகையின்றி அழிந்துபோனார்கள்.இந்த அழிவு இன்று, இரண்டாவது நினைவுத் தட ஆண்டாக வந்து போயுள்ள நிலையில் நாம் தமிழீழ அரசுக்கான கட்டுமானத்தைப் பொறுப்பேற்கிறோம். எமது தேசம் அன்னிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.புலிகளது அழிப்பு அரசியலானது நம்மை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியபோதும் புலிகள...

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

முள்ளி வாய்க்காலில் முரசெறிந்த" எங்கள் தலைமையும் "வீழ்ந்ததுவோ? சேர்பவர்: செல்வி.தமிழீழா, மே/பா: முள்ளி வாய்க்கால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,மற்றும் வன்னிப் பெருங்காடு, தமிழீழம். 18.05.2011 அ ன்புக்குரிய ,தமிழ் ஈழா, நலந்தானே எனக் கேட்கேன்-நான் " எல்லாம்" பெற்று, உன்னை வைத்து உண்டியல் குலுக்கியபடி சௌக்கியமாக... இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ... கொலைஞருக்குப் பின் தமிழ்நாட்டைச் சுற்றி,"தமிழ் உலகே ஜெய,ஜெய,ஜெயவெனப் பஜனையிட" உன் மேனி சிலிர்த்திருக்குமே? இருக்காதா பின்னே! நா(கா)டு கடந்த தமிழீழ அரசு அம்மையாருக்கு வாழ்த்தனுப்ப,முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்த(படி) துட்டக் கைமுனுவைப் பார்த்த பொரிகாலனுக்குக் கட்டையடித்த கையோடு,உன்னை வைத்துப் பெரு வர்த்தகஞ் சூடாய்ப் பிறக்கிறதாம்! இதுள், பெரு மகிழ்வை நீ அடைந்தாலும், பேரானந்தம் நிலைத்தாலும் எல்லாம் எங்கள் மேதகு(வி)தேசிய மாமனிதருக்கே சொந்தம்!இன்று,அவருக்கும்,அவர் பஜனைக் குழுவுக்கும் இரண்டாவது திவசம் செய்கிறார்கள் நம்ம தோழர்கள்- அம்மையாரிடம் "அரிசி" கொடுப்பதில் உருத்திரகுமார் முந்திக்கொண்டார்! உனக்கும்,உனது க...

மந்தைத் தெருவினில்...

மந்தைத் தெருவினில்... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன், " Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe "மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!"பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்கும் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டு? கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும்! இந்தத் தருணங்களைப் பற்றி எந்த மொழிவுகளோடு வருகிறோம்? ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும்"துரோகி"ப் பட்டங்களுக்காக நபர்களைக் குறிவைக்கும் திசை தமிழுக்கான உயர்வைக் குறித்துக் கனவு காண்கிறதாம். மனித மொழிகள்அவனது எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது...

1 May 2011:சிந்தி-ரோமா மக்களுக்காக...

சிந்தி-ரோமா மக்களுக்காக... ஆ யிரம் பேர்கள் ஊர்வலத்திலும்,இறுதி நிகழ்வில் 5000 பேர்கள் வரை திரண்ட இந்த(01.05.2011) மேதின ஊர்வல நிகழ்வில் வழமைபோலவே நான் எம்.எல்.பி.டி.( MLPD )கட்சி ஒலிவாங்கியில் உரையாற்றினேன்.இவ்வாண்டினது கோசங்கள்,பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறித்தானதாக இருந்தபோது,பொருளாதாரப் பேராசிரியர் றுடேல்ப் கிக்கல் ( Rudolf Hickel von der Universität Bremen_பிறீமன் பல்கலைக் கழகம் ) மிகச் சிறந்த உரையொன்றைச் செய்தார் (அவருக்கு கரங்கொடுத்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு 50 யூரோ பணத்தை அவரது கையுக்குள் திணித்தனர்,அவரோ வேண்டாமெனும்போது, உங்கள் பிரயாணச் செலவுக்கென்றனர்).எப்பவும்போலவே இம்முறை இலங்கைப் பிரச்சனை குறித்து என்னால் எதுவுமே பேசமுடியவில்லை! எனது மனத்திரையெங்கும், உலகெங்கும் நசிபடும்-பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமென அவா ஏற்ப்பட்டது! எந்தத் தலைமையுமின்றி-கேட்பாருக்கு நாதியின்றித்தவிக்கும் ஒரு மகட்டொகுதி குறித்துக் கவனயீர்ப்பு செய்யவேண்டுமென்றே கடந்தசில நாட்களாக உறுதிபூண்டேன்!எங்கள் மக்களுக்காவது ஒரு டக்ளஸ்-சோ அல்லது சம்பந்தனோ,நாடுகடந்த தம...

ஐ.நா. அறிக்கையைவிட...

ஐ.நா. அறிக்கையைவிட இக் கேள்களுக்கு விடையே முக்கியமானது. மு ள்ளி வாய்க்காலது பாடத்துக்கு முன்பிருந்தே (இதுவரையான) நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது?? இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? இவை கேள்கள் மட்டுமல்ல.வரலாற்று முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான தேடுதலுமாகிறது! ஐ.நா.அறிக்கைக்குப் பின்பான தமிழ்ச் சிந்தனை முறையானது மீளத் திட்டித்தீர்ப்பதிலும்,ஒருவரையொருவர் தாக்குவதிலும் காலத்தைக் கடத்திட முடியாது.புலிகளது இயக்கவாதக் கருத்தியலை மீளத் தகவமைக்கும் "புரட்சி"க்காரர்களிடையே நிலவுகின்ற இனஞ்சார் குறுகிய அரசியற் பார்வைகளை இனிமேலும் விருத்தியாக்கி மக்களைக் குறித்து அரசியல் செய்வது இயலாது காரியமெனும் ஆரம்பப் புரிதல்கூட விசும்பு நிலையிலேகூட புலம் பெயர் தளத்தில உருவாக முடியாது கருகிவிடுகிறது-இஃது,ஆபத்தானது! நமது "தேசிய"விடுதலைக் கோசமான...

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை! [Ich will dein Vater sein und kein Prophet.] "எவரொருவர் புரிவதற்கு முனைகிறாரோ அப்போது, அதைப்பற்றிப் புரிந்துகொள்வது முடியாதுபோகிறது!" "Wer zu verstehen beginnt, versteht nichts mehr."-Erich Kaestner. எரிக் ஹெஸ்னர்! ஜேர்மனியக் கவிஞன்-போர் எதிர்ப்பாளன்.நாசிகளால் தனிமைப்படுத்தப்பட்டு,அவனது நூல்களையும் பாசிசம்கொளுத்தும்போது உலக மனிதனாக உருப்பெற்றவன்.அவன் குறித்தும்,அவனது கவிதாவுலகு குறித்தும் தொடராக எழுதுவதைத் தவமெனக்கொண்டு தொடராக எழுதுகிறேன்.எனக்கிருக்கும் அருகிய நேரத்துள் தமிழக்கு எரிக் ஹெஸ்னரைக் கொணர்வதென அவாக்கொண்டேன்! தூங்க முடியவில்லை!தூக்கந் தொலைந்த பொழுதுகளாக எனக்கு முன் காலம் பொழுதுகளாக மலரும் தினமொரு விடியலில் நான் தவிக்கிறேன்-தொலைகிறேன்.எல்லாம் எத்தனை விடிவுகளில் கருக் குலையும் செயல்வினைமிக்க ஊக்கத்தோடு என்னைவிட்டபாடில்லாது வந்து குந்திக்கொள்ளும் குந்துக்கட்டாய் எனது அகம். எனக்கிருப்பது காலம் ஒன்றுதாம்.தனிமைப்படுத்தப்பட்ட மனிதன்! ஒருவிடியலில் தனது முழு எழுத்தையும் நெருப்பிட்டுக்கொளுத்திய கிட்லரது அடாவடித்தனத்துள...

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும். -சில குறிப்புகள். பூ க்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை! அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து இன்றைய ஜப்பானது அழிவுகனை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தரும் விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால். ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் இன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசுகின்றன.மிக முன்னேறிய தேசமா...