Skip to main content

Posts

புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்!

தமிழீழத் தற்காலிக உள்ளக அரசின்அரசியற்றுறைத் தலைவர் விடுக்கும் அவசர வேண்டுகோள்: பாசிசப் புலிகளுக்குப் பின்னான தமிழீழ அரசும்,நாமும்! அ ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!, முள்ளி வாய்க்காலில் பாசிசப் புலிகளோடு எமது மக்கள் வகை தொகையின்றி அழிந்துபோனார்கள்.இந்த அழிவு இன்று, இரண்டாவது நினைவுத் தட ஆண்டாக வந்து போயுள்ள நிலையில் நாம் தமிழீழ அரசுக்கான கட்டுமானத்தைப் பொறுப்பேற்கிறோம். எமது தேசம் அன்னிய இனங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது. இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.புலிகளது அழிப்பு அரசியலானது நம்மை இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளியபோதும் புலிகள...

இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ...

முள்ளி வாய்க்காலில் முரசெறிந்த" எங்கள் தலைமையும் "வீழ்ந்ததுவோ? சேர்பவர்: செல்வி.தமிழீழா, மே/பா: முள்ளி வாய்க்கால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,மற்றும் வன்னிப் பெருங்காடு, தமிழீழம். 18.05.2011 அ ன்புக்குரிய ,தமிழ் ஈழா, நலந்தானே எனக் கேட்கேன்-நான் " எல்லாம்" பெற்று, உன்னை வைத்து உண்டியல் குலுக்கியபடி சௌக்கியமாக... இன்று,இன்னுமொரு மே,மேய்-மே : 18 ... கொலைஞருக்குப் பின் தமிழ்நாட்டைச் சுற்றி,"தமிழ் உலகே ஜெய,ஜெய,ஜெயவெனப் பஜனையிட" உன் மேனி சிலிர்த்திருக்குமே? இருக்காதா பின்னே! நா(கா)டு கடந்த தமிழீழ அரசு அம்மையாருக்கு வாழ்த்தனுப்ப,முள்ளி வாய்க்காலில் மண்டை பிளந்த(படி) துட்டக் கைமுனுவைப் பார்த்த பொரிகாலனுக்குக் கட்டையடித்த கையோடு,உன்னை வைத்துப் பெரு வர்த்தகஞ் சூடாய்ப் பிறக்கிறதாம்! இதுள், பெரு மகிழ்வை நீ அடைந்தாலும், பேரானந்தம் நிலைத்தாலும் எல்லாம் எங்கள் மேதகு(வி)தேசிய மாமனிதருக்கே சொந்தம்!இன்று,அவருக்கும்,அவர் பஜனைக் குழுவுக்கும் இரண்டாவது திவசம் செய்கிறார்கள் நம்ம தோழர்கள்- அம்மையாரிடம் "அரிசி" கொடுப்பதில் உருத்திரகுமார் முந்திக்கொண்டார்! உனக்கும்,உனது க...

மந்தைத் தெருவினில்...

மந்தைத் தெருவினில்... "யாதும் ஊரே யாவரும் கேளீர்" இரண்டாயிரம் வருடத்துக்குமுன் தமிழன், " Edel,sei der Mensch,hilfreich und Gut"-Goethe "மனிதன் மேன்மையானவன்,கருணையும் சிறப்பும் நிறைந்தவன்!"பதினோழாம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த கோத்தே முதல் இன்றுஞ் சொல்லப்படும் மனிதமாண்பு மகா கேவலமாச்சு. இந்த மொழிவுகளுக்கும் பின்னால் நிகழ்ந்தவைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டு? கலைகள்-எண்ணங்கள்... முட்கம்பிகளுக்குப் பின்னே ஊசலாடும்! இந்தத் தருணங்களைப் பற்றி எந்த மொழிவுகளோடு வருகிறோம்? ஏதோவொரு தேவைக்காகப் பலவுயிர்களைப் பலியெடுத்துவிட்டு,மீளத் தகவமைக்கும்"துரோகி"ப் பட்டங்களுக்காக நபர்களைக் குறிவைக்கும் திசை தமிழுக்கான உயர்வைக் குறித்துக் கனவு காண்கிறதாம். மனித மொழிகள்அவனது எண்ணங்களைத் தெளிவாகச் சொல்வதற்குச் சேவிக்கிறது.எண்ணங்களைத்தானேதவிர எந்த உணர்வுகளையும் அது வெளிப்படுத்தும் ஊடகமில்லை!என்றபோதும்,அதன்வழியே தொடர்பாடலுஞ் செயலுக்குமான விளக்கும் பிறக்க வேண்டியுமிருக்கிறது.சமுதாயத்தின்-குழுமத்தின் நோக்கம் உலகைத் தொடர்புபடுத்திச் சொல்வதில் வார்த்தைகளே உடுத்திப் போர்க்கிறது...

1 May 2011:சிந்தி-ரோமா மக்களுக்காக...

சிந்தி-ரோமா மக்களுக்காக... ஆ யிரம் பேர்கள் ஊர்வலத்திலும்,இறுதி நிகழ்வில் 5000 பேர்கள் வரை திரண்ட இந்த(01.05.2011) மேதின ஊர்வல நிகழ்வில் வழமைபோலவே நான் எம்.எல்.பி.டி.( MLPD )கட்சி ஒலிவாங்கியில் உரையாற்றினேன்.இவ்வாண்டினது கோசங்கள்,பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறித்தானதாக இருந்தபோது,பொருளாதாரப் பேராசிரியர் றுடேல்ப் கிக்கல் ( Rudolf Hickel von der Universität Bremen_பிறீமன் பல்கலைக் கழகம் ) மிகச் சிறந்த உரையொன்றைச் செய்தார் (அவருக்கு கரங்கொடுத்தபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு 50 யூரோ பணத்தை அவரது கையுக்குள் திணித்தனர்,அவரோ வேண்டாமெனும்போது, உங்கள் பிரயாணச் செலவுக்கென்றனர்).எப்பவும்போலவே இம்முறை இலங்கைப் பிரச்சனை குறித்து என்னால் எதுவுமே பேசமுடியவில்லை! எனது மனத்திரையெங்கும், உலகெங்கும் நசிபடும்-பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டுமென அவா ஏற்ப்பட்டது! எந்தத் தலைமையுமின்றி-கேட்பாருக்கு நாதியின்றித்தவிக்கும் ஒரு மகட்டொகுதி குறித்துக் கவனயீர்ப்பு செய்யவேண்டுமென்றே கடந்தசில நாட்களாக உறுதிபூண்டேன்!எங்கள் மக்களுக்காவது ஒரு டக்ளஸ்-சோ அல்லது சம்பந்தனோ,நாடுகடந்த தம...

ஐ.நா. அறிக்கையைவிட...

ஐ.நா. அறிக்கையைவிட இக் கேள்களுக்கு விடையே முக்கியமானது. மு ள்ளி வாய்க்காலது பாடத்துக்கு முன்பிருந்தே (இதுவரையான) நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது?? இனவொடுக்கு முறைக்கு எதிரான கோரிக்கைகள்(...)கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? இவை கேள்கள் மட்டுமல்ல.வரலாற்று முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கான தேடுதலுமாகிறது! ஐ.நா.அறிக்கைக்குப் பின்பான தமிழ்ச் சிந்தனை முறையானது மீளத் திட்டித்தீர்ப்பதிலும்,ஒருவரையொருவர் தாக்குவதிலும் காலத்தைக் கடத்திட முடியாது.புலிகளது இயக்கவாதக் கருத்தியலை மீளத் தகவமைக்கும் "புரட்சி"க்காரர்களிடையே நிலவுகின்ற இனஞ்சார் குறுகிய அரசியற் பார்வைகளை இனிமேலும் விருத்தியாக்கி மக்களைக் குறித்து அரசியல் செய்வது இயலாது காரியமெனும் ஆரம்பப் புரிதல்கூட விசும்பு நிலையிலேகூட புலம் பெயர் தளத்தில உருவாக முடியாது கருகிவிடுகிறது-இஃது,ஆபத்தானது! நமது "தேசிய"விடுதலைக் கோசமான...

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை!

நான் தந்தையாகவே இருக்கமுனைகிறேன்,போதகனாக இல்லை! [Ich will dein Vater sein und kein Prophet.] "எவரொருவர் புரிவதற்கு முனைகிறாரோ அப்போது, அதைப்பற்றிப் புரிந்துகொள்வது முடியாதுபோகிறது!" "Wer zu verstehen beginnt, versteht nichts mehr."-Erich Kaestner. எரிக் ஹெஸ்னர்! ஜேர்மனியக் கவிஞன்-போர் எதிர்ப்பாளன்.நாசிகளால் தனிமைப்படுத்தப்பட்டு,அவனது நூல்களையும் பாசிசம்கொளுத்தும்போது உலக மனிதனாக உருப்பெற்றவன்.அவன் குறித்தும்,அவனது கவிதாவுலகு குறித்தும் தொடராக எழுதுவதைத் தவமெனக்கொண்டு தொடராக எழுதுகிறேன்.எனக்கிருக்கும் அருகிய நேரத்துள் தமிழக்கு எரிக் ஹெஸ்னரைக் கொணர்வதென அவாக்கொண்டேன்! தூங்க முடியவில்லை!தூக்கந் தொலைந்த பொழுதுகளாக எனக்கு முன் காலம் பொழுதுகளாக மலரும் தினமொரு விடியலில் நான் தவிக்கிறேன்-தொலைகிறேன்.எல்லாம் எத்தனை விடிவுகளில் கருக் குலையும் செயல்வினைமிக்க ஊக்கத்தோடு என்னைவிட்டபாடில்லாது வந்து குந்திக்கொள்ளும் குந்துக்கட்டாய் எனது அகம். எனக்கிருப்பது காலம் ஒன்றுதாம்.தனிமைப்படுத்தப்பட்ட மனிதன்! ஒருவிடியலில் தனது முழு எழுத்தையும் நெருப்பிட்டுக்கொளுத்திய கிட்லரது அடாவடித்தனத்துள...

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும்.

ஜப்பான்:அணு ஆலை அனர்த்தமும்,கையறு நிலையும். -சில குறிப்புகள். பூ க்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை! அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து இன்றைய ஜப்பானது அழிவுகனை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தரும் விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால். ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் இன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசுகின்றன.மிக முன்னேறிய தேசமா...

உரையூக்கம்

யு த்தத்தின் வாயிலாக வந்தடைந்த-அடையும் எந்தப் பெறுமானமும் எல்லாவகைப் புரிதற்ப்பாட்டுக்கும் இடையில் சிக்குண்டுபோன எவரையும் இதுவரை காத்துக்கொள்ளவில்லை!எனக்காகவன்றி எமக்கான"விடுதலை"என்று அறைகூவிச் செத்தவர்கள் செத்தவர்களே.செருக்கும்,தார்ப்பாரும், உள் நோக்கமும் கொண்ட பொருள்சார் உலகத்துள் ஏதோவொரு புலப்பாடு பல புள்ளிகளை அழித்தே இயக்குமுறுகிறது.இது சொல்வதற்கும்,உரையாடலுக்கும் அப்பாலுள்ள இயக்கத்துள் மலினப்படுத்தும் சுதந்திரமென்பது அர்த்தமிழந்த மனித இருத்தலுக்கொப்பானது.புரட்சிப்பயனெனப் பகரப்படும் எல்லா நியாவாதமும் நிறுவனப்பட்டியங்கும் மூலதன வியூகத்துக்கு முட்டுக்கொடுத்தவை என்பதில் எனக்கான தெரிவு மேலுஞ் சிலவற்றை நோக்கியதானது. அ: பௌதிகவுலகமும்,உணர் அறிபுலமும் ஆ: புறவுலகப் பருப்பொருளும் ,அந்நியப்பாடும் இ: இடையுறாத காலக் குறுக்கமும்,நித்தியமும் என்னை அச்சத்துக்குள்ளாக்குபவை. என்னைக் காலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட கையோடு, குறுகக்கப்படும் வெளியில் மதில்கள் எழும்புகின்றன.எனது கால்களுக்குக் கீழே வளைந்து நெளியும் காலம் இடமின்றித் தவித்தோட முனைகிறது.பௌதிவுலகத்திலிருந்து தனித்துவமான மொழிவுகள...

அன்பன் சோபாசக்தி

ஷோபா சக்தி: பாலியில் நிந்தனைச் சொல்லைலையே அநுமதியான்-செயலை அல்ல! "உஙகளுடைய பின்னூட்டத்தை மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பெயரின் பின்னூட்டுகளை நான் மட்டுறுத்தியுள்ளேன். வெறும் வசைகளை நான் பின்னூட்டமாகக் கருதுவதில்லை. சற்று முன்கூட எனது 15 வருடகால நண்...பர் சிறீரங்கன் அண்ணன் பாலியல் நிந்தனைச் சொல் ஒன்றுடன் எனது முகப் புத்தகத்தில் ஒரு பின்னூட்டமிட்டார். பின்னூட்டத்தை மட்டுமல்ல அவரையும் முகப்புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டேன். அவர் தனது ஆணாதிக்க வசைகளை எழுதுவதற்கு எனது முகப்புத்தகம் இடம் கொடுக்காது. அதுவே உங்களுக்கும்" - சோபாசக்தி மேலேயுள்ள பின்னூட்டை அன்பன் சோபாசக்தி எழுதியுள்ளான்.ரொம்பவும்"நேர்மையான"ஜனநாயகவாதி அவர்,"பாலியல் நிந்தனைச் சொல்லை-ஆணாதிக்க வசைவுகளை" அவர் ஒருபோதும் தனது முகப் புத்தகத்தில் அனுமதிக்கமாட்டாராம்! ஏனெனில், அவை பெண்ணொடுக்குமுறையின் வடிவங்கள்,பண்டுதொட்டுப் பெண்ணைப் பாலியற் சுரண்டலுக்கும்,அவமதிப்பும்,அடக்குதலுக்கும் உட்படுத்தும் இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் சொற்கள்-கருத்தியற் பலாத்தகாரம் அவை!வார்த்தைகளுக்குள் கண்டுண்டிருக்கும் இத்தகைய சமூகவொடு...

இன்ஷா அல்லா !

"அடடா புரட்சி அடை மழைடா, அது அரபுப் புரட்சி அடை மழைடா!" எகிப்த்திய,துனேசியப் போராட்டங்களும் தொடரப் போகும் அரபு உலக"எழிச்சிகளும்"புதிய வகைமாதிரியான ஆயுதம்.இது,அணுக்குண்டைவிட அதிக சக்தியானது.இந்த ஆயுதம் இப்போதும்,மேற்குலக ஆதிக்கத்தாலேயேதாம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன் பாட்டுக்கு வந்திருக்கிறது. இந்தப் பயன்பாடும் அவர்களது நலன்களைக் காப்பதற்காகவே பயன்படுகிறது.எகிப்த்திய அதிபர்,எங்கேயும் ஓடித் "தப்பி"விடவும் இல்லை.எகிப்த்திலேயே சிறிய குட்டித் தேசமாக-அரசாக நிலவும் எகிப்திய உல்லாச-டிப்பிளோமற்றிக் நகரமான [ Diplomatic City _ Trade] சாமல் சைக்கில் [ Scharm El-Scheich ]மிகப் பாதுகாப்பாக முபராக் இருக்கிறார்.எகித்தியர்களோ,அல்லது எந்த அரபியர்களோ அங்கு செல்வதற்கு தகுந்த விசாவிருந்தாலும் முடியாத காரியம்.ஆனால்,நாம் விடுமுறைக்குப் போய்வரலாம்.இத்தகைய எகிப்த்தில் மக்கள் ஆரவாரம் முபராக்கைச் சுற்றிய எதிர்ப்பில் அவரது இராஜினாமா "மக்கள்"புரட்சியென வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் அதிபர்கள்,தலைவர்கள் தாம் பிழையானவர்கள்.நிலவும் அமைப்பு அல்ல என்பதையும் சொல்லியபடி, ஒரே கல்லி...

சுய மாட்சிப் போ(க்)கி(ரி)த் தனம்:

சி லவுதிர்வுகளும்-துளிர்த்தல்களும் எப்போதும் போலவே நடந்தவைகள்தாமெனும் புரிதலுக்கு அவை சார்பு நிலைக்கப்பால் உண்மையென்பதை, உறுதிப்படுத்த"நான்"இருத்தல் அவசியமென்பதில் "மாயமானும்-வனவாழ்வும்"வாய்க்கப் பெற்றவர்கள் நாம்.வெறுப்பேற்றும் பொழுதொன்றின் பின்னையவுணர்வில் வானம் நோக்கிய "கேள்விகளை"கொட்டி வைக்க இன்றைய மனிதர்களுக்கு அவகாசம் இருக்குமென எனக்குத் தோன்றவில்லை! அழுகின்ற பிள்ளையைச் சகிக்க முடியாத மனவூழ் தொடர்ந்து தன் அழுகைமீதான நியாயவாதத்தை அடுக்கி வைக்கவே போராடிக்கொள்கிறது.நெருக்கடிமிக்க சந்தர்ப்பங்களை உருவாக்கி வைத்த தடங்களைத் தொடர்வதில்எவருக்கு வேணும் இன்னொரு "இழவு-இழப்பு"க் கோலம்? அதீத தொழில் வளர்ச்சிக்குப் பின்னான காலத்துள் உருவகப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் மறுவினையான பின் காலனிய-மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க, அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து, அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்னுமின்னும் அதிகமாகிறது.தன்...

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி

விருப்ப எந்திரங்கள் – விருப்ப உற்பத்தி : ஒரு நோயாளியது குறிப்பை "இங்ஙனம் " புரட்டிப் புரிதலுக்கு நகர்த்துவது , திருட்டுத் தனமானது. த மிழ்ச் சூழலில்வேற்று மொழியிலிருந்து எதை எடுத்து,எவர் போட்டாலும்,அது மனிதவாழ்வில் கருத்தியல்சார் நிலைக்குமேற்றாண்டி,மனித அகவயங்களை ஜந்திரமாக்குவதாகினும்,அதன் தெரிவில் அனைத்தையுமே பொருள் நிலைக்குக் கீழ்க் குறுக்குவதில் சிந்தனைத்"தெளிவு"பெற்றதெனப் படியெடுக்க, நமக்குள் பலர் இருக்கின்றனர்.அவர்களின் , ஏதோவொரு புரிதல்"விருப்பு ஜந்திரங்கள் விருப்ப உற்பத்தி"என டெலோய்ஸ்-பேலேக்ஸ் குவற்ராறி [Gilles Deleuze and Félix Guattari ]எழுதியதன் தமிழ் மொழிப் பெயர்ப்பை நிஜந்தன் தனது தளத்தில் இட்டதும், ஒரு பெருவாரியான புரிதலின் வினை அதைக்கொண்ட பயனென... சரி.நாம் பார்ப்போம்,[ கட்டுரையது ]இலக்கும்,உள்ளடக்கமும் எந்தத் தளத்திலிருந்து முழுமொத்த மக்கட் பிரிவுக்கும் எட்டுவதென. ஜேர்மனிய செனற் அதிகாரியும்,நீதிபதியுமான டானில் பவுல்ஸ்றேபர் [Dr. jur. Daniel Paul Schreber, Senatspräsident beim Kgl. Oberlandesgericht Dresden a. D.]உடைய கருத்தில...

"இடது-வலது" கடந்து...

இ ன்று,இலங்கைத் தீவில் வாழும்தமிழ்பேசும்மக்களோ தம்மீது சிங்கள இனவாத அரசுகள் கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பை-சிங்கள மயப்படுத்தும் அரசியல் நகர்வையெல்லாம்மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது, அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள். "மீண்டுமொரு உழவர் திருநாள் வந்து பொங்கிச் செல்கிறது.யுத்த வடூ மிகவிரைவாக மனதிலிருந்து விலத்திவிடினும் அந்தப் பயங்கரமான சிங்கள அரசினது இனவழிப்பு யுத்தம் தமிழ்ர்களது பூமி மீது நிகழ்த்திய வரலாற்று அழிவை தமிழர்கள்தம்பூமியின்மடி மறந்துதாம் போகும்?அழிந்த பனைகள்-அறுந்த சுற்றம்,பிரிந்த மண்,விட்டுத் தொலைத்த கிராமம்,குடியிழந்து குட்டிச் சுவராகப்போன கிராமங்கள் தினமும் இந்த அழிவு யுத்தத்தைச் சபித்திருக்கப் பொங்கலுக்கான வெடிகள்,தமிழ்ப் பிரதேசமெங்கும்சிங்கள அரசினது குண்டொலிகளாக ஞாபகத்தைக் கூட்டிவருகிறதா?-கூட்டிவரவேண்டும்,அதுதாம் உண்மையாகவும் வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்தும். எம்மீது நடாத்தப்பட்ட அழிவை நாம் மறக்கத்தாம் முடியுமா?வயிற...