Skip to main content

Posts

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!

அமெரிக்கா:தனக்குத்தானே பரிசளிக்கும் பாசிசம்!   2009 -இவ்வருடத்துக்கான, சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிர் பெயரில் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்தகைய விருதினது வழி புரிய முற்படும் ஒவ்வொரும் ஏதோவொரு வகையில் தத்தமது புரிதலைக் கொண்டிருக்க முடியும்.என்றபோதும்,உலக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம்,அதன் எதிர்கால அரசியல் நகர்வுக்குத் திட்டமிடப்பட்ட எதிர்பார்ப்பும் அதுசார்ந்த வியூகம் இருக்கிறது.இந்த வியூகம்சார்ந்த நிலைப்பாடுகளுக்கமையவே ஓபாமாவென்ற குறியீடு சமாதானத்துக்கான நோபல்பரிசைப் பெறும் தகுதியாக்கப்பட்டுள்ளது.இந்தக் குறியீடு குறித்துப் பல வகைகளில் புரிந்துகொண்டாக வேண்டும்.   அ):ஓபாமா, அமெரிக்காவினது மாறிவரும் உலக அரசியலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம்,   ஆ):ஒபாமா,நடுநிலையானதும்,சமாதானத்துக்குமானதும் என்பதான புனைவு,   இ):ஒபாமா,மக்கள் நல்வாழ்வு மற்றும் மனிதவுயிர்வாழ்வுப் பாதுகாப்பு எனும் சுட்டல்     இந்த மூன்றுவகைக் குறிப்பானக இன்றைய அமெரிக்க ஜனாதிபதி உருவாக்கப்பட்டுள்ளார்.குறி குறிப்பானகச் செயற்பட வைக்கின்றபோது அதன் தேவையையொட்டி எழுப்பப்படும் சகலதும் ஏதோவொரு நலனுக்கு இசைவானது.     அந்த நலன...

இந்தப்பரிசு இலக்கியக் கொலையாகும்.

நோபல் பரிசு இலக்கியத்துக்கு?   "கம்யூனிசத்தின் பிழையான பக்கத்தை" ஆகக்குறைதளவுக்கு இல்லாது ஆக்கியவர் இந்தக் கேர்த்தா முல்லரெனப் புகழ்ந்து பாடுகிறது பத்திரிகைகள்.   இ ன்று ஜேர்மனியில், "இலக்கியத்துக்கான நோபல் பரிசு" கிடைக்கப்பெற்ற கேர்த்தா முல்லருக்குத்(Herta Müller) தடாலடியான கட்டுரைகள் மற்றும் இலக்கியப் பிரமுகர்களதும்,அரச அதிபர் அங்கேலா மேர்க்கலதும் பாராட்டுக்கள் தொடர்ந்தவண்ணமுள்ளது-இவை,சிலவேளை விண்ணை எட்டினாலும் எட்டும்.     அப்படி என்னதாம் இந்தக் கேர்த்தா முல்லர் எழுதித்தள்ளியுள்ளார்?   இவரது எழுத்துக்கள் எத்தகைய இலக்கியத் தரமுள்ளதோ இல்லையோ, அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்ததான செய்தியில், பெரும் பத்திரிகைகள் அவரது கடந்தகால மேற்குலகச் சேவகத்தை நன்றி பகிர்ந்தே பாராட்டுக்களாகக் கட்டுரைகள் எழுதுகின்றன.     செவ்செஸ்கோவினது(Ceausescu-Regimes) இருமேனியாவில் வாழ்ந்த கேர்த்தாவுக்கு, கம்யூனிசக் கொடுமை சகிக்கவில்லையாம்.செவ்செஸ்கோ கம்யூனிசத்தின்வழி பரப்பப்பட்ட பரப்புரைகளது எதார்த்தம் ஐரோப்பாவின் சதிகளோடு நிரம்பியிருந்த அன்றைய காலத்தில், இத்தகைய கேர்த்தா முல்லர்கள...

வெந்து மண்ணாகினாலென்ன?

சிந்தனை மையமே சிறந்ததென...     ஒ வ்வொரு காலக்கட்டத்திலும் ஏதாவதொரு தேவைக்கேற்றவாறு மானுடத் தரிசனங்கள் எழுகின்றன.அங்கே தம்பட்டம் அடித்து இதுதான் "உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.இது நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்."ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அஃது, எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைத்தொடுகிறது.   இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.   அஃது, என்னையும் மற்றைய மனிதர்களையும் இணைத்துப் பொதுமைப்படுத்திப் பிணைக்கிறது.இஃது, எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது, பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில், புதியதைத் தோற்றுவிக்கிறது.எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு இதுவே!     இந்தவுலகு குறித்துப் பேசுவதற்கு எனக்கெதற்குக் கூச்சம்?   எப்போதும் போலவே வானத்து விண்மீன்கள் பொருதுகின்றன, தகர்கின்றன-பிறக்கின்றன.இன...

சின்னமடுமாதக் குருசு மரத்தடியிலென்றால்...

சின்னமடு மாதா:     அகமும்,புறமுமிழந்த ஒரு பொழுதில்,மெய்மையும் புனைவும் இருத்தலை நோக்கி கை அசைக்க...       "மெல்லப் பாடும் தென்றலும் மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும் மெட்டு விரிக்கும் முல்லையும் மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள் கண்ணைத் திறந்து வைத்துக் கப்பல் கட்டும் தம்பியும் கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும் அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"     அ து ஒருகாலம்.மழைக்காலத்து வாழ்வு.இளமை முழுதுமாகச் சின்னமடுமாதாவின் வளவுக்குள்ளே அலைந்த வாழ்வு-மகிழ்வும்,கனவும் பொலிந்து உருவாகிய எமக்குள், தொடர்ந்து அலையலையாக எழுந்த எண்ணங்களுக்கு உருப்போட்ட சின்னமடுமாதாவின் குருசுமரத்தடி.இஃது, என்றுமே என்னை உருவாக்கியதில் தன்னை எனக்குள் பெருமைப்படுத்தும் மரத்தடி.     எமது வாழ்வும்-சாவும்,காலமெல்லாம் அங்கே இருப்பதற்கானதாகவே நானும், எனது நண்பன் சிவாவும் கனவு கண்டுகிடந்த இந்தச் சின்னமடுமாதா கோவில் எங்களுக்கான சரணாலயம்.எப்பவெல்லாம் எமக்கு வெளியில் உலாவவேண்டுமோ, அப்போதெல்லாம் சின்னமடுமாதாவின் படிக்கட்டுகளில் தஞ்சமடைவோம்.எனக்கான நாணயமான கடவுளாக மாதா இருந்திருக்...

தமிழ் "மார்க்சிய" நண்பர்கள்...

இலங்கையின் இரண்டாவது சுனாமி.   கிட்டத்தட்ட இது சுனாமி அழிவைவிட மிகமோசமான அழிவைத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தியது.அதன் கோராத்தாண்டவத்தின் அதிர்வு வன்னியில் தடுப்பு முகாங்களாக விரிந்துகொண்டது.அதிர்ச்சியான யுத்த அழிவுகள் திட்டமிடப்பட்ட பொருளாதாரஞ்சார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்கு அவசியமாக இலங்கை அரசினது அந்நியப் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்டபின் வன்னி மண்ணில் நிகழும் அரசிலானது மிகவும் கெடுதியானது.இது,மாறிவரும் உலகப் பொருளாதார இலக்குகளால் பந்தாடப்பட்ட வரலாற்றை எமக்கு விட்டுச் சென்ற புலிகளது "தமிமீழ"ப் போராட்டமாக எம் முன் நிற்கிறது.ஆனால், இதற்குள் பல உள்நோக்கங்கள் நிலவுகிறது.குறிப்பாக அந்நியத் தேசங்களதும்,தென்னாசியப்பிராந்தியத்தின் அரசியல் எதிர்காலமும் அதுசார்ந்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் இவற்றுக்குள் புதைந்துபோய்க் கிடக்கிறது.   கடந்தகாலத்தில் இலங்கையில் ஜே.வி.பி.யை இரண்டு முறைகள் அழித்த இலங்கை அரசும் அதன் அந்நிய எஜமானர்களும் நிச்சியம் இன்னொரு படுகொலைக் களத்தை இந்தத்"தமிழீழ"போராட்டத்துக்குச் செய்யத் துணியுமென்பதை நாம் ஏலவேஅறிந்தேயிருந்தோம்.இது, குறித்...

மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்...

வாடாத இரோஜாவும், வரண்ட தரையும்.     (பகுதி:1)   மண்ணோடு பொருத்த முனையும் பயணத்தில்...     வா சிப்பதற்கான சூழல் வலுவற்ற பொழுதகளாகவும்,வாழ்வதற்கான முனைப்பில் உழைப்பில் உயிர்வாழும் இந்தப் பொழுதுவரையும் ஒரு நூலை முழுமையாக வாசித்துவிடுவதில் பல சிக்கல்கள்.நேரம் குறித்தான முடக்கத்திலும் வாசிப்பதற்கான அக மகிழ்வைத் தரத்தக்கத்தான புனைகதைகளை நாம் ஏலவே அறிந்தோம்.அந்த மகிழ்வும் எமக்கானதாகக் கட்டப்பட்ட அதிகாரங்களது திணிப்பென்பதும் இதன்வழி புரிந்துகொள்ளவும் முடிந்தது.அறிதல்,எனது விலங்கை எனக்கே காட்டி,உடைப்பதற்கானவொரு திசையைச் சொல்ல மேலும் அறிய வைக்கிறது.இது,வாசிப்பால் மட்டுமே நடைபெறுகிறதெனினும் எமது அனுபவப்பட்ட வாழ்வு எம்மைக்கடந்து செல்லும்போது அதை மீளவும் வழிமுன்னே நடாத்திக்காட்டுவதில் படைப்பிலக்கியம் மனித வாழ்வாழ்வின் இரண்டாவது இயற்கை என்பது உண்மையாகிறது.     அறிதலிற்றாம் அனைத்தும் வெற்றிகொள்ளப்பட்டன.இயக்கத்தையும் அதன்வழி மாறுவதையும் அறிவதே இயற்கையை வெற்றிகொண்ட அனுபவம்-கல்வி!     இந்த நோக்கத்தில் இன்னொரு குறுநாவற்றொகுப்பை(பசுந்தீவுக் கோவிந்தனது"வாடாத றோசா"குறு நாவற்றொகுப்பு) உள் வாங்கிக்க...

புலம்பெயர் வாழிலங்கையர்கள் சந்திப்பு

"இலங்கையர்கள்"     " ஈ ழப்போருக்கு"பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,"நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.   "புலம்பெயர்வாழிலங்கையர்கள்"சந்திப்பு:   அன்று, காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது.இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உ...

கலையரசன்:ஈழநானூறும்,புலப்பெயர்வு படலமும்.

அபத்தமும்,அறிவியல் அவலமும் ஒன்றான தெரிவில் தமிழ்ச் சமூகத்தின் தலைவிதி!       கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது ,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.     இது தமிழ் பேசும் மக்களது வரலாறு.   புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது.     இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது.     மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான க...

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்...

புலியழிப்புக்குப் பின் இலங்கையில்...     த மிழ் பேசும் மக்களது வரலாற்று மண்ணான வடக்கு- கிழக்கு மாகணங்களை கூறு போட்டுத் தமிழர்களைப் பிரித்தெடுத்துத் தனது நோக்கத்தை நிறைவுப்படுத்துவதற்காகவே செல்வநாயகத்தின் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஓட்டுக்கட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிதியளித்துக்காத்து வந்தது.இத்தகைய கட்சியின் செயற்பாடு இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடு எந்தப் பொழுதிலும் தீர்ந்துவிடக்கூடாதென்பதில் அன்று மிகக் கவனமாகச் செயற்பட்டது.அதன் பாரம்பரியக் காட்டிக் கொடுத்தல்,குழிப்பறிப்புகளின் நீட்சி இன்றைய புலிப்போராட்டமாக நீண்டு மக்களைக்ப் பிளந்து கொன்றபின்,புலிகளை அழித்துக் கருணா-டக்ளஸ்,பிள்ளையான் என மேலும் விரிகிறது.     அன்று, இத்தகைய தமிழர் தலைமைகள் சிங்களக் கட்சிகளோடு செய்த ஒப்பந்தங்கள் முரண்பாடுகள் பின்பு அதையே சாட்டுவைத்து அவற்றைச் செயற்படுத்த முடியாத இனவாதச் செயற்பாடுகள்,மற்றும் தமிழ் பேசும் மக்களுக்குள் மிகக் கேவலமாகப் பிரதேசவாத ஒடுக்குமுறை,சாதிய மற்றும் பெண்ணடிமைத்தனத்தையும் மிக நேர்த்தியாக ஊன்றியபடி அந்நியர்களின் கட்டளைகளையேற்று நம்மைக் கழுத்தறுத்த வரலாறு உண்மைய...