மார்க்ஸிய இயங்கியலின் வழி நின்று... Techno-Feudalism ! —சிறு, குறிப்பு —ப.வி.ஶ்ரீரங்கன் கீழக்கு -மேற்குலகத் தத்துவச் சிந்தனைகளின் எனது ஆர்வத்துக்குட்பட்ட அநுபவத்தின் மீதான கற்கைக்குப்பின் மிகத் தெளிவாகக் குறிப்பிடுவேன் ஷோபென்ஹாவர், நீட்சே, ஃபூக்கோ, காம்யு ஆகிய நால்வரும் மனித சிந்தனையை அதன் புறநிலை வாழ்நிலையிலிருந்து (Objective Reality) பிரித்துவிட்டுக் குழப்புகிறார்கள்: ஷோபென்ஹாவர் உலகை 'மாயை' என்கிறார். நீட்சே உலகை 'அதிகாரப் பேராசை' என்கிறார். ஃபூக்கோ உலகை 'அதிகாரப் புனைவு' என்கிறார். காம்யு உலகை 'அபத்தம்' என்கிறார். ஆனால், கார்ல் மார்க்ஸின் இயங்கியல் பொருள்முதல்வாதம் (Dialectical Materialism) மட்டுமே, "மனித சிந்தனை என்பது புற உலகப் பொருள்களின், மனித உழைப்பினதும், உற்பத்தி உறவுகளினதும் பிரதிபலிப்பு" என்பதை நிரூபிக்கிறது. மனிதன் இயற்கையை மாற்றி அமைக்கும்போது, அவனது சிந்தனையும் மாறுகிறது. இன்றைய டிஜிட்டல், பின்நவீனத்துவச் சூழலையும் கூட நாம் வர்க்க அரசியல் மற்றும் , ...
சிங்கள அரசு-புலிப் பாசிசம் குறித்த எதிர்க் கருத்தாடல்: அரசியல்/வரலாறு&இலக்கியம்/பொருளாதாரம்