Skip to main content

மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை .

 // இடாய்ச்சு மொழியின் மொழிபெயர்ப்பை கூகுள் இவ்வாறு தருகின்றது ஆங்கிலத்தில் (தமிழில் நேர் எதிர்மறையாகவும் தவறாகவும் தருகின்றது!!!)


அரங்கனார் சொன்ன மேற்கோள்

Die Welt ist viel zu gefährlich, um darin zu leben – nicht wegen der Menschen, die Böses tun, sondern wegen der Menschen, die daneben stehen und sie gewähren lassen


The world is far too dangerous to live in - not because of the people who do evil, but because of the people who stand by and let them 


அரங்கனாரின் மொழிபெயர்ப்பு:

 “ இவ்வுலகானது வாழவே முடியாத அதிபயங்கரமானது . இந்நிலை தீயவர்களாலோ அன்றி, ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல . மாறாக , இத்தகைய கொடியவர்களுக்கு உடந்தையாக இருந்தபடி அவர்களின் அட்டகாசத்தை அநுமதித்து , அங்கீகரித்துவிடுபவர்களாலேயே இவ்வுலகம் ஆபத்தானதாகின்றது “. -


இவ்வுலகானது வாழவே முடியாத அளவுக்கு பேரளவும் தீயது (ஆபத்தானது, viel zu gefährlich). இந்நிலை தீயது செய்பவர்களால்  (ஏற்படுவது) அல்ல ( nicht wegen der Menschen, die Böses tun), மாறாக தீயவை செய்பவர்களுக்கு துணையாக உடன் நிற்பவர்களாலும் (sondern wegen der Menschen, die daneben stehen ) அவர்கள் (தீயவர்கள்) தீமைகள் செய்ய விடுவதாலுமே.


(அரங்கனார் Sri Rangan Vijayaratnam மிகச்சிறந்த இடாய்ச்சு மொழியறிஞர். நானோ வெறும் கற்றுக்குட்டி. ஆனால் அவருடைய மொழிபெயர்ப்பில்  " ஆத்திரக்கார முரடர்களாலோ ஏற்பட்டது அல்ல" என்னும் கூற்று எங்கு வருகின்றது என்று தெரியவில்லை. மேலும் 

 sie gewähren lassen என்பது தீயதைச் செய்ய விடுதல்  (தடுக்காமல், வாளவிருந்து செய்ய விடுதல்) என்றுதானே பொருள் தரும் அல்லவா? அரங்கனாரை விலக்கம் தர வேண்டுகின்றேன்)//  — பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் 


=============


செல்வா , தங்கள் கருத்துக் நன்றி . தமிழ் இலக்கிய உலகினுள் “இலக்கியம் சார்ந்து சிறந்த மொழிபெயர்ப்பை முன்வைத்த “  பேராசானின் தளத்தில் (முகநூல் முற்றத்துள் ) நான்  , மொழி பெயர்ப்புச் சார்ந்து உரையாடுவதில் பெரு மகிழ்வுடன் பங்கெடுக்கிறேன் . 


செல்வா , நான் இடொச்சு மொழியில் பாண்டீத்தியம் பெற்றவன் அல்ல . அப்படி , உருவாக முடியாது . டொச்சு மொழியில் சிறப்பாக எழுந்த கோத்தே கூடத் தன்னை ஒருபோதும் டொச்சு மொழி பாண்டிதர் என்று கூறார் . 


என்வரை , இம் மொழியை ஓரளவு புரியவும் , எழுதவும் , வாசிக்கவும் தெரியும் . என்றபோதும் , என் புரிதல் டொச்சு மொழியில் பயன்படும் காலம் ; இடம் , பொருள், நிலவிய சமூகச் சூழல் , பண்பாடு , அரசியல் , சமூக நிலவரங்களை அறிந்தே ஒரு சொல்லை மொழியாக்கஞ் செய்வேன் . 


ஐயனே , தங்கள் கேள்விகள் , மொழியர்பு வாக்கியங்கள் அனைத்தும் சரியானது . ஆனால், நேரடி மொழி பெயர்பு எனக்கு உகந்தது அல்ல . நான் , மொழியாக்கஞ் செய்பவன் . இது , டொச்சுச் சூழலைத் தமிழிற் சொல்லும் கரிசனையுடையது. 


மொழி பெயர்ப்பு என்பதே அரைக் கொலை . அதிலும் , டொச்சு மொழியை -வாக்கியத்தை நேரடியாக மொழிபெயர்த்தால் இது, முழுக் கொலையாகிவிடும் . 


உதாரணம் : “Regenschirm “ இதை நேரடியாக மொழி பெயர்த்தால் “மழைக் குடை “ தமிழில் அங்ஙனம் உரைக்க முடியாது . எனவே , தமிழுக்குக் குடை , வெய்யிலிலும் , மழையிலும் பிடிக்கும் ஒரு பொருள் . எனவே , மழையை விட்டுக் குடை என்பதே சரி . மேற்குலகில் அது மழைக்கு மட்டும் பிடிக்கும் Regenschirm ! 


கூடவே , டொச்சு மொழியை பல்வேறு காலக் கட்டங்களில் அதிகாரம் துஷ்பிரயோகஞ் செய்துள்ளது . இது , நேரடியான வார்த்தைகளுக்குள் உள் அர்த்தம் மறைமுகமான எதிர்மறை (Schwarze Rhetorik ) கொண்ட தாக்கத்தைக் குறித்து நிற்பவை . நாசிய காலத்துள் 1920-1945  மூன்றாம் பொற்காலம்(Drittes Reich) என்று வரையறுப்பார்கள் . இக்காலத்துள் டொச்சு மொழியில் அடைப்படை அர்த்த வேறு பாடுகள் திணிக்கப்பட்டன . இது குறித்து „Sprachwandel im Dritten Reich „(Von Seidel, Eugen und Seidel-Slotty, Ingeborg) என்று ஆய்வு நூலே 1961’ஆம் ஆண்டு வெளி வந்தது . 


இங்கு , பாசிசவாதிகள் மொழியை எங்ஙனம் தூஷ்பிரயோகஞ் செய்தார்கள் என்று புரிய சில சொற்களைத் தருகிறேன் :


Schwarze Rhetorik  im Dritten Reich: 


„ Jedem das Seine“ —„Arbeit macht frei“

இதை நேரடியாக மொழி பெயர்ப்பவருக்கு வராலாறு புரியாது போனால் பூர்வீகக் கீரேக்க தத்துவார்த்தக் கருத்தாக அதை “ ஒவ்வொன்றும் அவரவருக்குரியது , வேலை ஒருவரைச்  சுதந்திரமாக்கும் “ என்று மொழி பெயர்ப்போம் . ஆனால் , இவ் வார்த்தைகள் டொச்சு மொழிக்குள் , அவர்களது வரலாற்றில் “ யூதர்களிடம் உள்ள சொத்தைப் பறித்து , அவர்களுக்குக் கடூழியம் கொடுத்துக் கொல் ( Vernichtung durch Arbeit) “ என்பதாகும் . Arbeit macht frei என்பது நாசிகளின் மொழியில் “ கூலியின்றி ,?உணவின்றி உன்னால் உடல் உழைப்பை எங்களுக்குத் தரும் வரை நீ, உயிரோடிருப்பாய்” என்பதே பொருள் . 


இது , மொழியைத் துஷ்பிரயோகஞ் செய்யும் கருப்பு சொல்லாட்சி ! 


அடுத்து , டொச்சு மொழியிலுள்ள “ஐன்ஸ்ரைன் கருத்து” எப்போது , யாருக்காக சொல்லப்பட்டது ?; எந்தச் சூழ்நிலையில் இக் கருத்தை ஐன்ஸ்ரைன் உபயோகப்படுத்தினார் ? இக் கேள்விக்கு விடை தேடாமல் நேரடி மொழிமாற்று சரியாகாது . 


1953’ஆம் ஆண்டு இஸ்பானிய இசைமேதை பவ் காசல் (Pau Casals) அவர்களைக் கொளரவிக்கும் விளா பிரான்சில் நடந்தபோது ஜன்ஸ்ரைன் எழுதிய குறிப்பில் இந்த வாசகத்தை எழுதுகிறார் . காரணம் : Pau Casals  அவர்கள் இசுப்பானியச் இராணுவச் சர்வதிகாரி பிரங்கோ(Franco) எதிர்த்தும் , 1933’ஆம் ஆண்டு கிட்லரின் அழைப்பை ஏற்க மறுத்தும் பாசிசத்துக்கு எதிராகப் போராடினார் Pau Casals  அவர்கள் . 


அதற்காக , கொளரவப்படுத்த ஐன்ஸ்ரைன் கீழ்வரும்படி எழுதுகிறார் : “Pablo Casals hat klar erkannt, dass die Welt mehr bedroht ist durch die, welche das Übel dulden oder ihm Vorschub leisten, als durch die Übeltäter selbst."
Albert Einstein


இதன் பொருள் : “ பாப்லோ காசல் அவர்கள்,  “இவ்வுலகினுள் தீமை செய்பவர்களை விட தீமையை பொறுத்துக்கொள்ளும் அல்லது ஊக்குவிப்பவர்களால் உலகம் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை தெளிவாக உணர்ந்தார்” . இதுதாம் , ஐன்ஸ்ரைன் குறித்த சரியான இடஞ் சூழலுட் சொன்ன கருத்து . இது குறித்துப் பல நூறு விளக்கங்கள் வெளியாகிவிட்டென! செருமானியாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பொழிப்புகள் வெளியிடப்பட்டன . 


அடுத்து > gewähren< என்ற சொல்லுக்குப் பல்வேறு அர்த்தம் . இடம் , சூழல் , காலம் இவற்றைக் கணக்கெடுத்தால் எதையாவது தேரடியாகப் போட்டு நிரப்ப முடியாது . ஆக, 

[1] ஒருவருக்கு விரும்பிய ஒன்றைச் செய்ய அநுமதி வழங்குதல். [2] யாரோ ஒருவருக்கு ஏதாவது தயார் செய்ய ஒப்புதல் வழங்கல் (கண்டும் காணாமலும்-வாளதிருத்தல்) இத்தோடு ஒத்த சொற்கள்: அனுமதி, கொடு, வழங்கு, ஒப்புக்கொள், ஏற்றுக்கொள்.நான் , என் மொழியாக்கத்துள் அநுமதி என்கிறேன் . 


இங்கு , ஆத்திரக்காரர் ; முரடர்கள் என்று நான் சுட்டியது >பொதுப்புத்தி தீயவர்கள்< என்பதை அமைப்பின் அதிகார வர்க்கத்தைத் தமிழில் சுட்டவே . நாம் , மரபு ரீதியாகத் தீயவர்கள் /சண்டாளர்கள் என்பது தனிநபர் நடாத்தையாகப் பார்ப்பதால் அங்ஙனஞ் சுட்டுவது தமிழ்ச் சூழலுக்காக ! 


கடந்த 40!ஆண்டுகளான ஈழப்போராட்டத்துள் பு~லி~ கள் எங்ஙனம் தமிழ் மொழியைத் துஷ்ப்பிரயோகஞ் செய்தார்கள் என்றும் நோக்கினால் இந்தப் பாசிச மொழியைப் புரியலாம் .


ஈழத்தில் “கரும்புலி ; தற்கொடையாளி “ என்பதை பிறமொழியுள் சொல்லும் போது “குண்டுதாரி, மனித வெடிகுண்டு “ என்றுதாம் மொழியாக்கஞ் செய்ய வேண்டும் . 


ஈழத்தில் அடிக்கடி தாயிடம் பிள்ளைகள் சொல்லும் செய்தி ஒன்று கீழ் வரும்படி : 


“ அந்த மாமா , கடையில் நின்றபடி எனக்குத் தன் சாமானைத் துக்கிக் காட்டினார் “ என்று சிறுமிகள் சொல்வார்கள் . இங்கு , சாமான் என்பது கடையிலுள்ள பொருள் /பண்டம் அல்ல ! இதை நேரடியாக மொழி பெயர்த்தால் முழு அர்த்தமும் பாழ் ! 


—ப.வி.ஶ்ரீரங்கன்    11.02.24

Comments

Popular posts from this blog

என்னைத் தேடும் புலிகள்!

என்னைத் தேடும் புலிகள்! அன்பு வாசகர்களே,வணக்கம்!வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்? மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள்.என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை.சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன்.இது அவஸ்த்தை. புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை! சாவு எப்போது? இது இன்று நடக்கிறது.இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது.நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன். எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம். விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே! என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு? வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும்,மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி... ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன். என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம். எதுவானாலும் நடப்பது நடக்கட்டும். "Schweig...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து...

தமிழ்ச் செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து இளைஞர்கள் அல்ல ஈக்களே தோன்றும்! "மரணத்திற்குக் காத்திருக்கும் எந்தன் சொற்கள் உண்மையே வனத்தின் அழைப்பைத்தாண்டி எந்தன் மரணம் எட்டுமா? கொலைச் சூத்திரங்களை மட்டும் உனக்குக் கற்பித்தவர்களிடம் சொல் விண்டுரைக்க முடியா மரணத்தின் விலையை இனியும் தீர்மானிக்க வேண்டாம் என..." -அஸ்வகோஸ்.(வனத்தின் அழைப்பு,பக்கம்:64.) "கரும்புலிகள்- தமிழ்ச் செல்வன்கள் மரணத்திலும் மகிழ்வும், துக்கமும் புலிகளுக்குள்." இ ருபத்தியொரு போராளிகள் தம்மைத் தொலைத்துச் சில விமானங்களை அழித்தெரித்தபோது இனிப்பு வழங்கியும்,மகிழ்ந்தும் குதூகலித்த தமிழ்த் தேசிய மனதானது இன்று 02.11.2007 இல் அழுதுவடிகிறது.தமிழ்ச் செல்வன்"வீரச் சாவடைந்து"விட்டாராம்.இதன்பொருட்டு அழுது வடிகிறார்கள்.அன்று அநுராதபுரத் தாக்குதலை "வெற்றி"யாக முடிப்பதற்காகத் தம்மை இழந்து, கரும்புலிகள் செத்தேயாகவேண்டியிருந்தது.ஆனால்,இங்கே தமிழ்ச் செல்வன் வாழ்ந்தேயாக வேண்டும்!அவர்கள் செத்துத்தாம் மகிழ்வையும்,இவர்கள்(தமிழ்ச் செல்வன் வகையறாக்கள்) செத்துத்தாம் துக்கத்தையும் தமிழ்த் தேசிய மனதுக்கு ஏற்ப...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக...

சிவராம் கொலையை வெகுஜனப் போராட்டமாக்குக... இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது??? நமது விடுதலைக் கோசமானது சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும் இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்;த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளுது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படிய...